சாதனை:
தனியாக இதனை
பயிற்சிப்பதற்கு
அமைதியான,
காற்றோட்டமான
ஒரு இடத்தினை
தேர்ந்தெடுத்துக்
கொள்ளவும்.
சுகாசனம்,
சித்தாசனம்
போன்று அமர்ந்த
நிலையிலும்
செய்யலாம்.
அல்லது சாய்ந்த
நிலையிலும்
மல்லாந்து படுத்த
வண்ணமும்
செய்யலாம்.
உங்களுக்கு இஷ்ட
தெய்வம்
இருப்பின் அந்த
தெய்வத்தினது
மந்திரத்தினைக்
கொண்டு
விநாயகர் கவச
பதிவில்
கூறியபடி
செய்யலாம்,
இல்லையெனில்
கீழ்வருமாறும்
செய்யலாம்,
கண்களை
மூடிக்கொள்ளு
ங்கள். மூச்சினை
ஆழமாக இழுத்து
சில முறை
விடுங்கள்.
உடல் தளர்வாகிய
பின்னர் ஒரு தங்க
நிற ஒளி ஒன்று
மூச்சினூடாக
வெளியில்
இருந்து நெற்றிப்
பொட்டில் வந்து
உறைவதாக
பாவிக்கவும்.
ஒளி சூடற்ற
குளிர்மையானத
ாகவும் பிரகாசம்
பல சூரியனை
ஒத்ததாகவும்
பாவிக்கவும்.
பின்னர் இந்த ஒளி
அப்படியே
தலையின்
உள்ளும் புறமும்
சென்று
மூளையினை
நன்கு
பலப்படுத்துவதா
க பாவிக்கவும்.
அதன் பின்
மூளையில்,
தலையில் அந்த
ஒளி பரவிய
பின்னர் அந்த
பிரகாசம்
அப்படியே இருக்க
ஒளி அடுத்து
படிப்படியாக
ஒவ்வொரு
உறுப்புகளினை
அடைந்து அந்தந்த
உறுப்புகளை
ஒளியேற்றி
பிரகாசிக்க
செய்வதாக
பாவிக்கவும்.
1. புருவம்,
2. கண்கள்
3. மூக்கு
4. காது
5. வாய்
6. கழுத்து
7. கைகள் இரண்டும்
8. மார்பு
9. நெஞ்சின்
நடுப்பகுதி
10. வயிறு
11. தொப்புள்
12. இன உறுப்புகள்
13. தொடை
14. முழங்கால்
15. கணுக்கால்
16. பாதம்
17. பெருவிரல்
பின்னர் இந்த
உறுப்புகளினூடாக
பின்வரிசையில் ஒவ்வொரு
உறுப்பகளினூடாக அந்தந்த
உறுப்புகளில் ஒளி
பிரகாசிப்பதை
மனக்கண்ணில் கண்டு
கீழ்வரும் ஒழுங்கில்
செல்லவும்.
1. பெருவிரல்
2. பாதம்
3. கணுக்கால்
4. முழங்கால்
5. தொடை
6. இன உறுப்புகள்
7. தொப்புள்
8. வயிறு
9. நெஞ்சின்
நடுப்பகுதி
10. மார்பு
11. கைகள் இரண்டும்
12. கழுத்து
13. வாய்
14. காது
15. மூக்கு
16. கண்கள்
17. புருவம்,
18. மூளை/தலை
வரை சென்று பின்னர்
மீண்டும் அந்த ஒளி புருவ
மத்தியில் இருப்பதை
உணருங்கள். இப்போது
உங்கள் மனதில் உங்கள்
உறுப்புகள்
ஒவ்வொன்றிலிருந்தும்
ஒளிக்கற்றை வீசுவதை
மனக்கண்ணில் பாருங்கள்.
இப்பொது அடுத்தகட்டமாக
இந்த ஒளியினை
கவசமாக்கும்
செய்முறையினைப்
பார்ப்போம்.
இப்பொழுது மேற்குறித்த
ஒவ்வொரு உடல்
பகுதியிலுமிருந்து ஒளி
விரிவடைந்து உடலைச்
சூழ முட்டை வடிவில்
உருவாவதை
அனுபவியுங்கள். இது
எவ்வளது தூரம் என்பது
உங்களது பிராண
மனோசக்திகளது
ஆற்றலினால்
தீர்மானிக்கபடும்.
சாதாரணமாக் உடலைச்
சூழ முன்று - நாலு
அடிகள் சூழ்ந்திருப்பதாக
பாவியுங்கள். இந்த
நிலையில் வேறு எந்த தீய
சக்தியும் உங்க்களினுள்
வரமுடியாது போகும்.
ஆரம்ப காலத்தில்
காலையில் இப்படி
சாதனை செய்துவிட்டு
ஆபீஸுக்கு
சென்றீர்களானால்
மாலையில் வீடு வரும்
போது மற்றவருடைய
காந்தசக்தியினால்
தாக்கமுற்று
குறைந்திருக்கும்.
சிலமாத பயிற்சியில்
நிரந்தரமான ஒளிகிரகணம்
உடலைச் சூழ அடர்த்தியாக
சூழ்ந்துவிடும்.
இந்த பயிற்சி செய்து
உடலைச் சூழ ஒளி
இருக்கும் போது மனதில்
உங்க்களுக்கு
வேண்டியவரிற்கு
நல்லெண்ணத்தினை
அனுப்பினால் அது
அவரிற்கு பலிக்கும்,
இப்படி சிந்தித்தறிந்து
கொள்வதன் மூலம் பல
காரியங்க்களை
செய்யலாம்.
இதன் அடிப்படை மனதிலும்
உடலிலும் பிராண
ஓட்டத்தினை சீராக்கி
வலிமைப்படுத்தலேயாகும்
.
பயிற்சித்து பலனைக்
கூறவும்.
No comments:
Post a Comment