Sunday, June 19, 2016

வாஸ்து குறைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள் !!!

வாஸ்து குறைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள் !!!
------------------------------------------------------------------------------------
வாழ்க்கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் நிறைந்திருக்கும் என்பது நூறுக்கு நூறு உண்மை. அதை நாம் சரிவர கடைப்பிடித்தால் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நிச்சயம்.
பிளாட்டில் அதையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்க முடியாது பாருங்கள். சரி, அந்த சமயத்தில் நாம் என்ன பரிகாரம் செய்யலாம்?
* ஈசான மூலையில் (வட கிழக்கு) பகுதியில் சிறிய பாத்திரம் ஒன்றில் தினமும் தண்ணீர் நிரப்பி வையுங்கள். அவ்வாறு வைப்பதால் கெட்டவை அனைத்தும் தண்ணீர் ஈர்த்துக்கொள்ளும், எந்த பாதிப்பும் உங்களை அண்டாது.
* வீட்டினுள் நுழையும் போது கண்ணில் தென்படுவது போல் வண்ண மீன் தொட்டியை வைக்கலாம்.
* பசுமையான செடிகளை வளர்க்கலாம்.
* மஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு ஜன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை போடலம்.
* மா இலை தோரணம் முக்கியமானவை. மா இலைக்கும், வேப்பிலைக்கும் கெட்டவைகளை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உள்ளது. அதனால் தான், நம் வீட்டில் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் மா இலைக்கு முக்கிய பங்கு தருவோம். குழந்தைகள் உள்ள வீட்டில் தினமும் மாயிலை, வேப்பிலை கலந்து கட்டி வந்தால் தொற்று நோய்கள், பூச்சிகள் எதுவும் பாதிக்காமல் இருக்கும்.
* பஞ்சகவ்யத்தை (பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து வரலாம்.
* இனிமையாக ஒலிக்கும் வின்ட்செம்-களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். கண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டி வைக்கலாம். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மாட்டி வைத்தால் நல்லது. வாஸ்து பரிகார யந்திரத்தை பிரதிஷ்டை செய்து மாட்டலாம்.
இவைகளை பின்பற்றினால் வாஸ்வினால் ஏற்பட்ட குறைகள் அனைத்தும் விலகும்

ஹரி ஓம் நமோ நாராயணா

No comments:

Post a Comment