நீங்கள் வாழும் இந்த பூமியே ஒரு காந்தத்தன்மை
கொண்டதுதான்.அதனால்தான் அதற்கு
வடதுருவம் தென்துருவம் என்று இரு
முனைகளைச் சொல்கிறார்கள்.நீங்கள் வாழும்
பூமி மட்டுமல்ல.இந்த பூமியில் தென்படும்
அனைத்துப் பொருட்களுமே ஈர்ப்புத்தன்மை
கொண்டதாகத்தான் படைக்கபட்டிருக்கிறது
அல்லது தானாகத் தோன்றியிருக்கிற
து.பொருட்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை
ஜீவராசிகளும் ஈர்ப்புத்தன்மை
கொண்டதாகத்தான் இருக்கின்றன.அந்த
ஜீவராசிகளில் நீங்களும் உள்ளடங்கித்தான்
இருக்கிறீர்கள்.
ஆக ஈர்ப்புத்தன்மை உங்களிடமும்
இருக்கிறது.காந்தப் புலம் உங்களிடமும்
இருக்கிறது.ஆனால் நீங்கள் எதை ஈர்க்கிறீர்கள்.
எதை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள்
என்பதில்தான் விஷயமே இருக்கிறது.
எப்போதுமே சமபலம் கொண்ட இரண்டு
பொருட்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதில்தான்
சுவாரஸ்யம் இருக்கிறது.சிறிது தம் கட்டி
அவற்றில் ஒரு பொருள் இன்னொன்றை ஈர்த்து
விட்டால் ஆட்டம் முடிந்தது.ஆனால் ஒரு பலமற்ற
பொருளும் இன்னொரு பலமான பொருளும்
ஒன்றையொன்று ஈர்க்கவே முடியாது.வலிமை
அதிகமான பொருள் வலிமை குறைந்த
பொருளை வேண்டுமானால் தன் பக்கம் எளிதாக
இழுத்து விட முடியூம்.அது பரஸ்பர ஈர்ப்பினால்
அல்ல.பலத்தினால் நடைபெறும் அந்த ஈர்ப்பில் அந்த
இழுவையில் எவ்வித நன்மையூம் இருக்காது.
இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம்.
நீங்கள் உங்களது வீட்டைத் தாண்டி வெளியில்
வந்து விட்டால் யார் யாரையெல்லாம் உங்கள்பால்
ஈர்க்கிறீர்கள்.அலுவலகத்தில் யாரெல்லாம்
உங்களிடம் வலிய வந்து பேசுகிறார்கள்.உ
ங்களோடு சரிசமமாகப் பணிபுரியூம்
மற்றவர்களா அல்லது உங்களுக்கு கீழே
பணிபுரிபவர்களா அல்லது கூப்பிடு அந்த
ஆளை என்று உங்களது நிறுவன தலைமை
செயல் அதிகாரி(சிஇஓ) உங்களிடம் பேச
வேண்டுமென்று விரும்பி அழைக்கிறாரா?
இவற்றில் எது உங்களுக்கு நன்மை பயப்பதாக
அதிக நன்மை பயப்பதாக இருக்கும்.
உங்கள் நிறுவன அதிகாரி உங்களை அழைத்துப்
பேச விரும்புவதுதானே.இதை அப்படியே பணம்
சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு திருப்பிவிட்டுப்
பார்ப்போம்.
நீங்கள் எது போன்ற இடங்களில் எல்லாம்
புழங்குகிறீர்கள் என்று முதலில்
ஆராயூங்கள்.நீங்கள் சாதாரண டீக்கடையில்
அமர்ந்து டீ அருந்துகிறீர்களா?சாதாரண
மலிவான ஹோட்டல்களில் உணவருந்துகிறீர்
களா?சாதாரண பிரான்டட் சட்டைகளை
அணிகிறீர்களா?உங்களது நண்பர்கள் உங்களைப்
போலவே சாதாரணமானவர்களா?முக்கியமாக
திருட்டு டிவிடியில் படம் பார்க்கிறீர்களா?
பைரட்டட் சாப்ட்வேர்களை கம்ப்யூட்டரில் பதிந்து
வைத்திருக்கிறீர்களா? இலவச சேவைகள் எங்கு
கிடைத்தாலும் அங்கே முதல் ஆளாகப் போய்
நிற்பீர்களா?சில ஆயிரங்கள் வருமானமாகவோ
லாபமாகவோ வந்தாலே திருப்திப்பட்டுக்
கொண்டு விடுவீர்களா?
அப்படியானால் நீங்கள் சில்லரைகளை ஈர்த்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.பதிலுக்கு
சில்லரைகள்தான் உங்களை ஈர்த்துக்
கொண்டிருக்கும்.ஒரு பணக்குவியல் ஒரு
பணக்கார அந்தஸ்து ஒரு சுபிட்சமாக சொகுசு
வாழ்க்கையை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ
உங்கள்பால் ஈர்க்க மறந்து விட்டீர்கள்.அதற்கு
பதிலாக ஒரு மிடில்கிளாஸ்தனத்தையூம் ஒரு
நடுத்தர வர்க்க வாழ்வையூம் நீங்கள் ஈர்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்.அதனால்தான் உங்களிடம்
அதிகமாகப் பணம் புழங்குவதில்லை.
சில்லரைகளும் சில ரூபாய்களும் சில
ஆயிரங்களுமே உங்களிடம் நிரந்தரமாக தங்கி
விடுகின்றன.
ஒரு கார் வாங்க நினைத்தால் கூட மாருதி
தாண்டி நீங்கள் யோசிக்கவில்லை என்றால் எந்த
காலத்திலும் உங்களால் ஆடி காரையோ
பிஎம்டபிள்யூ காரையோ அல்லது ஒரு கோடி
ரூபாய்களுக்கு மேல் விலையூள்ள காரை
நீங்கள் வாங்கவே முடியாது.
உங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
உங்களிடம் உற்சாகக் குறைவை
ஏற்படுத்தவில்லை.சிறிய வட்டத்தை விட்டு
சில்லரை வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்
என்றுதான் திரும்பத் திரும்ப பணம் தொடர்பான
எனது ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஒரு சொகுசான வாழ்க்கை.ஒரு ஆடம்பரமான
வாழ்க்கை.ஒரு மதிப்பான வாழ்க்கை.ஒரு
சந்தோஷமான வாழ்க்கை.ஒரு மேல்மட்ட
வாழ்க்கை உங்களுக்கு வேண்டவே வேண்டாமா?
வேண்டுமென்றால் சின்னச் சின்னதாய்
ஒவ்வொரு அடியாய் எடுத்து வையூங்கள்.அதற்க
ு முன்பாக சில்லரைத்தனமான சின்னத்தனமான
மிடில்கிளாஸ் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வாருங்கள்.இந்த கட்டுரையை பிரின்ட் எடுத்து
வைத்துக் கொள்ளுங்கள்.பிரின்ட் எடுத்து
உங்களது சட்டைப் பையில் மடித்து வைத்துக்
கொள்ளுங்கள்.உங்கள் ஊரிலுள்ள மிக உயர்ந்த
ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்லுங்கள்.அந்த
ஊரிலேயே அதுதான் நம்பர் ஒன் ஹோட்டலாக
இருக்க வேண்டும்.உங்களிடம் கார் இல்லாமல்
இருக்கலாம்.ஏன் டூவீலரில் கூட டிவிஎஸ்50தான்
இருக்கும் என்ற நிலை கூட இருக்கலாம்.ஒரு
நாள் மாலை நேரம் அந்த ஹோட்டலுக்கு
செல்லுங்கள்.அங்கேயூள்ள ரெஸ்டாரென்ட்டிற
்குச் செல்லுங்கள்.வேறு எதுவூம்
வேண்டாம்.ஒரே ஒரு காபி அல்லது டீ மட்டும் ஆர்டர்
செய்யூங்கள்.அதன் விலை பலநுரறு
ரூபாய்களாகக்க கூட இருந்து விட்டுப்
போகட்டும்.அதற்கான பணத்தை வைத்துக்
கொள்ளுங்கள்.
ஆர்டர் செய்த காபி டேபிளுக்கு வருவதற்குள்
அந்த இடத்தை நிதானமாக ஒரு பார்வை
பாருங்கள்.அங்கே அமர்ந்துள்ள மேல்தட்டு
மனிதர்களையூம் நிதானமாக ஒரு பார்வை
பாருங்கள்.அதன்பின் நீங்கள் பிரின்ட் எடுத்து
வைத்திருக்கிற இந்த கட்டுரையை மெதுவாக
உதடு முணுமுணுக்க சப்தமில்லாமல்
வாசித்துப் பாருங்கள்.மீண்டும் மடித்து சட்டைப்
பையில் வைத்துக் கொண்டு மறுபடியூம் அந்த
சுற்றுப் புறத்தை அந்த மேல்தட்டு மனிதர்களை
அங்கேயிருக்கிற உயர்ரக கார்களைப் பார்த்துக்
கொண்டே துளித்துளியாக அந்த காபியை
அருந்தி முடியூங்கள்.அதன்பின் பணமும்
டிப்ஸூம் வைத்து விட்டு மெதுவாக ஒரு கம்பீர
நடை போட்டு வெளியே வாருங்கள்.
நீங்கள் அந்த ஆடம்பர ஹோட்டலை விட்டு மட்டும்
வெளியே வரவில்லை.உங்களது மிடில்கிளாஸ்
என்னும் ஏழ்மை வட்டத்திலிருந்தும் வெளியே
வந்து கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
தொலைவில் உங்களுக்கான பெரும் பணம்
காத்துக் கொண்டிருக்கிறது.ஒரு மிகப் பெரிய
பணக்காரரான உங்களுக்காக.
மீண்டும் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment