ஆழ்மனது என்பது கணினியில் உள்ள 'ஹார்டு டிஸ்க்' போன்றது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால சுவையான, கசப்பான அனுபவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கும். எப்போதாவது ஏதேனும் புதிய சூழ்நிலையை சந்திக்கும் போது நம்முடைய சுயநினைவு அதை சார்ந்த நினைவுகளை ஆழ்மனதிலிருந்து எடுத்துக்கொள்ளும்.
நம்முடைய ஆழ்மனதில் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையும், நினைவுகளையும் சேர்த்துவைக்கும் போது நம்முடைய வாழ்விலும் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிட்டு வாழ்வும் தவறான பாதைக்கு சென்று விடுகிறது.
நம்மை இயக்கும் ஆழ்மனம் :ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் போது அது அவர்களுக்குள் சென்று எதிர்மறைகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்து மனதை குணப்படுத்தும் சக்தியை பகிரங்கமாக காணும்படி செய்யும். ஆழ்மனம், நாம் உறங்கும்போது கனவுகளோடு செயல்படுகிறது. வருகின்ற கனவுகள் நமது ஆழ்மனதின் பிரதிபலிப்பு.
திகில், பயம், குற்ற உணர்வு நிறைந்த கனவுகள் இதற்கு உதாரணம். ஆழ்மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அது கனவுகளில் வெளிப்படும். நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் இயக்குவது நம் ஆழ்மனமே.ஆழ்மனது நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கை போன்றவற்றை வைத்தே செயல்படும். செல் உயிரியலாளர் டாக்டர் ப்ரூஸ் லிப்டன் ஆய்வில், 'நம்முடைய நம்பிக்கைகள் டி.என்.ஏ.,வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.
நம்முடைய நம்பிக்கைகள் நேர்மறையாக இருந்தால் அவை நமக்குள் இருக்கும் பழைய டி.என்.ஏ., செல்களின் மேல் புதிய டி.என்.ஏ., செல்களை உருவாக்குகின்றது. இதை 'எப்பிஜெனிடிக்ஸ்' என்று கூறுவர். உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நம்முடைய எதிர்மறையாக எண்ணங்களே காரணம். இதை மருத்துவர்கள் 'சைக்கோசொமட்டிக் டிஸ்சாடர்' என அழைக்கின்றனர்.
நம்பிக்கையின் சக்தி :விஞ்ஞானி டாக்டர் கிரக் ப்ராடன் ஆய்வில், 'நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் நம்முடைய உடலை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது' என கூறுகிறார். அவர் எழுதிய 'டிவைன் மேட்ரிக்ஸ்' என்னும் புத்தகத்தில் ஒருவர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய புற்றுநோய் முற்றிப்போன நிலையிலும் மருத்துவர்கள் அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.
அவர் சீனாவில் பீஜிங் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சைனங் க்யுகாங்' என்னும் மாறுபட்ட ஒரு சிகிச்சை முறை அளிக்கப்பட்டது. இரண்டே நிமிடங்களில் புற்றுநோய் கட்டி இடம் தெரியாமல் மறைந்துபோனது. இச்சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து மருத்துவர்கள், ஒரு கருத்தரங்கில் திரையிட்டனர். அவர்கள் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து நின்றனர்.பின், இந்த சிகிச்சைக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை அவர்களிடம் கிரக் ப்ராடன் எடுத்துரைத்தார்.
'அம்மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு நீங்கள் முழுவதாக குணமடைந்து விட்டீர்கள் என்று முழு மனதாக நம்பும்படி கூறி அவர்களை அம்மனநிலைக்கு எடுத்துச்சென்றனர். பின், அங்கு கூடியிருக்கும் மருத்துவர்களும் அவர்களுக்கு புற்றுநோய் குணமடைந்து விட்டது என, மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே அந்த சிகிச்சை அளிக்கும் அறையில் நேர்மறையான உணர்வுகளை அதிகமாக வரவழைத்தனர். எனவே அந்த நேர்மறையின் தாக்கம் அப்பெண்னுக்குள் சென்று அவர்களுக்கு உடனே சுகம் கிடைத்தது' எனக் கூறினார்.
கர்மாவின் தாக்கம் :டாக்டர் மேக்ஸ் ப்ளாக் என்பவர், 'நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது; அது நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருப்பார்கள் என தீர்மானித்துவிடுகிறது. வாழும் உலகை அது அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதை டிவைன் மேட்ரிக்ஸ் என்றும் கடவுளின் சக்தி என்றும் அழைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.
நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கை இந்த கடவுளின் சக்தியிடம் தாக்கம் செலுத்துகிறது. அதற்கேற்றவாறு நம் வாழ்க்கை அமைகிறது. 'நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகள் நமது டி.என்.ஏ., வை கட்டுப்படுத்துகிறது' என ஆய்வில் கூறியுள்ளார். 'நாம் நம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து நன்மையும் தீமையும் கர்மாவில் சேர்ந்துக்கொண்டே வரும். எளிமையாக சொன்னால் எதை விதைக்கிறோமே... அதை அறுக்கிறோம். கர்மா என்பது பிரபஞ்சத்தின் நீதி என்று கூறலாம்.
எண்ணங்களின் வண்ணங்கள் :நம்முடைய உடலில் 63 ஆயிரம் கோடி செல்கள் உள்ளன. அதில் பல வண்ணங்கள் உள்ளன. மருத்துவரால் அந்த வெவ்வேறு வண்ணத்தின் காரணத்தை கூற முடியவில்லை. ஆனால் அது கர்மாவின் தாக்கம் என கூறலாம். ஒரு மனிதனின் கர்மாவின்படி அவன் உடலில் உள்ள செல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'ஆரா கேமரா' மூலம் ஒருவரை படம் பிடித்தால் பல வண்ணங்களை வெளிப்படுத்தும்.
அந்த வண்ணங்களை வைத்து உடலில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். ஆரா போட்டோவில் உள்ள வண்ணங்களை வைத்து நம் மனநிலையை எளிதில் கணக்கிட முடியும்.டாக்டர் பிரேன் வைய்ஸ் புகழ்பெற்ற மனநல மருத்துவர். மனிதனுடைய ஆத்மா பற்றியும் முற்பிறவி பற்றியும் நிரூபித்திருக்கிறார். ஒருவருடைய கடந்த காலத்தை பார்ப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது.
ஒருவர் அவருடைய கடந்த கால நினைவுகளை அடையும் போது அவர்கள் தற்காலத்தில் வாழும் நோக்கம் மற்றும் அவர்களின் கர்மா என்ன என்பதையும் அறிந்துகொள்வார்கள்.
No comments:
Post a Comment