வாழ்வது என்பது ஒரு அற்புதமான கலை ஆகும். வாழும் கலையை அறிந்தவர் ஒரு சிலரே. எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கவே விரும்புகின்றனர். பணம் இருந்தால் எப்பொழுதும் இன்பமாக வாழலாம் என்று எல்லா மனிதர்களும் நினைக்கின்றனர். கடுமையாக உழைத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று பொதுவாக எல்லோரும் நம்புகிறார்கள். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் கடினமாக உழைப்பது மிகவும் முக்கியமா?
மேற்கத்திய சுய முன்னேற்றக் குருக்கள் எல்லோரும் பரிந்துரைக்கும் வாழ்வியல் பாடங்கள் என்ன தெரியுமா?வாழ்க்கையில் பெரிய, பெரிய இலக்குகளை மேற்கொள்ளுங்கள். பின் அவற்றை அடைய மிகவும் கடினமாக உழையுங்கள் என்பது தான். உழைத்தால் பணம் வரும். பணம் வந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பது தான் அவர்களது உறுதியான கருத்து ஆகும்.
உண்மையில் நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமாக உழைக்கத் தேவையேயில்லை என்பது தான் சரியான வாழ்வியல் உண்மையாகும். அது எப்படி என்பதை உங்களுக்கு விளக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
பெரிய இலக்குகள் நிர்ணயித்து, கடினமாக உழைக்கும் போது அதிக மன உழைச்சல் ஏற்படும் என்பதை மறுக்க முடியுமா? அப்போது, உங்கள் சந்தோஷம் காணாமல் போகும் என்பது தானே நிஜம்? எந்த சந்தோஷத்தை அடைய கடினமாக உழைக்கிறார்களோ அந்த சந்தோஷத்தை அவர்கள் எளிதில் இழந்து விடுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. எதை இறுதியில் அடையலாம் என்று நினைத்தார்களோ அதை முதலிலேயே இழந்து விடுகிறார்கள்.
பண்டைய இந்திய முனிவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? உனக்கு எது மிகவும் பிடிக்குமோ, எந்த துறையில் உனக்குத் திறமை இருக்கிறதோ அந்த வேலையை செய் என்றார்கள். இஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்யும்போது அதில் கஷ்டம் தெரியாது. உங்கள் வேலை எளிதாகி விடும். மேலும் நீங்கள் அந்தத் துறையில் நிபுணர் என்பதால் அந்த வேலையை எளிதில் செய்து முடித்து விடுவீர்கள்.
ஆக, கடினமாக நீங்கள் உழைக்கத் தேவையே இல்லை என்பது தான் நிஜம். நீங்கள் பெரிய வெற்றிகளை எளிதில் பெற்று விடுவீர்கள்.
இஷ்டப்பட்ட வேலையை செய்யுங்கள். உங்களுக்கு நன்றாக வரும் வேலையை செய்யுங்கள். இலக்குகள் தேவையில்லை. இலக்குகள் மன அழுத்தத்தையே உண்டாக்கும். உங்கள் செயல் திறன் குறைந்து விடும்
No comments:
Post a Comment