"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Tuesday, June 21, 2016
திருக்குறளை பற்றி தெரிந்துக்கொள்ளஇன்னும் நிறைய உள்ளன.*
திருக்குறளை பற்றி தெரிந்துக்கொள்ளஇன்னும் நிறைய உள்ளன.* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700* திருக்குறள் காமத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள் – 250* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் –1330* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல்,37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்– பனை, மூங்கில்.* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.* திருக்குறளுக்குமுதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்– ஜி.யு.போப்.* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.Source : இணையத்திலிருந்து திரட்டியது.Relaxplzz
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment