திரு ஆய்ப்பாடி என்னும் கோகுலம் :-
108 திவ்ய தேஸங்களில் வட நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேஸமாகும்.
திரு ஆய்ப்பாடி என்று ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேஸம் வடநாட்டில் , கோகுலம் என்று அழைக்கப்படுகிறது.
ஆக்ரா நகரத்திலிருந்தும், புது தில்லியிலிருந்தும் சுலபமாக செல்லக்கூடிய திவ்ய தேஸம். யமுனை நதியின் ஒரு பக்க்க் கரையிலே கோகுலமும், அதன் எதிர்புற கரிய்யிலே வடமதுரை திவ்ய தேஸமும் அமைந்துள்ளது.
ஸ்ரீ. பெரியாழ்வாரால் பத்து பாசுரங்களாலும், ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியாரால் ஐந்து பாசுரங்களாலும், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரால் ஏழு பாசுரங்களாலும் மங்களாஸாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேஸமாகும்.
ஸ்ரீ.பெரியாழ்வாரின் முதல் திருமொழியான திருப்பல்லாண்டு பாசுரங்களுக்கு அடுத்து இரண்டாம் திருமொழியான “ வண்ண மாடங்கள் சூழ் “ என்று தொடங்கும் ஹிருமொழியீன் இரண்டாம் பாசுரத்திலேயே , ஆழ்வார் , இத்திருத்தலத்தை மங்களாஸாஸனம் செய்துள்ளார். அந்தப் பாசுரம் -
“ ஓடுவார் விழுவார் * உகந்தாலிப்பார் * நாடுவார் நம்பிரான் * எங்குற்றானென்பார் * பாடுவார்களும் *பல் பறை கொட்ட நின்று * ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே * “
ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியார் , தம் திருப்பாவையின் முத்ல் பாசுரமான “ மார்கழித் திங்கள் “ பாசுரத்திலேயே இந்த திவ்யதேஸத்தை மங்களாஸாஸனம் செய்துள்ளார், இப்பாசுரத்தின் மூன்றாவது வரியில் “ சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் “ என்று. இதைத் தவிர நாச்சியார் திருமொழியில் நான்கு பாசுரங்களிலும் அருளியுள்ளார்.
ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருமொழியில், பல திருமொழிகளில் ஆறு பாசுரங்களிலும், சிறிய திருமடலில் “ ஆராத தன்மையனாய், ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி, சீரார் கலையல்குல் , சீரடிச் செந்துவர்வாய் “ என்றும் மங்களாஸாஸனம் செய்து அருளியுள்ளார்.
மதுராவிலிருந்து வசுதேவரால், யமுனை ஆற்றைக் கடந்து இங்கு அழைத்து வரப்பட்ட ஸ்ரீ.கிருஷ்ணன் , தம் இளம் வயதில் , இங்குள்ள கோபியர்களுக்கும், மற்றும் பலருக்கும், தன் நண்பர்களுக்கும் , அவரை எதிரியாக நினைத்தவர்களுக்கும், விளையாட்டுக் காட்டி, தன் மாய வித்தையில் அனைவரையும் ஆட்கொண்டு, ஆச்சரியமும் , ஆன்ந்தமும் பட வைத்த ஸ்தலம். இங்கு வசிப்பவர்கள், ஸ்ரீ.கண்ணன் வளர்ந்த இத்திருதலத்தில் தாங்கள் பிறந்து வாழ்ந்து வருவதை மிகப் பெருமையாகக் கருதுகிறார்களாம். இருக்காதா , பின்னே? ஸ்ரீ.கிருஷ்ணன் வாழ்ந்த திருத்தலத்திலே , பிறந்து , வாழ்வது என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை ?
அடியோங்கள் அனுபவித்த ஒரு முக்கிய வடநாட்டு திவ்ய தேஸம் திருஆய்ப்பாடி.
இங்குள்ள ஸன்னதியில் நடுநாயகமாக ஸ்ரீ.பலதேவரும், அவருக்கு வலப் பக்கம் ஸ்ரீ.நந்த கோபரும், இடப் பக்கம் ஸ்ரீ.ந்ந்தகோபரின் மற்றொரு மனைவியுமான ரோஹிணியும் எழுந்தருளியுள்ளனர். அடுத்த கீழ் தளத்தில் ஸ்ரீ.பலராமரும், அவருடைய மனைவி ஸ்ரீ. ரேவதியும், அவர்களை ஒட்டி ஸ்ரீ.கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர்.
No comments:
Post a Comment