Friday, July 24, 2015

கெளதம புத்தர் இறந்தவுடன்

கெளதம புத்தர் இறந்தவுடன் சொர்க்கத்தின்
வாசலை சென்றடைந்தபோது அங்கு மாபெரும்
கொண்டாட்டமாக இருந்தது. ஏனெனில்
எப்போதாவது தான் ஒரு மனிதன் தனது முழு
நிலையையும் அடைகிறான். எனவே
எப்போதாவது தான் அந்த கதவுகள் திறக்கும்.
ஆனால் புத்தர் உள்ளே நுழைய மறுத்து
விட்டார். இது வெறும் கதை தான். இது ஒரு
சரித்திர விஷயம் என்று நீ நினைத்துவிடாதே.
ஆனால் சில சமயம் கதைகள், சரித்திரத்தைவிட
அதிக உண்மைகளைச் சுமந்து கொண்டு
இருக்கும்.
"பல கோடி மக்கள் இருட்டில் துழாவிக்
கொண்டும், இருட்டில் தேடிக் கொண்டும்
இருக்கும் போது நான் மட்டும் எப்படி
சொர்க்கத்திற்குள் நுழைய முடியும்? கடைசி
மனிதன் சொர்க்கத்திற்கு வரும் வரை நான்
காத்துக் கொண்டிருக்கிறேன் ". என்கிற
காரணத்தைக் கூறி புத்தர் நுழைய மறுத்தார்.
புத்த மதத்தினர் அவர் இன்னமும் காத்துக்
கொண்டிருப்பதாக நினைக்கின்றனர்.
அவர் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறாரா
அல்லது இல்லையா என்பது ஒரு
பொருட்டல்ல. ஆனால் இயற்கை காத்துக்
கொண்டிருக்கிறது என்கிற ஒரு விஷயம்
மட்டும் நிச்சயமானதாகும். மேலும் நீ
முட்டாள்தனமான சாதாரண
விஷயங்களுக்காகவும், பொருட்படுத்தக்
கூடாத விஷயங்களுக்கும், குப்பை போன்ற
விஷயங்களுக்காகவும் நீ அதை ஒத்திப்
போட்டுக் கொண்டிருக்கிறாய். அதனால் உனது
மலர்ச்சிக்கான காலத்தை தள்ளிப் போட்டுக்
கொண்டிருக்கிறாய். வசந்தம் வருகிறது.
போகிறது. ஆனால் நீ மலர்கள் இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறாய். குரு என்பவர்
வசந்த காலம் போன்றவர்.
எனவே குரு உனது கதவைத் தட்டும்போது
எல்லாவற்றையும் விட்டுவிடு. ஏனெனில்
உன்னைப் பற்றி நீ அறிந்து கொள்வதை
விடவும், நீ நீயாக இருப்பதை விடவும், உனது
பிறப்புரிமையாகிய அந்த அழகு மற்றும்
பரவசம் நிறைந்த அனுபவத்தை பெறுவதைக்
காட்டிலும் முக்கியமானது ஒன்றும்
கிடையாது.
-ஓஷோ

No comments:

Post a Comment