Showing posts with label Personality developments. Show all posts
Showing posts with label Personality developments. Show all posts

Monday, July 13, 2015

சித்தர் மயம்

சித்தர் மயம்
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!


260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.
மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

Saturday, July 11, 2015

ஆண், பெண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்...

ஆண், பெண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்...!

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடும் உணவுகளின் மூலம் ஆண் குழந்தை வேண்டுமா, பெண் குழந்தை வேண்டுமா என்பதை தீர்மானிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தையை விரும்பும் பெண்கள் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

பொதுவாகவே, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும். அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆவாளர்கள்!

‘ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாப்புள்ளது’ என்று கூறுகிறார்கள்  கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராச்சியாளர்கள்.

சரி ஆண்குழந்தைக்காக இத்தனை தூரம் ஆராச்சியெல்லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண்களுக்காக இதுபோன்ற ஆராச்சியெல்லாம் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டால், அதற்கும் ‘உள்ளேன் ஐயா’ என்று ஆஜராகிறார்கள் ஹாலந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராச்சியாளர்கள்!

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ‘சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அவற்றுக்குப் பதிலாக கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்’ என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராச்சியாளர்கள்.

இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராச்சியாளர்கள் கூறியவற்றுடன் அதாவது, ‘கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்ததோடு ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத் தன்மை மேலும் அதிகரிப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால், இந்த ஆராச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான்!
ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந்தைதானே!

Friday, July 10, 2015

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,
சூட்சுமமாக இருந்து நம்மைக்
காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை
வழிபடும் சூட்சும வழிபாட்டு
முறை: சில ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்புவரையிலும், ஆவி
வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில்
இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த
ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில்
மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை
முறை எப்படி இருக்கும்?" என்பதை
சிந்தித்தன் விளைவாக ஆவி
வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள்
மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிகளை
கோவில்களாக மாற்றினார்கள்.எந்த
மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக
இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை
வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை
அவரது ஜீவசமாதியின் மீது அல்லது
அருகில் பிரதிஷ்டை
செய்யப்பட்டது.பெரும்பாலான
மகான்களும்,சித்தர்களும் சிவனை
வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான
சிலர் விநாயகரையும்,
முருகக்கடவுளையும்,சக்தியையும்,
முனீஸ்வரரையும்,
கருப்பசாமியையும்
வழிபட்டிருக்கின்றனர்.அதனால்,அந்த
ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்
(ஒரே கோவிலுக்குள்) உரிய
தெய்வங்கள் அமைக்கப்பட்டு,கோவில்களாக
மாற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக சித்தர் போகரின்
வழிபாடு முருகக்கடவுளின்
வழிபாடு
ஆகும்.அதனால்,பழனிமலையில்
முருகக்கடவுளின் கோவில்
உருவானது.நாம் பழனி
முருகக்கடவுளை
தொடர்ந்து,முருகக்கடவுளின்
வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு
வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது
கோரிக்கைகளை
நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத்
தீர்ப்பார்;நோய்களைக்
குணப்படுத்துவார்;துன்பங்களை
நீக்குவார்;
ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட
வேண்டும்?
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால்
கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு
குறையாமல் டையமண்டு
கல்கண்டு,அரை கிலோவுக்குக்
குறையாமல் விதையில்லாத கறுப்பு
திராட்சைப்பழங்கள்,கொஞ்சம்
விதையில்லாத பேரீட்சைப்பழங்கள்
இத்துடன் கொஞ்சம்
வெற்றிலையும்,கொட்டைப்
பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு
நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு
வந்து பத்தி பொருத்தி,தேங்காய்
உடைத்து,கற்பூரம்
கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால்
கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில்
உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க
வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின்
முன்பு ஏற்ற வேண்டும்.
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி
வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி
களைத்துபோன நேர்மையாளர்கள்,
தங்களது நியாயமான பிரச்னைகள் தீர
திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7
மணிக்குள் இவ்வாறு 8
திங்கட்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம்
தெரியாதவர்கள்,குலதெய்வத்தின்
கோபத்துக்கு
ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை
மறந்தவர்கள்,குல தெய்வத்தை
அறியாமல் இருந்து ,அதனால்
கஷ்டப்படுபவர்கள் அனைவரும்
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு
மேல் 7 மணிக்குள் இவ்வாறு
வழிபாடு செய்ய வேண்டும்;இப்படி 8
செவ்வாய்க்கிழமைகளுக்கு
தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய
வேண்டும்;
வேலைக்குப்
போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும்
சுயதொழில் செய்பவர்கள்
பொருளாதார முன்னேற்றம் அடைய
விரும்புவோர்,புதன் கிழமைகளில்
மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள்
இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய
வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8
புதன்கிழமைகளுக்குச் செய்து வர
,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை
அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு
தகுந்த குருவைத்
தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில்
மாலை 5 முதல் 7 மணிக்குள்
இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய
வேண்டும்.இப்படி 8
வியாழக்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள்
இருப்போர்,பண நெருக்கடியில்
இருப்பவர்கள் அதிலிருந்து மீள
வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7
மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி
வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி
தொடர்ந்து 8
வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்தாலே போதுமானது;
பண நெருக்கடி,தொழில்
மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என
எல்லாவிதமான பிரச்னைகளும் தீர
விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5
முதல் 7 மணிக்குள் இவ்வாறு
ஜீவசமாதி வழிபாடு செய்துவர
வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8
சனிக்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்துவிட்டாலே
போதுமானது.
நீண்டகாலமாக வழக்குடன்
போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப்
பிரச்னையாக இருந்தாலும் சரி)
ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள்
மேற்கூறியவாறு ஜீவசமாதி
வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு
தொடர்ந்து 8
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
வழிபாடு செய்தால் போதுமானது.
இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள்
யாராக இருந்தாலும் சரி,அவர்கள்
கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை
அடியோடு நிறுத்தியாக
வேண்டும்;இது ரொம்ப
முக்கியம்.முட்டை,முட்டை கலந்த
கேக்,புரோட்டா என மறைமுக அசைவ
உணவுகளையும் தவிர்த்துவிட்டே
இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய
வேண்டும்.யார் எந்த ஊரில்
இருக்கிறார்களோ,அந்த ஊரில்
இருக்கும் ஏதாவது ஒரு
ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை
முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு
முதலியவற்றால் தொடர்ந்து 8
வாரங்கள் செய்ய
முடியாவிட்டாலும்,விட்டு விட்டு
செய்தாலும் போதுமானது.அதே
சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ
சமாதி வழிபாடுகளை பின்பற்றக்
கூடாது.எச்சரிக்கை!!!

வெற்றி வேண்டுமா உங்களுக்கு..??

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் "தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை" என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.
காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர். அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு..??
அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று "சுவாமி விவேகானந்தர்" இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போம்..!!
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.இந்த நாள் வெற்றி யடைய என் வாழ்த்து க்கள்!

Monday, July 6, 2015

ஞானம்

ஞானம்;-

ஞானம் என்பது அடையக் கூடிய ஒன்றல்ல.ஒவ்வொன்றாய் இழந்தபின் மிஞ்சுவது தான் ஞானம்.தியானம் என்பது எண்ணங்களை வெல்லுவது அல்ல.அவற்றைக் கடந்து சென்று விடுவதுதான் தியானம்.மனிதனுக்காகத்தான் மதமே அன்றி,மதத்துக்காக மனிதன் அல்ல.மனிதத்தன்மை மறந்த மதம் யானையின் மதமே.விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு.தேவை கடல் அளவு,ஆனால் கிடைப்பது கை அளவுதானா?கையையேகடலாகநினைத்துக்கொள்.அறிவுக்கோ,விவாதங்களுக்கோ எட்டாததுதான் ஞானம்.தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.தெரிந்ததாக வேடம் பூணாதே.ஞானம் என்பது விவாதித்தல் அல்ல.விவாதம் கடைசியில் இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடும்.ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல.அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான்.சகிப்புத்தன்மை தான் ஞானத்தின் திறவுகோல்.சகிப்புத்தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

Thursday, May 21, 2015

உடலில் நல்ல மாற்றங்கள் நிகழ

உடலில் நல்ல மாற்றங்கள் நிகழ....www.v4all.org

சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள்- தைலங்கள் விற்பனையாகின்றன! எப்போதும் ஒலி- ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?!

மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன. எப்படியென்றால்...

நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 - 5 மணி, மண்ணீ­ரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் வகை செய்யப்பட்டிருக்கிறது.

நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.

உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும்.

ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு- கசப்பு சுவையுடனும், மண்- இனிப்பு சுவையுடனும், காற்று - துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர்- உப்பு சுவையுடனும், ஆகாயம் - புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது.

இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி சாப்பிடுபவர்களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.

அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவுகள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்­ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?

வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீ­ர் பருக வேண்டும். பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்­ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்­ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.

மண்­ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்­ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும். அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

மண்­ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீ­ரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்­ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்­ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்­ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்­ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.

மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்­ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

Saturday, March 7, 2015

செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள்

செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள்


ஒருவர் சிறந்த செல்வ நிலையை அடைய கீழ்க்கண்ட எளிய முறைகளை-பரிகாரங்களை செய்து வரலாம். நம் முறைகள் அனைத்தும் மிக எளிமையானவையாக இருப்பினும் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்பது கடைபிடிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே நம்பிக்கையுடன் செய்து வர மிக உயர்ந்த செல்வ நிலையை அடையயலாம். அசைவ உணவு பழக்கம் இருப்பின் தவிர்த்தல் நலம். அனேக சுபத்தை அளிக்கும் கிரகங்களின் நன்மைகளை அசைவ உணவு பழக்கம் பாதிக்கும்-தடுக்கும். மேலும் சனி, ராகு கிரகங்களின் கோட்சார நிலை அல்லது ஜாதகத்தில் சரியில்லாத நிலை இருப்பின், அசைவ உணவு பல மடங்கு பாதிப்பு தரும். ராகு திசை, சனி திசை, ஏழரை, ஜென்ம, கர்ம, கண்டக சனி நடப்பவர்கள் அவசியம் தவிர்த்தல் வேண்டும். இல்லையேல் எந்த பரிகாரமும் பலன் தராது. இதை பற்றிய எம் பிரத்யேக காணொளி காட்சி ஒன்று தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும்.
(1) வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும். மேலும் வெள்ளை உடைகள் நல்லவற்றை, பணத்தை ஈர்க்க உதவும். அதை அதிகம் உபயோகித்தால் நலம் தரும்.
(2) செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி வியரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
(3) சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.
(4) வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.
(5) மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.
(6) குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.
(7) ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.
(8) வெள்ளை எள் உருண்டையை ஓடும் ஆற்றில் 43 நாட்கள் விட்டு வரலாம்.
(9) குங்கும பூவை உணவில் முடிந்த போதெல்லாம் சேர்த்து வரவும். தினசரி பசுவிற்க்கு மஞ்சள் லட்டு ஒன்று கொடுத்து வரலாம். மேலும் பசு வதையை தடுப்பது மிக சிறந்த நன்மையும், செய்த பாவங்களை, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கங்களையும் களையச்செய்யும்.
மேற்கண்ட முறைகளில் முடிந்தவர்கள் முடிந்தவற்றை செய்யலாம். ஏதாவது ஒன்று செய்தாலும் பயன் உண்டு. அனைத்தையும் செய்தாலும் பயன் உண்டு.

Friday, October 24, 2014

எதைப் பச்சையாக உண்ண முடியவில்லையே அது நமக்கான உணவு அல்ல.

எதைப் பச்சையாக உண்ண முடியவில்லையே அது நமக்கான உணவு அல்ல.
வாழைப் பழம், தேங்காய், பப்பாளி, சப்போர்ட்டா, கொய்யா, முந்திரிப் பருப்பு இவற்றையெல்லாம் சமைக்காமல் பச்சையாகவே உண்ண முடியும். இவையே மனிதனின் முதல் தர உணவு.
கீரை, கத்திரிக்காய், மக்காச்சோளம் இவையெல்லாம் கால்நடைகளுக்கு முதல் தரமான உணவு.
முள்ளங்கி முயல்களுக்கு முதல் தரமான உணவு.
கிழஙகு வகைகள் அவற்றைத் தோண்டித் தின்னும் பன்றிகளுக்கு முதல் தரமான உணவு.
சிறுதானியங்கள், பருப்புகள் குருவிகளுக்கு முதல்தரமான உணவு.
மனிதனின் முதல்தரமான உணவு பழங்களும் கொட்டைப் பருப்புகளும்தான்.
உணவு என்பது பசிக்காக ருசிக்காக அல்ல. (ருசி வேண்டுவோர்களுகள் கொய்யாப் பழத்துடன் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்து உண்பதை நான் பார்த்து கொதித்திருக்கிறேன்.)
உப்பு ஒரு கூட்டு நஞ்சு. முற்றிலும் விலக்கப்பட வேண்டியது. பழங்களில் இருக்கும் தாது உப்புகளே நமக்குத் தேவையானது.
உடல் மெலிய, சரியான ‍எடையைபெற தேங்காயும், வாழைப் பழங்களும் உண்ணுங்கள். இயற்கையான (சமைக்காத) உணவுகளை உண்ணும் பொழுது உங்களின் உயரத்திற்குத் தகுந்த எடை கிடைக்கும்.

Yours Happily 
Dr.Star Anand ram
Naturopathy Dr
Coimbatore 

Sunday, August 10, 2014

தமிழ் பெயர்களும், அவர்களின் தொழில்களும்

தமிழ் பெயர்களும், அவர்களின் தொழில்களும்
வைத்தியநாதன் -- Doctor
பல்லவன் -- Dentist
கேசவன் -- Lawyer
தனசேகரன் -- Financier
இருதயராஜ் -- Cardiologist
குழந்தைசாமி -- Pediatrist
மனோ -- Psychiatrist
காமதேவன் -- Sex Therapist
கல்யாண சுந்தரம் -- Marriage Counselor
கண்ணாயிரம் -- Ophthalmologist
நீலகண்டன் -- ENT Specialist
சக்கரபாணி -- Diabetologist
ஆரோக்கியசாமி -- Nutritionist
சொக்கலிங்கம் -- Hypnotist
மாத்ருபூதம் -- Exorcist
மாயாண்டி -- Magician
செங்கல்வராயன் -- Builder
சித்திரகுப்தன் -- Painter
கார்மேகம் -- Meteorologist
பச்சைப்பன் -- Agriculturist
புஷ்பவனம் -- Horticulturist
பூமிநாதன் -- Landscaper
சவுரிராஜன் -- Barber
பிச்சை -- Beggar
மதுசூதனன் -- Alcoholic
அம்பலவானன் -- Exhibitionist
நாவலன் -- Fiction writer
சிங்காரம் -- Makeup Man
பால் ராஜ் -- Milk Man
பசுபதி -- Dairy Farmer
நாயகன் -- Dog Groomer
நாகராஜன் -- Snake Charmer
ஏழுமலை -- Mountain Climber
வேலாயுதம் -- Javelin Thrower
தாண்டவராயன் -- Polevaulter
பலராமன் -- Weight Lifter
குண்டு ராவ் -- Sumo Wrestler
கைலாசம் -- Karate Expert
எத்திராஜ் -- Kick Boxer
பாலாஜி -- Bowler
திருப்பதி -- Spin Bowler
திரிப்புரசுந்தரி --- Female Spin Bowler
சாரதி -- Driver

urs 

www.v4all.org

Thursday, July 24, 2014

வருவதை எதிகொள்ளடா

A Mind Blowing Song....உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது



உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

www.v4all.org 
  

Thursday, July 17, 2014

பிசினஸ் இல் ஜெயிக்க- மறக்க கூடாத 10 விசயங்கள்

பிசினஸ் இல் ஜெயிக்க- மறக்க கூடாத 10 விசயங்கள் 

வெற்றி என்பது நொடியில் வந்து சேரும் விஷயமல்ல. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து அடைய வேண்டிய சிகரம் அது! அந்த சிகரம் தொட சில விஷயங்களை நாம் சரியாகச் செய்தாக வேண்டும். ஒரு தொழில்முனைவோர் நிச்சயமாக வெற்றி பெற எந்தெந்த விஷயங்களை சரியாகச் செய்யவேண்டும்எதில் அதிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்து பிஸினஸ் கன்சல்டன்ட் ராகவேந்திர ரவியிடம் கேட்டோம்… இதோ அந்தப் பட்டியல்.

1. வேண்டும் தனித்தன்மை!

பிஸினஸ் ஆரம்பிக்கும்முன் எப்படிப்பட்ட ஒரு தொழிலை நீங்கள் தொடங்கப் போகிறீர்கள் என்பதை ஆழமாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் தொடங்கும் பிஸினஸ் தனித்தன்மை உடைய தொழிலாக இருக்கிறதா என்று பாருங்கள். மனிதன் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவன். ஒருவர் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவரிடத்தில் ஒரு தனித்தன்மை ஜொலிக்கவே செய்கிறது. ஆனால் பிஸினஸ் என்று வரும்போது நமக்கிருக்கும் தனித்தன்மையை சுத்தமாக மறந்துவிட்டுபரிட்சை எழுதும் மாணவனைப் போல சுற்றும்முற்றும் பார்த்து காப்பிஅடிக்கிறோம்.

அந்த ஏரியாவில் நிறைய டீக்கடை இருக்கிறது. அங்கு இருக்கிறவர்கள் நிறைய டீகுடிப்பார்கள் போல!’ என்று நினைத்து நீங்களும் ஒரு டீக்கடை திறந்தால் அதுபத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும். ஏற்கெனவே ஒரு பிஸினஸூக்குப் போட்டியாக இன்னொன்றை நீங்கள் ஏன் தொடங்க வேண்டும்போட்டியே இல்லாத ஒரு புதிய பிஸினஸை ஏன் நீங்கள் ஆரம்பிக்கக்கூடாதுஅப்படி ஆரம்பித்தால்தான்உங்களுக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் உங்களுக்குநிலையான லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

2. முதலில் பணம்பிறகு பிஸினஸ்!

சிலர் ஏதோ ஓர் ஆர்வக் கோளாறில் தேவையான அளவு பணத்தை வைத்துக் கொள்ளாமலே தொழிலை நடத்தப் பார்க்கிறார்கள். விளைவு…? மூலப் பொருட்களை வாங்கஉற்பத்தி செய்யமார்க்கெட்டிங் செய்யஆட்களுக்கு சம்பளம் தர என எல்லாவற்றுக்கும் பணத்தைத் தேடி அலைய வேண்டியதாகிவிடுகிறது. அவசரத்துக்கு அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். நிறைய கடன் வாங்கியபிறகு பிஸினஸ் கொஞ்சம் சுணக்கம் கண்டாலும் கடன்காரர்கள் நம் கழுத்தை நெறித்துவிடுவார்கள். இந்தப் பிரச்னையைத் தவிர்க்கபோதிய அளவு பணம் இல்லாமல் பிஸினஸில் ஈடுபடாதீர்கள். உலகப் பிரசித்திப் பெற்ற பிஸினஸ் லீடர் ஹெரால்ட் ஜெனீன்பணம் இல்லாமல் இருப்பதே ஒரு முதலாளியோ அல்லது அவரின் மேனேஜரோ செய்யும் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்கிறார்

இதற்காக, ‘என்னிடம் பணமில்லைஎனவே நான் எப்படித் தொழிலை தொடர்வதுஎன்று மலைக்க வேண்டாம். பணம் உங்களுடையதாக இருக்கலாம்வங்கியில் கடன் வாங்கியதாக இருக்கலாம்உங்கள் கூட்டாளியின் பணமாக இருக்கலாம். வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்ததாகவும் இருக்கலாம். பிரச்னைகள் வராமல்இருக்கவேண்டுமெனில் உங்கள் கையில் பணம் இருக்கவேண்டும்.

நீங்கள் செய்யும் பிஸினஸில் அதிக லாபம் வரலாம்ஆனால் கையில் போதிய பணம் இல்லை என்றால் உங்களால் நீண்ட நாளைக்கு பிஸினஸில் தாக்குப் பிடிக்கமுடியாது. ஆனால் உங்கள் பிஸினஸில் லாபம் இல்லை என்றாலும்கையில் பணம் இருந்தால் நீண்ட நாளைக்கு உங்களால் பிஸினஸ் செய்யமுடியும். உங்களிடம் இருக்கும் பணப்புழக்கமே (cash flow) உங்கள் நம்பகதன்மையை அதிகரிக்கச் செய்யும்.வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் உங்களுக்கு இன்னும் கடன் கொடுக்கமுன்வரும்.

3. பணப்புழக்கம் மட்டுமே யதார்த்தம்!

பிஸினஸ் உலகில் ஒரு பிரபலமான சொற்றொடர் உண்டு. ‘Topline is vanity, Bottomline is sanity, but cashflow is reality. நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்உங்கள் நிறுவனத்தின் சொத்து லேசில் கரையாதபடிக்கு இருக்கலாம். இத்தனை இருந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதாஇல்லையா என்பதுதான் முக்கியம். அது மட்டுமே யதார்த்தம்மற்றதெல்லாம் மாயை. பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்னஎன்ன என்று யோசிக்கிறது.

நல்லசீரான பணப்புழக்கத்துக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கவனமாக பணத்தை வசூலிக்கவேண்டும். ஆனால் இது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. நீங்களும் சரிஅக்கவுன்ட் டிபார்ட்மென்ட்டில் இருக்கும் உங்கள் ஊழியர்களும் சரி,வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கும் போது புன்னகை தவழும் முகத்தோடு இருக்கவேண்டும். பணத்தை வாங்கும்போது நீங்கள் கடுகடுத்தமுகத்தோடு இருந்தால் நல்ல வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்கவேண்டியிருக்கும்.

 4. வாடிக்கையாளர் தொடர்பு!

ஒரு நல்ல பிஸினஸ்மேனுக்கு அழகுவாடிக்கையாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அந்தச் சேவையையோ அல்லது பொருளையோ கொடுத்தால் அவர்கள் உங்களை விட்டு வேறு இடத்துக்குப் போகவே மாட்டார்கள். புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் விற்பது லாபகரமாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

5. எண்களைக் கவனியுங்கள்!

உங்கள் நிறுவனத்தின் எண்களை எப்போதும் துல்லியமாக ஞாபகம் வைத்திருங்கள். விற்பனைலாபம்கடன்நிறுவனம் எப்போது பிரேக் ஈவன் (Break even) அடையும் என்பது போன்ற விஷயங்களை குழப்பமில்லாமல் தெரிந்து வைத்திருங்கள். உங்கள் பிஸினஸ் எப்போது பிரேக் ஈவன் அடையும் என்று உங்களுக்குத் தெரிந்தால்தான் தேவையான பணப் புழக்கத்தை உங்களால் கொண்டு வரமுடியும். பணப்புழக்கம் இருந்தால்தான் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் பிரேக் ஈவன் அடைவது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கக்கூடாது. அது குறைந்த பட்ச இலக்கு. லாபமும் நஷ்டமும் இல்லாத ஒரு நிலைதான் அது. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நீங்கள் தொடர்ந்து முன்னேறித்தான் ஆகவேண்டும்.

6. ஆலோசகர்களை உருவாக்குங்கள்!

உங்கள் நலன் விரும்பும் ஆலோசகர்களையும் நலன் விரும்பிகளையும் அதிகரித்துக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர்களிடம் தொடர்பில் இருங்கள். அவர்களிடம் அடிக்கடி பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது சம்பந்தமாக பயனுள்ள கருத்துக்களை அவர்கள் சொல்வார்கள்.

சில சமயம் நல்ல வாடிக்கையாளர்களைக்கூட உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்போது அவர்கள் உங்களுக்குப் பண உதவி கூட செய்ய வாய்ப்பிருக்கிறது. நம்புங்கள்வெற்றியடைந்த தொழிலதிபர்கள் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை நிச்சயம் ஊக்கப்படுத்துவார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள். ஒருவேளை அவர்கள் இல்லை என்று சொன்னால்கூட அதனால் பெரிய பாதிப்பு உங்களுக்கு வந்துவிடாது.

7. வாடிக்கையாளர்கள் பார்வையில் சிந்தியுங்கள்!

உங்கள் பார்வையில் பிஸினஸை நடத்தாதீர்கள். எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள். உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் ஒரு இமேஜ் இருக்கும். அதன்படிதான் பிஸினஸை நடத்துவேன் என்று நீங்கள் சொன்னால்வாடிக்கையாளர்கள் உங்களை வேறு விதமாக பார்ப்பார்கள். நீங்கள்வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிடவாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம்.

8. திட்டமிடுங்கள்!

ஐந்தாண்டுகளுக்கு பிறகு உங்கள் நிறுவனம் எப்படி இருக்கவேண்டும் என்று இப்போதே திட்டமிடுங்கள்கனவு காணுங்கள். இந்த கனவு உங்களுக்கு நம்பிக்கைஅளிக்கும். உங்கள் கனவை உங்கள் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்தகனவு நோக்கிச் செல்ல அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் கனவுயதார்த்தத்தில் நடக்காது என்று சொன்னால் அதற்காக கவலைப்படாதீர்கள். பிஸினஸ் உலகில் எல்லா கனவுகளும் சாத்தியம்தான்.

9. திரும்பிப் பாருங்கள்!

நீங்கள் கடந்து வந்த பாதையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள். அதாவதுஉங்கள் கணக்கு வழக்குகளைத் திருப்பிப் பாருங்கள். இதை எப்போதும் தவிர்க்காதீர்கள். அதேபோல கெட்ட செய்திகளை கேட்பதைத் தவிர்க்காதீர்கள். எல்லா கெட்ட செய்திகளும் தற்காலிகம்தான். ஆனால் இந்த கெட்ட செய்திகளை கேட்டுசரி செய்யாமல் இருப்பதுதான் உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் செய்யும் கெட்ட காரியம்.

10. ஒரே சிந்தனை!

மற்ற பிஸினஸ்களில் இருந்து உங்கள் பிஸினஸை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டே இருங்கள். இந்த தனித்தன்மையான சிந்தனைதான்போட்டி இல்லாத நிலையை உருவாக்கும்.

Yours Happily 
Jc.Dr.Star Anand 
www.v4all.org