வலம்புரி சங்கு
மனிதவாழ்வில் அதிஸ்டத்தைக் காண விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம் ஏனெனின் எல்லோரும் அதிஸ்டத்தை நம்பியே வாழ்கிறோம் விதி வழி அதிஸ்டசாலிகளும், பிறப்பிலேஇருந்து அதிஸ்டசாலி களாகவும் நன்கொடைமூலம் அதிஸ்டசாலிகளாகவும் அதிச்டலாபம் மூலம் அதிஸ்ட சாலிகளாகவும் வாழ்வதைக் காணலாம்,வாழ்வுக்கு வளம் அள்ளித்தரும் குபேரயோகம் கிடைப்பது என்பது எல்லோருக்கும் கிடைக்கும்,
இதை நாம் நேரிலே அனுபவிக்கும் அந்தக் குபேர யோகம் என்பது சில வழிபாட்டுமுறையில் எல்லா மனிதரும் தன்னிடம் வைத்திருக்கும் வளம் புரிச் சங்கு என்பது வீட்டில் இருந்தால் அதுவே தினம் தரும் குபேர யோகம்
அட்சய திதி தினத்தில் வலம்புரிச் சங்கில் தங்கத்தாலான இல்லை செய்து வீட்டிற்குக் கொண்டுவந்தாலே அந்த வீட்டில் ஐஸ்வர்யம் குடி கொள்ளும் என்பதே வேதவாக்கு முறையான பிரம்மசாஸ்திரம் தெரிந்த ஒரு விஸ்வப் பிரம்ம குலத்தினராலேயே ஒரு சங்கின் வயதைக் கணக்கிடலாம் அப்படிக் கணக்கிட்டு அதன் நீளத்திற்கும் அகலத்திற்கும் ஏற்றவாறு தங்கத்தினாலோ வெள்ளியினாலோ சங்கிற்கு சிறு கவசம் செய்து அதை பாலாபிசேகம் செய்து அதையே அட்சய திதி தினத்தில் வீட்டிக்குக் கொண்டுவரவேண்டும்.அதுதான் வீட்டிலேயே தங்கியிருக்கும் தன லட்சுமி வாசம் என்பது,
வலம்புரிச் சங்கின் வரலாறு!!!
""கடலில் வாழும் உயிரினங்களில் மெல்லுடலிகள் இனங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவற்றில் ஒன்று ஒரு ஒட்டு உயிரி. மற்றொன்று இரு ஒட்டு உயிரி. ஒரு ஒட்டு உயிரிகளைச் சங்குகள் என்றும் இரு ஒட்டு உயிரிகளைச் சிப்பிகள் என்றும் சொல்கிறார்கள். சங்கு வகைகளில் டர்பினெல்லோ பைரம் என்ற சிற்றின வகையை சேர்ந்ததே வலம்புரிச் சங்கு. இடம்புரி, வலம்புரி என்பனவற்றில் இந்தியாவில் கிடைக்கும் எல்லா வகையுமே பெரும்பாலும் இடம்புரியாகத்தான் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் லட்சத்தில் ஒன்று பிறக்கும் போதே உறுப்பு மாறி (மியூட்டேஷன்) பிறந்து விடும். அதாவது கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் உடற்சுற்று அமைப்புடன் உருவாகும் டர்பினெல்லோ பைரம் சிற்றினத்தை சேர்ந்த சங்குகள் வலம்புரி சங்குகள் எனப்படுகின்றன.
கடலின் ஆழத்தில் மணற்பாங்கான இடத்தில் வாழ்பவை. ஒரே சமயத்தில் லட்சம் முட்டைகள் இட்டாலும் அவற்றில் சில மட்டும் குஞ்சுகளாக பொரிந்து சங்குகளாக வளர்ச்சி அடைகின்றன. கடல்நீரில் உள்ள மனித கண்களுக்குக்கூட புலப்படாத நுண்ணிய தாவர மிதவைகள், விலங்கு மிதவை உயிரிகள்தான் இவற்றின் உணவு. கடலின் அடிப்பரப்பு மிகவும் பாதுகாப்பாக இருந்த காலத்தில் பல பேர் இதை நம்பி கடலுக்குள் மூழ்கி சங்கு குளித்து அதை நம்பியே வாழ்க்கையும் நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களை சங்கு குளிப்பவர்கள் என்றார்கள்.
கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தும்போது கடலின் அடிப்பரப்பில் உள்ள இதன் முட்டைகள், குஞ்சுகள் போன்றவை அழித்து விடுகின்றன. பெரும்பாலான மீன்களும் சங்குக்குஞ்சுகளின் இறைச்சி சுவையாக இருப்பதால் அவற்றைத் தின்று விடுகின்றன. இக்காரணங்களால் இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு இன்று இந்த இனமே முற்றிலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
வலம்புரிச் சங்குகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி இயற்கையிலேயே அனைத்துமே வலம்புரிகளாக பிறக்கும் மற்ற சிற்றினத்தை சேர்ந்த சாதாரண சங்கு வகைகளை (ஆப்ரிக்காவில் கிடைப்பவை) வலம்புரிச் சங்கு என்று விற்று விடுகின்றனர்.
இவ்வகைச் சங்குகள் புனிதம் இல்லாதவை. உண்மையான வலம்புரிச் சங்குகளைக் காதில் வைத்துக் கேட்டால் கடலின் ஒலி போன்ற ஓசை வரும்.
மகாலெட்சுமியின் பேரருளைப் பெற்றிருப்பதாக நம்புவதால் இவற்றை பலரும் வீடுகளில் வாஸ்து பார்த்து வைக்கிறார்கள்.ஆயிரம் சிப்பிகளுக்கு நடுவில் ஒரு மட்டியும், ஆயிரம் மட்டிகளுக்கிடையில்,ஒரு இடம்புரிச் சங்கும்,ஆயிரம் இடம்புரிச் சந்குகளுக்கு மத்தியில் ஒரு வலம்புரிச் சங்கும் பிறக்கின்றன,
இதனால்தான் மனிதவாழ்விலும் முப்பெரும் பங்கு சங்கிற்குஉண்டு
1,முதற்சங்கமுதூட்டும்/மொய்குழலாள்.நடுச்சங்கம் நல்வழிகாட்டும்/கடைச் சங்கம் காதவழிபோம் என்று முன்னோர்கள்.சரித்திரச் சான்றுடன் பாடினார்கள் மனித வாழ்வில் குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் சங்கிலே பாலூட்டும் மரபு வந்தது,அதுவும் வலம்புரிச் சங்கிலி பாலூட்டப்படும் ஆண்குழந்தை வீரனாகவும் சிறந்த நன்னெறியும் தானாக வளர இந்த முதல் சங்கினால் ஊட்டப்படும் பாலிலே ஊட்டப்படுகின்றது.
2,அடுத்து திருமணத்தின் போது ஊதப்படுவது இரண்டாவது சங்கு.ஒரு சங்கமமாகும் இரண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சாஸ்திர சம்பிரதாயத்தில் காதிலே சங்கை வைத்தால் கடலிலே ஒலிக்கின்ற ஓசை கேட்கும் அதபோல் உங்களுக்குள் எப்படிப்பட்ட கடலோசை போன்ற பிரச்சனை வந்தாலும் காதோடு காதாக வைத்துக் கொண்டால் நீடூழி வாழ்வீர்கள் என்பதை சங்கினால் ஒழி எழுப்பி அவர்களின் வாழ்வை ஆரம்பித்துவைப்பது என்பதாகும்,
3,மரணத்தின் பொது ஊதப்படுவது இந்த மூன்றாவதுசங்கு .எப்படிப்பட்ட கெட்டகுண முள்ளவனும் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவனும் சமூகத்தால் விளக்கி வைக்கப்பட்டவனாக இருந்தாலும் மரணத்தின் பின் அவனைக் குறைகூற மாட்டார்கள் ஏனெனின் இறந்தவன் இறைவனுக்குச்சமம் என்று கூறுவார்கள் அதனால் தான் இனம் மதம் உயர்வு தாழ்வு ஜாதி வேற்றுமை இவை அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டு அனைவரும் சங்கமிக்கும் மூன்று இடங்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு அதாவது ஆலயம், வித்தியாலயம், மயானம்,இங்குதான் வேறுபாடின்றி அனைவரும் ஓன்று கூடுவது. மரணத்தில் ஊதுகின்றசங்கு.நான் எப்படி வாழ்ந்தாலும் இறுதில் அனைவரும் ஒன்றுகூடும் இங்குதான் உறங்கப்போகிறேன் அதேபோல் நீங்களும் மனிதனில் இருந்து புனிதனாக இன்குவரவேண்டும் என்று ஏனையோருக்கும் கூறுவதே மரணத்தின் போதுஊதப்படும் மூன்றாவது சங்கு இப்படிப் பல முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்தசங்கு.
இதிலும் வலம்புரிச் சந்கேன்றால் அதன் மகத்துவத்தைப் பாருங்கள்
பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்தி சங்கம்’ என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும். ‘சங்கநாதம்’ பிரணவ நாதத்தைப் பிரதி பலிப்பதாகும்.
அதன் சப்த அலைகளால் சுற்றுச் சூழலில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகியோடக்கூடிய தன்மையைப் பெற்றதாகும். தீய சூழ்நிலைகளை உண்டாக்கும் எதிர்மறை சக்திகள் வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் தமது சக்திகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அதிலிருந்து ஓம்கார ஸ்வரூப நாதம் தன்னியல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
இதன்பொருட்டே பல முக்கிய நிகழ்வுகளில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா ஸ்ரூப நிலைகளும் எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை.
அதிலும் விசேஷமாக ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையிலேயே நமது திருக்கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
வலம்புரிச் சங்கு தோன்றிய வரலாறு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினான். கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால்-சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.
தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடைய தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம். மகாதேவனுடையது மணி புஷ்பகம். கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி பெருமாளுக்கு-மணி சங்கும், ரெங்கநாதருக்கு-துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு-பாருத சங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு- வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு-பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலிய பெருமாளுக்கு- வெண் சங்கும், ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு-பூமா சங்கும் உள்ளன.
வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத்தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது.
இதை சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்
என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது. முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து- நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.
சங்கு பூஜை செய்யும் முறை:
48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம் புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின்
ஓம் கம் கணேசாய நம
ஸ்ரீ குருதேவாய நம என்ற பின்
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பாவ மானாய த்மஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்
என்னும் சங்கு காயத்ரியை 3 முறை சொன்ன பிறகு-ஸ்வாகதம்... ஸ்வாகதம் ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும், (வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும். மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும். பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்.
ஓம் பத்ம நதியே நம
ஓம் சங்க நிதியே நம
ஓம் மகரநிதியே நம
ஓம் சுகச்சப நிதியே நம
ஓம் முகுந்த நிதியே நம
ஓம் குந்தாக்ய நிதியே நம
ஓம் நீல நிதியே நம
ஓம் மகநிதியே நம
ஓம் வரநிதியே நம
என்று நிதிகளை பூஜிக்க வேண்டும், மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.
ஓம் யக்ஷசாய வித்மஹே
வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத்.
பிறகு 16 நாமாவளி அர்ச்சனை செய்து (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது)
ஓம் க்லீம் குபேராய நம
ஓம் க்லீம் ஸ்ரீமதே நம
ஓம் க்லீம் பூர்ணாய நம
ஓம் க்லீம் அஸ்வாரூடாய நம
ஓம் க்லீம் நரவாகனாய நம
ஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நம
ஓம் க்லீம் யக்ஷõய நம
ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம
ஓம் க்லீம் நித்யானந்தாய நம
ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நம
ஓம் க்லீம் அகாஸ்ரயாய நம
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நம
ஓம் க்லீம் சர்வக்ஞாய நம
ஓம் க்லீம் சிவபூஜகாய நம
ஓம் க்லீம் ராஜயோக வராய நம
அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு..
என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு, பால், அவல் பாயாசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப் பதிலாகக் காட்ட வேண்டும், நமஸ்காரம் செய்த பிறகு.
ஓம் வட திசை வல்லவா போற்றி
ஓம் நவநிதி தேவா போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் செல்வ வளம் சேர்ப்பாய் போற்றி
ஓம் திருமகளின் நட்பே போற்றி
ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி
ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி
ஓம் குபேர நாயக போற்றி
என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும்.
எளிமையான இந்த குபேர பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும். 6 வெள்ளிகள் கடன் தீர வழி ஏற்படும். வியாழக்கிழமை மாலை 5 முதல் 7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9ம் வியாழன் யக்ஞத்துடன் முடிக்க பொருள் சேர வழி உண்டு. 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் எளிதாய்ச் செய்து வர செல்வம் சேர வாய்ப்பு உருவாகும். எல்லோருக்கும் நவநிதி லக்ஷ்மி குபேர தரிசனம் கிடைக்கட்டும்.
இன்றைய நாகரீக உலகு தனது புறம் சார்ந்த வாழ்வியல் வழிமுறைகளில் மிகச் சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சிகள் விண்ணையே தொட்டு விட்டன. நமது சூரிய மண்டலத்தைத் தாண்டிய புறவெளி மண்டலத்தின் விரிவு பற்றிய ஆய்வுகளும் மிகமிக முன்னேற்றமடைந்துள்ளன.
இருப்பினும், நம் தலைக்கும் மேலே விரிந்த புறவெளி பற்றி நாம் அறிந்த அளவை விடவும், நமக்குள் இருக்கும் நமது அகவெளி பற்றி நாம் அறிந்த அளவு மிகவும் குறைவுதான் என்பதை நாம் பல சூழ்நிலைகளில் உணர்ந்திருக்கிறோம்.
தன்னையறிய நினைக்கும் கலையே பெரும் கலை என்று எல்லாக் கால கட்ட மகான்களாலும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நவீன மயமாக்கப்பட்ட வாழ்க்கையின் வேகத்திலும், சிக்கல்களிலும் சிக்கிய மனித சமூகத்தின் மிகப் பெரும்பாலானவர்களுக்கு தன்னையறியும் ஆன்மிகம் பற்றி நினைப்பதற்கே நேரம் இல்லை என்பதே நடைமுறை உண்மை. அக நிலையின் மைய இயக்கம் பற்றி உள்ளுணர்வு ரீதியாக ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதில் பலருக்குத் தடுமாற்றம் உள்ளதை உணர்ந்த நமது ஆன்மிகப் பெரியோர்கள், இயற்கையிலுள்ள பலவிதமான பொருட்களை ‘அருட் சாதனங்கள்’ என்று நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவற்றின் மூலமாக செய்யும் பூஜை, பிரார்த்தனை, வழிபாடு, ஜபம், தியானம் ஆகிய முயற்சிகள் நல்ல விளைவுகளைத் தருகின்றன.
அப்படிப்பட்ட பலவித சாதனங்களில், இங்கு நாம் காண இருக்கும் சாதனம் ‘வலம்புரிச் சங்கு’. இது ஸ்ரீ லட்சுமி சங்கு என்றும் வழங்கப்படுகிறது.
இத்தகைய மகத்துவம் பெற்ற வலம்புரிச் சங்கின் வாயிலாக நமது நடைமுறை வாழ்வின் பல சிக்கல்களுக்கான தீர்வுகளைத்தரும் மந்திரமுறையிலான வழிபாட்டு முறைகளை இங்கு நாம் காணலாம்.
‘ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்’
இது சங்கிற்கான காயத்ரி மந்திரங்களில் ஒன்றாகும். இதைத் தினமும் ஸ்நானம் செய்த பிறகு 12 முறைகள் உச்சாடனம் செய்து தூப, தீப, நைவேத்தியம், ஆரத்தி என்ற முறைகளில் பூஜை செய்து வரலாம். சங்கை ஒரு மரப்பெட்டியில் மஞ்சள் பட்டு வஸ்திரம் அல்லது சிவப்பு வெல்வெட் துணி விரித்து அதில்தான் வைக்க வேண்டும். இல்லாவிடில், அதற்கான செம்பு அல்லது வெள்ளி ஸ்டாண்டில் அதைத் தென்வடலாக வைக்க வேண்டும். தினமும் காலையில் அதைச் சுத்த தண்ணீரால் கழுவிப் பொட்டிட்டு, மலர்தூவி, கற்பூர ஆரத்தி காட்டி மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்து வரலாம்.
மேலும் ஒரு நல்ல வலம்புரிச் சங்காக வாங்கி வந்து நமது கடைகள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வைத்து தினமும் தூபமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வந்தால் நல்ல பலன்கள் நாளும் நம்மை நாடித் தேடி ஓடிவரும். வலம்புரிச் சங்கை வெள்ளிப்பூண் போட்டு வைத்திருப்பதே மிகவும் நல்லதாகும்.
வலம்புரிச் சங்கை நாம் ஒரு வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளில் வாங்கி, அதைச் சுக்ர ஹோரை அமைந்த வேளையிலேயே நமது வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும். நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நாம் வைத்திருக்கும் வலம்புரிச் சங்கானது நமது உள்ளங்கையில் அடங்கக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் அது நல்ல வெண்ணிறமாகவும் இருக்க வேண்டும். பித்தளை அல்லது வெள்ளி ஸ்டாண்டிலோ, அல்லது வெள்ளித் தட்டிலோ தென்வடலாக வலம்புரிச் சங்கு வைக்கப் படவேண்டும்.
முதன்முதலில் ஸ்ரீ லட்சுமி சங்கு எனப்படும் வலம்புரிச் சங்கை வீட்டிற்குக் கொண்டுவந்து அதைக் கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி நமது வீட்டில் என்றும் இருந்து, நமக்கு நன்மைகள் தரப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.
‘ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீதர கரஸ்தாய
பயோநிதி ஜாதய ஸ்ரீதக்ஷ்ணாவர்த்த சங்காய
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ கராய பூஜ்யாய நமஹ’
நாம் வாங்கி வந்த சங்கை, ஒரு நதிநீரை விட்டு சுத்தமாகக் கழுவி மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து, தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி மேற்கூறிய மந்திரத்தை 11 முறைகள் சொல்லி வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பெரிய பூஜா முறைகள் எதுவும் செய்யாவிடினும் கூட தினமும் ஒரு ஊதுபத்தியாவது காட்டி மேற்கண்ட ஸ்துதியை இயன்ற அளவு சொல்லி வணங்கி வரலாம்.
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட்’
இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட ஆடையணிந்து, நெற்றியில் சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு, தெற்குப் பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும். நாமும் சிவப்பு நிற விரிப்பின் மீதே அமர வேண்டும். ஒரு மரப்பலகை மீது சிவப்பு நிற விரிப்பை விரித்து அதன் மீது ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்து அதன் மத்தியில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும். அதன்மேல் ஒரு ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்தையும், வலம்புரிச் சங்கையும் வைக்க வேண்டும். குங்குமம், அட்சதை, ரோஜா இதழ்கள் ஆகியன கொண்டு அவற்றை அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் வழிபாடு, பிறகு குரு வணக்கம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்ய தாமரை மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்.
புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு ஆகிய மூன்று நாட்களும் செய்து முடித்து விட்டு சனிக்கிழமை வரும் சுக்ர ஹோரையன்று ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றை நமது வியாபார ஸ்தலங்களிலோ, அலுவலகத்திலோ, தொழிற்கூடங்களிலோ, அல்லது நமது வீட்டின் பூஜையறையிலோ வைத்து தினமும் தூப தீபம் காட்டியும், மேற்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சாடனமும் செய்து வந்தால் பணம் பல வித வழிகளில் நிச்சயம் வந்து சேரும்.
மேலும் பணம் வரும் வழிகள் யாவும் விரிவடையும். முக்கியமாக நாம் ஜபம் செய்யப் பயன்படுத்திய தாமரைமணி மாலையை ஏதாவது நீர் நிலைகளில் சேர்ப்பித்து விட வேண்டும். இந்தப் பூஜையால் நமது பொருளாதார நிலையின் எல்லைகள் விரிவு பெற்று, மனதில் உற்சாகம் ஊற்றெடுத்து, உழைப்பின் வழி வந்த உயர்வுகளால் வாழ்க்கையின்தரம் சிறப்படையும்.
எளிதாகக் கடைப்பிடிக்க உகந்த மேலும் சில வழிமுறைகளை இப்போது காணலாம்.
ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தன்றோ, புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியன்றோ, ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியன்றோ, அல்லது சித்திரை மாதம் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்றோ, அல்லது இவையனைத்து நாட்களிலுமோ, இரவில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு ஸ்ரீ மகாலட்சுமியின் மீது அமைந்த ஏதாவது ஒரு ஸ்துதியையோ, மந்திரத்தையோ சொல்லி அந்தத் திருமகளை எளிய முறையில் பூஜித்து வந்தால் கூடப் போதும், நம்முடைய குறைகள் யாவுமே மெல்ல மெல்ல விலகி வாழ்வில் வசந்தம் மலய மாருதமாய் வீசத் தொடங்கும்.
சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம். அதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும் என்பது திண்ணம்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.
அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு விசேஷமான வழிமுறையை இப்போது நாம் காணலாம். ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க் கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நாம் கண்ட வழிபாட்டு முறைகளைப்போல், வலம்புரிச் சங்கை வைத்து நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாட்டு முறைகள் இன்னும் நிறைய நடைமுறையில் இருக்கின்றன.
வலம்புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்
1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.
வலம்புரி சங்கின் மகிமை
பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்தி சங்கம்’ என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும். ‘சங்கநாதம்’ பிரணவ நாதத்தைப் பிரதி பலிப்பதாகும். அதன் சப்த அலைகளால் சுற்றுச் சூழலில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகியோடக்கூடிய தன்மையைப் பெற்றதாகும். தீய சூழ்நிலைகளை உண்டாக்கும் எதிர்மறை சக்திகள் வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் தமது சக்திகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அதிலிருந்து ஓம்கார ஸ்வரூப நாதம் தன்னியல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதன்பொருட்டே பல முக்கிய நிகழ்வுகளில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது.
வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா ஸ்ரூப நிலைகளும் எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை. அதிலும் விசேஷமாக ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையிலேயே நமது திருக்கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
அபூர்வ வலம்புரிச் சங்கு
சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இரண்டு வகையும் கடலில் வாழும் சங்கு இனப் பிராணிகள்தான். ஆனால் இந்துக்கள் என்ன காரணத்தால் வலம்புரிச் சங்குகளைப் புனிதமாகக் கருதுகின்றனர் என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வ காரணமும் கிடைக்கவில்லை. இவைகள் அபூர்வமாகக் கிடைப்பதாலும் விஷ்ணுவின் கையில் இருப்பதாலும் தெய்வப் பட்டம் சூட்டினரா என்றும் தெரியவில்லை.
வலம்புரிச் சங்குகள் பற்றிச் சமய நூல்களில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது பல கோவில்களில் நடைபெறுகிறது.
சங்குகளின் பெயர்கள்
கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’; பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு: தர்மன்- ‘அநந்த விஜயம்’ ,பீமன்- ‘பௌண்டரம்’ , அர்ஜுனன்-‘தேவதத்தம்’, நகுலன்- ‘சுகோஷம்’ , சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’.
சங்க இலக்கியத்தில் வலம்புரிச் சங்கு
தமிழ்ச் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வலம்புரிச் சங்கு பற்றிப் புலவர்கள் பாடுகின்றனர். அரண்மனைகளிலும் போர்க்களங்களிலும் எப்படி ஒலித்தது என்பதை பின்வரும் இடங்களில் படிக்கலாம்:
அக.201, 350; ஐங்குறு.193; கலி.135; திரு.23, 127; நெடு. 142, பதி. 67, பரி. 3-88, 13-44, 15-59; புற225, 397;பெரு.35; முல்லை.2
தருமி என்னும் ஏழைப் பிராமணப் புலவருக்குச் சிவபெருமான் பாட்டு எழுதிக் கொடுத்து அவன் ஆயிரம் பொன் பரிசு பெறும் தருணத்தில் அதை பாண்டியப் பேரரசின் தலமைப் புலவர் நக்கீரர் எதிர்த்தார். உடனே நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் வெடித்தது. அப்போது “சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?” என்று சிவபெருமானின் குலத்தையே கிண்டல் செய்தார் நக்கீரர். இதிலிருந்து வேளாப் பார்ப்பான் ( அக்கினி வளர்த்து யாகம் செய்யாத பார்ப்பனர்கள்) சங்கு வளையல் செய்து விற்றுவந்தது தெரிகிறது. இதற்குப் பின்னர் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை வாட்டிய போதும் “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தமிழுக்காக வீர முழக்கம் செய்தார் சங்கு அறு தொழிலில் ஈடுபட்ட நக்கீரன்.
இவ்வளவு இடங்களில் வலம்புரிச் சங்கைக் குறித்துப் புலவர்கள் பாடுவதே அதன் மகிமையை உணர்த்தும்.
திருமணத்தில் சங்கு
வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர். சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது.
சிவஸ்ரீ பாலசுந்தரக்குருக்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வரும் விஷயங்களைத் தருகிறார்: சங்க ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.
“ ஏ, பாஞ்சஜன்யமே ! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம் “ என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.
சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”
தட்சிணாவர்த்த(வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.
உலகின் பல மியூசியங்களில் தங்கக் கவசம் போடப்பட்ட சங்குகளை வைத்திருக்கின்றனர். இவை இந்தியக் கோவில்களில் இருந்து சென்றவை. பணக்கரர்கள் பல லட்சம் கொடுத்து வலம்புரிச் சங்கு வாங்குவதற்குக் காரணம் அவை அதிர்ஷ்டகரமானவை, நிறைய பணத்தைக் கொண்டு வருபவை என்று நம்புவதே.
தென் ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைக்கும் சில வகைச் சங்குகள் வலம்புரியாக இருந்தும் அவை இந்தியவகை போன்று புனிதமானவையோ விலை மதிப்புடையனவோ அல்ல.
பவுத்தர்களும் சங்கை புனிதமாகக் கருதுகின்றனர். அவர்களுடைய எட்டு மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று. ஆயுர்வேதத்தில் சங்குப் பொடியைப் பயன்படுத்துகின்றனர். சீனவிலிருந்தும் திபெத்திலிருந்தும் வரும் தங்கப் பிடி போட்ட சங்குகள் வெளிநாட்டு ஏலக் கம்பெனிகளில் பல லட்சம் பவுன் அல்லது டாலர்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
லண்டனில் உள்ள பிரிட்டிஷ்மியூசியம், நியூயார்க்கிலுள்ள மெட்ரோபாலிடன் மியூசியம் முதலியவற்றில் அரிய சங்குகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.பூஜை செய்யும் சங்குகளைத் தரையில் வைக்ககூடாது என்பதால் அதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் அழகான ‘ஸ்டான்ட்’ செய்துவைக்கின்றனர். திருவாங்கூர் மகாராஜா கொடியிலும் கூட சங்கு இடம்பெற்றது. Conch (சங்கு) என்னும் ஆங்கிலச் சொல் ‘சங்க’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததே!
முத்து, பவளம் ஆகியவும் கடலில் இருந்தே கிடைக்கின்றன. சோழிகளில் குறிப்பிட்ட வகையை ஒருகாலத்தில் பணமாகப் பயன்படுத்தினர். இவைகளும் கடல் தரும் செல்வங்களே.சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தினை தரிசிப்பது சிறப்பாகும்.ஒவ்வொரு கோயிலின் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை தரிசிப்பதால் பேறுகள் பல பெற்று வளமுடன் வாழலாம்.
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய கிருத்திகை நட்சத்திரம் கூடும் வேளையில் இறைவன் அக்னிப் பிழம்பாகத் திகழ்கிறார். ஆதலால் சோமவார சங்காபிஷேகம், ஆராதனை நடைபெறுவதாகச் சொல்வார்கள்.
திருவண்ணாமலை, திருக்கடையூர், திருவானைக்கா, குற்றாலம் மற்றும் பல திருத்தலங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்குகளில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வலம்புரி சங்கு. இந்த வலம்புரி சங்கினால்தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது சில அரிய பொருட்கள் தோன்றின. அவற்றில் வலம்புரி சங்கும் ஒன்று. இதனை லட்சுமியின் அம்சம் என்பார்கள்; பூஜைக்குரியதாகும். லட்சம் சங்குகளில் ஒன்றுதான் வலம்புரிச் சங்காக அமையும். இடம்புரிச் சங்கைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது வலம்புரிச் சங்கு. வலம்புரிச் சங்கு சுபகாரியங்களுக்கு மட்டும் பயன்படும்.
ஆனால் இடம்புரிச் சங்கு அனைத்துக் காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதனால் தான், ஆலயங்களில் வலம்புரிச்சங்கைப் பயன்படுத்துகிறார்கள். சில ஆலயங்களில் பூஜை முடிந்ததும் வலம்புரிச் சங்கினை ஏலம் விடுவார்கள். அதை வாங்கி இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும்.
சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து, காயத்ரி மந்திரம் ஜபித்து, காயத்ரி தேவியின் படம் அல்லது சிற்பத்துக்கு அருகே வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில் உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில் தங்கியிருப்பாள்.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்தநாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச் செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச் சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.
வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும் அண்டாது.
பகவான் கிருஷ்ணன் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும் பீமன் பௌண்ட்ரம் என்ற சங்கையும் போர்க்களத்தில் முழங்கியிருக்கிறார்கள். தர்மர், அனந்தவிஜயம் என்ற சங்கையும் நகுல சகாதேவர்கள் ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கியதாக பாரதப்போர் வரலாறு தெரிவிக்கிறது. இதற்கு எதிராக கௌரவர்களும் தத்தம் சங்கை முழங்கியுள்ளனர்.
சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ள துர்க்கையை விஷ்ணு துர்க்கை என்கிறோம். இதேபோல் சில தலங்களில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமன் வலம்புரிச் சங்கு !
பொதுவாக நமது இறை வழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு . தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது . தருமர் வைத்துள்ள சங்கு , ' அனந்த விஜயம் ' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, ' தேவதத்தம் ' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ' மகாசங்கம் ' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ' சுகோஷம் ' என்றும் , சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ' மணிபுஷ்பகம் ' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ' பாஞ்சஜன்யம் ' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .
சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும்.
No comments:
Post a Comment