ஞானம்;-
ஞானம் என்பது அடையக் கூடிய ஒன்றல்ல.ஒவ்வொன்றாய் இழந்தபின் மிஞ்சுவது தான் ஞானம்.தியானம் என்பது எண்ணங்களை வெல்லுவது அல்ல.அவற்றைக் கடந்து சென்று விடுவதுதான் தியானம்.மனிதனுக்காகத்தான் மதமே அன்றி,மதத்துக்காக மனிதன் அல்ல.மனிதத்தன்மை மறந்த மதம் யானையின் மதமே.விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு.தேவை கடல் அளவு,ஆனால் கிடைப்பது கை அளவுதானா?கையையேகடலாகநினைத்துக்கொள்.அறிவுக்கோ,விவாதங்களுக்கோ எட்டாததுதான் ஞானம்.தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.தெரிந்ததாக வேடம் பூணாதே.ஞானம் என்பது விவாதித்தல் அல்ல.விவாதம் கடைசியில் இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடும்.ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல.அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான்.சகிப்புத்தன்மை தான் ஞானத்தின் திறவுகோல்.சகிப்புத்தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
No comments:
Post a Comment