செல்வ வளம் தரும் மந்திரங்கள்
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்
செல்வ வளம் பெருக ஸ்ரீலக்ஷ்மி மந்திரம்
மனித வாழ்கையின் முக்கிய தேவை பணம். “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது. நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கி கொள்ள சில மந்திரங்கள் உதவுகிறது. நல்ல உழைபிருந்தும் செல்வம் சேரவில்லை என்பர்களுக்கு இந்த மந்திரங்கள் சிறந்த பலனை தரும். அதிகாலை 5 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்மமுகுர்த்தம் என்பார்கள் மந்திர ஜபம் செய்ய இதுவே உகந்த காலம்.
மந்திரம்
‘ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’
பூஜை முறை
ஒரு வளர்பிறை வெள்ளிகிழமையன்று அதிகாலையில் குளித்து தூய ஆடை அணிந்து, மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு முகமாக அமர வேண்டும். அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, வடக்கு முகமாக மகாலட்சுமி படத்தை பொட்டிட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நெய்வேத்தியமாக கற்கண்டு பால் அல்லது பால் பாயசம் படைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, ஏலக்காய், தேங்காய், பழம், ஊதுவத்தி, ஆகியவற்றை ஒரு பித்தளை தட்டில் வைத்து தீபாராதனை செய்து பூஜையை தொடங்க வேண்டும். இந்த பூஜைக்கு குத்து விளக்கே உகந்தது, பசு நெய்யில் மட்டுமே விளகேற்ற வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை தினமும் தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். அல்லது ஒரு மண்டலம் 48 நாட்கள் ஜபம் செய்ய வேண்டும். வெள்ளிகிழமை தவிர மற்ற நாட்களில் லஷ்மி படம் வைக்க தேவையில்லை, அகல் விளக்கேற்றி மந்திர ஜபம் மட்டும் செய்தல் போதுமானது.