Thursday, June 9, 2016

தண ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம்

தண ஆகர்ஷனம்
செய்யும்
அமானுஷ்ய பரிகாரம்
பணத்தை வசீகரிக்கும் தன்மை
கொண்டது இந்த
பரிகார முறை. இதை
வியாழக்கிழமைகளில் மட்டுமே
செய்ய வேண்டும்.
எதிர்பாராத பண வரவு (சிறு
தொகையானாலும்
கூட)வந்தால் அதை
கொண்டு மட்டுமே
செய்ய பலன் தரும்.குறிப்பிட்ட
நேரம் எதுவும் இதற்க்கில்லை. பணம்
வந்தவுடன் செய்யலாம்.
எந்த நேரமானாலும். ஆண்
பெண் இருவரும்
செய்யலாம் (பெண்கள்
மாத விடாய் காலங்களில்
தவிர்க்கவும்)
 வியாழக்கிழமைகளில்
எதிர்பாராத பணவரவு, சிறு
தொகையாக இருப்பினும்
சரி, அல்லது பெரும்
தொகையாக இருப்பின்
அதில் சிறு பகுதியை தனியாக
எடுத்து ஒரு வெள்ளை நிற
கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு
நோக்கி ஏதேனும் ஆசனத்தில்
சம்மணமிட்டு அமர்ந்து கவரில்
ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை
தாமரை மணி மாலை
கொண்டு காயத்ரி
மந்திரம் ஜெபிக்கவும். பின்பு
அதை அப்படியே எடுத்து பூஜை
செய்யும் இடத்திலோ அறையிலோ
வைத்து விடவும். ஒரு முறை
செய்தால் போதும். இது நம்
இல்லம் தேடி பணத்தை
வரச்செய்யும் முறையாகும்.
காயத்ரி மந்திரம் :
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
உச்சரிப்பு முறை தகுந்த நபரிடம் கேட்டு
தெரிந்து
கொள்ளவும்.(கோவில்களில்
உள்ள அந்தணரிடம் கேட்டு
தெரிந்து
கொள்ளலாம்-
இப்பொழுது ஸீடீ
வடிவிலேயே கிடைக்கிறது)

No comments:

Post a Comment