தோல்விகள் வீணாவதில்லை- எஸ்.ஜே.சூர்யா நேர்காணலிருந்து - தி இந்து (17.06.2016)
இந்த உலகத்தில் வெற்றிக்காக உழைக்காதவர்கள் மிகக்குறைவு. பலர் மற்றவர்களுக்கும் குடும்பத்துக்காவும் கச்சாப் பொருளாகவே இருந்து தங்கள் காலத்தை கடந்து சென்று விடுகிறார்கள். இன்னும் பலருக்கு உழைப்புடன் நேரம் கூடி வரும்போது வெற்றிகளும் அவர்களுக்கானதாக ஆகிவிடுகிறது. ஒரு இரும்பு இரும்பாக இருக்கிறவரை அது அது எத்தனை உறுதியாக இருந்தாலும் அது வெறும் கச்சாப்பொருள்தான். அதுவே காந்தமாக மாறுகிற போது அது அனைத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. இரும்பாக இருக்கும் நாம் காந்தமாக மாற ஒரு அவகாசம் எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும். இது தான் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சோர்ந்து போய்விடக் கூடாது என்ற ஊக்கத்தை என் அப்பா மற்றும் நடிகர் சில்வர் ஸ்டர் ஸ்டோலனிடமிருந்து கற்றுக்கொண்டேன். “நீ எத்தனை ஏழை என்றாலும் சரி, அணிந்து கொள்ள ஒரேயொரு ஆடை தான் இருக்கிறது என்றாலும் சரி, உறங்க இனி நடைபாதை மட்டும் தான் என்ற நிலை வந்தாலும் சரி, உன் கனவை மட்டும் அணைத்துவிடாதே. அது உன்னை ஒரு நாள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியே தீரும். அதற்கு நானே உதாரணம்” என்று கூறியிருந்தார். அந்த வார்த்தைகளை அப்படியே எனக்குள் சேகரித்து வைத்துக் கொண்டதும் நெருக்கடியான காலங்களில் உயிர்ப்புடன் இருக்க உதவியது.
ஒருவனது தோல்விகள் கூட வீணாவதில்லை என்பதற்கு நான் உதாரணம் என்று தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அருள் கதாபாத்திரம் தனிப்பட்ட முறையிலும் என் இதயத்துக்கு நெருக்கமானது என்பதை மறுக்கவில்லை. ஒடாத வாட்சக்கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரம் காட்டும் என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோல, தோல்விகளின் பின்னால் இருக்கும் உழைப்பு வீணாவதில்லை.
No comments:
Post a Comment