தாங்க முடியாத
அளவிற்கு எதிரிகளால்
துன்பம்
அடைபவர்களையும் ,
விபத்து , துர்மரணம்
இவற்றிலிருந்தும் ,சகல
துன்பங்களில் இருந்தும்
காப்பவர் பைரவர் மட்டுமே .
துன்பங்களில் இருந்து
விடுபட பைரவரை தான்
சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை
செய்து கொண்டு உங்கள்
பிரார்த்தனை
நிறைவேரும்
வரை ஒவ்வொரு சனி
கிழமையும்
வெண்பூசணி யில்
பைரவருக்கு
விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6
மணி முதல் மாலை 8
மணிக்குள் அல்லது
கோவில் நடை
சாத்துவர்க்குள்
வெண்பூசணி யில்
பைரவருக்கு விளக்கு
போட வேண்டும்
திறந்திருக்கும்
பைரவருக்கு தான்
விளக்கு போட வேண்டும்
, கண்டிப்பாக பைரவர்
சிலையை திரை இட்டு
மூட்டி இருந்தாலோ ,
கதவு சாத்தி
இருந்தாலோ அந்த
பைரவருக்கு விளக்கு
போட கூடாது
64 பைரவர்களில் எந்த
பைரவருக்கு
வேண்டுமானாலும் எந்த
நேரத்தில்
வேண்டுமானாலும்
விளக்கு போடலாம்
இதை செய்ய
முடியாதவர்கள் தினமும்
சாதரணமான விளக்கு
போடலாம் , அதுவும்
முடியாதவர்கள்
வாரத்தில் ஒரு நாள்
மட்டும்
சாதரணமான விளக்கு 7
விளக்கு போடலாம் ( அந்த
நாள் சனி கிழமையாக
இருந்தால் மிகவும்
உத்தமம் . பைரவரே
அனைத்து
கிரகங்களுக்கும் அதிபதி
, அனைத்து
கிரகங்களையும்
தன்னுடைய கட்டுபாட்டில்
வைத்திருப்பவர் , மேலும்
சனி பகவானுடைய
குரு)
No comments:
Post a Comment