Tuesday, July 21, 2015

எதிர்ப்பு சக்தியை ஈர்க்கும் பிராணயாமா

தரையில் ஒரு விரிப்பின் மேல், நிமிர்ந்த நிலையில் சம்மணமிட்டு அமர்ந்து, மூச்சை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக, நிதானமாக (வயிறு வரை)உள்ளே இழுத்து, பின் மெதுவாக வெளியே விட வேண்டும். இதுவே, பிராணயாமப் பயிற்சி. தரையில் அமர முடியாதோர், நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். 

உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். உள்ளுறுப்புகள் ஆரோக்கியம் ஆகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும். பிராணயாமாவை முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. நுரையீரல் செயல்பாடு பிராணயாமாவால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். 

பிராணயாமா என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். எடை குறைப்பு பிராணயாமாவால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை. உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணயாமா உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். 

பிராணயாமாவை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். நச்சுத்தன்மையை வெளியேற்றுதல் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிராணயாமா பயிற்சி. குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சி செய்யவும். அதற்கு, தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி செய்யவும். 

No comments:

Post a Comment