சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சுலப முறை)
தேவையானவை: ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட்,இரண்டு கிண்ணங்கள்,தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு எனப்படும் மண் விளக்கு,கலப்படமில்லாத,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்)
*அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தும் மனவலிமை
தினமும் காலையில் குளித்துமுடித்துவிட்டு,அகல்விளக்கில் நெய்யை நிரப்பி தாமரைநூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது.
தீபம் ஏற்றியப்பின்னர்,வீட்டில் சமைத்த உணவில் முதல் கரண்டியை எடுத்து,ஒரு கிண்ணத்தில் இவரது படத்தின்முன்பாக வைக்கவேண்டும்.சோறு எனில் ஒரு கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அந்த உணவின்மீது தாளித்த தயிர் அல்லது வெல்லம் தூவ வேண்டும்.பிறகு,சந்தனத்தை நீரில் கரைத்து,சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக் கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில் இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும்.
பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும்.அப்படி ஆராதித்தப்பின்னர்,கீழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில் 330 முறை ஜபிக்க வேண்டும்.
மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
இத்துடன்,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாடு நிறைவடைந்தது.இரவு 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் காலையில் நிவேதனமாக வைத்தோமே? அந்த காலை உணவை எடுத்து,நமதுவீட்டின் வெளிப்புறம்,சற்று உயரமான இடத்தில்(கல்லில்!) ஒரு வாழை இலையில் அல்லது கிண்ணத்தில் அந்த உணவை வைக்க வேண்டும்.இப்படி தினமும் செய்துவரவேண்டும்.
இந்த தினசரி வழிபாட்டினால்,ஓரிரு நாள் அல்லது ஓரிரு வாரங்களில் நாம் இரவு வீட்டுக்கு வெளியே உணவை வைக்கும் போது,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ,பைரவர் வடிவத்தில் சாப்பிட வருவார்.
(இந்த நிவேதனத்தை நமதுவீட்டு வளர்ப்பு பைரவருக்குப் படைக்கக் கூடாது)
இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை 180 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவருவதால்,நமது கர்மவினைகள் தீரும்;அப்படி தீரும்போதே நமது பண வருமானம் நான்கு மடங்காக அதிகரிக்கும்;வேலை பார்ப்பவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கும்;விரும்பும் இடமாற்றம் கிடைக்கும்;தொழில்பார்ப்பவர்களுக்கு விற்பனை இரு மடங்காகும்;அரசியலில் இருப்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவார்கள்;உயிரைத்தவிர,அனைத்தையும் இழந்தவர்களுக்கு இழந்த அனைத்தும் கிடைக்கும்.
இந்த வழிபாடு செய்ய ஒரே ஒரு கட்டுப்பாடுதான் உண்டு.அது இந்த வழிபாடு செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.180 நாட்களுக்கு!!!இந்த வழிபாட்டை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் செய்துவந்தால்,நமது அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,சொர்ணம் நம்மிடம் குவியத்துவங்கும்;(சொர்ணம் = தங்கம்)
இந்த வழிபாடு செய்பவர்களின் வீட்டில் இருப்போர்கள்,அசைவம் சாப்பிடலாம்;அசைவத்தை அவர்களும் கைவிட்டால்,அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்ட பலன்கள் வந்து சேரும்.ஆமாம்!
ஒரு குடும்பத்தில் ஒருவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தால்,அந்த குடும்பத்தினர் அசைவத்தை வீட்டிலும்,வெளியேயும்,விழாக்களிலும் சாப்பிடாமல் இருந்தாலே அவர்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறும்;பண வரவு அதிகரிக்கும்.
சிவனுடைய முதல் அவதாரம் பைரவர்! வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் மட்டுமே!!!
தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் வீடு என்று ஒரே ஒரு அறைதான் உண்டு.அந்த அறையில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம்.அதே அறையில் குடும்ப தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.தப்பில்லை;வழிபாடு செய்யும்போது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்;
No comments:
Post a Comment