ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அறுமுகச் சிவபுராணம்! - www.happy4all.org
ஓம் சரவணபவ வாழ்க சண்முகன் தாள்வாழ்க
இரவும் பகலும் என் இதயத்தான் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
குருவாயெழுந்தருளும் குமாராய நம வாழ்க
திருவார் குமரத் திருவுருவம் தான் வாழ்க
வெஞ்சூர் தடிந்த வெற்றிவேல் மிக வாழ்க
செஞ்சதங்கைத் திருவடிசேர் சீரார் மயில் வாழ்க
கொக்கறுகோ வெனக் கூவும் கோழிக்கொடி வாழ்க
சக்கரம் கைக்கொண்டான் தன்மருகன் தாள் வாழ்க
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் கானக் குறமகளாம்
வள்ளிக்கொடி வழ்க வானவர் கோனீந்த
தெய்வப்பிடி வாழ்க திருவருளான் தாள் வாழ்க
உய்யக் கொண்டருளும் ஓராறுமுகம் வாழ்க
படைகளைத் தாங்கியருள் பன்னிரண்டு தோள்வாழ்க
விடையவன் களிக்கும் விமலக் கவின்வாழ்க
அறசமயத் தெய்வமாய் அருளும் அருள் போற்றி
குருமனிவர்க் கருளிய குறைவிலாக் குணம் போற்றி
நான்முகனைக் கடிந்த நாதனருள்போற்றி
மான்மழுவனுக்குமருள் மன்னன் அடிபோற்றி
வேங்கை மரமான விமலன் அடிபோற்றி
தேன்கைத் தினைமாவின் தேவ னருள்போற்றி
தேவர்களைச் சிறைமீட்ட சேந்தன் திறம்போற்றி
மூவர்க்கு மேலாய முருகின் மணம்போற்றி
ஓங்காரமாக ஒளிரும் பதம்போற்றி
நீங்காத சத்திவேல் நிமலன்தன் நேர்போற்றி.

சிவாயநம!!
No comments:
Post a Comment