ஒருவன் தானும் தன் நம்பிக்கையும் அருகருகே நடந்து சென்று கொண்டிருப்பதாக கனவு கண்டான்.👬
ஒவ்வொரு தடவையும் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்கள் நடந்து சென்ற தரையில் இரண்டு ஜோடி பாதங்கள் தடம் பதித்திருந்தன.👣 👣
அவனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தது நம்பிக்கை. ஒரு சந்தேகத்தில் நடந்து வந்த பாத தடங்களை அவன் திரும்பிப் பார்த்தான்.👀
ஒரு சில இடங்களில் ஒரே ஒரு ஜோடி பாதங்கள் தான் இருந்தன.ஆழ்ந்து ஜோசித்த போது அவை , தான் துன்பமாக இருந்த கால கட்டங்கள் ஒவ்வொன்றும் என்பதை தெரிந்து கொண்டான் அவன்.
நம்பிக்கையை பார்த்து பெரு மூச்சோடு கேட்டான் அவன்😯
‘என்னோடு தொடர்ந்து பயணம் செய்த நீ.. என் துக்க காலங்களில் என்னை விட்டு ஓடிச் சென்றிருக்கிறாயே! என்று ஏளனமாக கேட்டான்.
அதற்கு நம்பிக்கை சொன்ன பதில் :_💝
“நான் உன்னை விட்டு ஒரு போதும் விலகியது கிடையாது. உனது துன்ப காலத்தில் நடக்க முடியாமல் படுத்து விட்ட உன்னை நான்தான் தூக்கி கொண்டு நடந்து வந்திருக்கின்றேன். நிதானமாகப் பார்.
அவை எனது காலடித் தடங்கள்”. என்றது .👣👣👣👣👣👣
No comments:
Post a Comment