Monday, June 6, 2016

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:-
1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.
2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.
3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.
4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.
5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.
6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.எந்த தெய்வங்களை வணங்கினால் உங்கள் குறை தீரும் - சித்தர் பெருமக்கள்

No comments:

Post a Comment