வாசி அறிந்தவன் பதிவை முதலில் படித்து பின் (லைக்) செய்து மறக்காமல்(ஷேர்) செய்து மற்றவர் பயனடைய உதவுங்கள் நன்றி
மனித மனம் மிகவும் விசித்திரமானது. அது அன்புக்கு வெகுவாக ஏங்கும். அந்த அன்பிற்கு அடிமையாகும் குணமுடையது மனித மனம். நீங்கள் நெருங்கி பழகாத ஒருவர் உங்களை திட்டினாலோ அல்லது உங்களுடன் சண்டையிட்டாலோ உங்கள் மனம் அவ்வளவாக வருந்தாது. ஆனால் அதே சமயம் நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் உங்களை திட்டி விட்டாலோ, சண்டை போட்டாலோ உங்களால் தாங்கவே முடியாது.
நீங்கள் மிகவும் நேசிப்பவர் உங்களைப் புறக்கணித்தால் உங்கள் மனம் படாத பாடு படும். அவர்கள் உங்கள் அன்பைப் புரிந்து கொள்ளாவிட்டால் வேதனை தானே? அவர்கள் உங்களை தம் வார்த்தைகளால் காயப்படுத்தினால் தாங்கவே முடியாதல்லவா?
நீங்கள் உயிருக்குயிராய் காதலிப்பவர் உங்கள் காதலை உணரா விட்டால், அல்லது ஏற்காவிட்டால் நரக வேதனையை நீங்கள் அனுபவிப்பீர்கள் அல்லவா?
அன்பில்லாத வாழ்க்கைத் துணை, குழந்தைகள், சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் நம் மனதை அதிக அளவில் காயப்படுத்துவார்கள்.
நீங்கள் மிகவும் நேசிப்பவர்கள் தான் உங்கள் மனதை அதிகமாக புண்படுத்துவார்கள். இதை ஒப்புக்கொள்கிறீர்களா?
No comments:
Post a Comment