Sunday, May 3, 2015

தோல்வியின் மூலம் எப்படி வெற்றி அடைவது?

தோல்வியின் மூலம் எப்படி வெற்றி அடைவது?

இந்த உலகத்தில் பிறந்த மா மனிதர் அவர். அவர் கண்டுபிடித்த பல உபகரணங்களினால் இந்த மனித இனம் இன்று மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டு இருக்கிறது . ஒன்றல்ல இரண்டல்ல1093 கண்டுபிடிப்புகள். அவற்றில் சில மின்சார விளக்கு, சினிமா படம் எடுக்கும் கேமரா. இது போன்று மீதம் உள்ள கண்டுபிடிப்புகள்.

இவைகள் எல்லாம் ஒரே சிந்தனையில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. பல ஆயிரம் தடவைகள் தோற்று போய் துவண்டுபோகாமல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை.

அவர்தான் தி கிரேட் தாமஸ் ஆல்வா எடிசன். 

ஆனால் இவர் படிக்கும் காலத்தில் அசிரியர்களிடத்து இவருக்கு என்ன பெயர் தெரியுமா?

” எதையுமே கற்றுக்கொள்ள தெரியாத முட்டாள்” .

இவர் சம்பளத்துக்கு நிறுவனங்களில் வேலை செய்யும்போது இவருக்கு கிடைத்த பெயர் என்ன தெரியுமா “ஒன்றுக்குமே லாயக்கு இல்லாதவன், பிரயோஜனம் இல்லாத ஆள்” .

அப்படிப்பட்ட அந்த அறிய மனிதர் கண்டுபிடித்த மின்சார விளக்கு இன்று இல்லாத இடமே இல்லை. வீடுகள் ஆகட்டும், வர்த்தக நிறுவனங்கள் ஆகட்டும் எங்கும் ஒளி மாயம். அந்த மின்சார விளக்குகளில் உண்டாகும் ஒளியை கொண்டு எத்தனை வர்த்தக நிறுவனங்கள் ஆயிரங்களையும், லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் ஆல்வா எடிசன் படத்தை வியாபாரிகள், நிறுவனங்கள் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிடவேண்டும்.

மின்சார விளக்கு இல்லையென்றால் என்னவாகும் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்க்க வேண்டும். வீடுகளில், தெருவில் அவர் கண்டுபிடித்த மின்சார விளக்கு இல்லை என்றால் என்ன ஆகும், வெளிச்சம் இருக்கும்போதே பல தவறுகள் நடக்கின்றன, இல்லையென்றால் என்னவாகும், சிந்தித்து பாருங்கள்.

திரைப்பட துறை என்பது கோடி கோடியாக கொட்டி கொண்டு இருக்கும் ஒரு அருமையான தொழில். இந்த தொழில் மூலம் கோடீஸ்வரர் ஆன, கோடீஸ்வரர்களாக ஆகி கொண்டு இருக்கும் நடிகர், நடிகையர், இயக்குனர்கள், cameraman போன்ற எண்ணற்ற திரைப்பட கலைஞர்கள் இந்த உலகம் முழுதும் வியாபித்து இருக்கிறார்கள். அவர்களும் தாமஸ் ஆல்வாஎடிசனை பூ போட்டு கும்பிடவேண்டும். ஆம், அவரது கண்டுபிடிப்பில் உருவான motion கேமராமட்டும் இல்லையென்றால் ஏது இத்தனை சினிமா துறை கோடீஸ்வரர்கள்.

தாமஸ் அல்வா எடிசன் தோல்வி அடைந்ததை பற்றி கவலை படாதவர்.

“மின்சார் பல்பு கண்டுபிடிக்க 1000 தடவை தோற்று போகும்போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது” என்று ஒருவர் கேட்டபோது அவர் சொன்ன பதில் “யார் சொன்னது நான் 1000தடவை தோற்றேன் என்று, 1000 வழிமுறைகளை கடந்து நான் மின்சார பல்பை கண்டுபிடித்தேன், என்பதுதான் உண்மை ” என்று கூறினாராம் .

மின்சார பல்பை கண்டுபிடிக்க ஒவ்வொரு தடவையும் அவர் தோற்று போகும்போது, அதை தோல்வியாக எண்ணாமல் “அடுத்த காலடி எடுத்து வைப்பதர்க்கான வாய்ப்பாகத்தான் கருதினேன் “என்று கூறுகிறார்.

தாமஸ் அல்வா எடிசியன் தோல்வியை பற்றி எப்போதுமே கவலை படுவதில்லை. அவர்அடிக்கடி சொல்வது “நான் தோற்க வில்லை, ஆனால் எதுவெல்லாம் சரியல்ல என்பதை உணர எனக்கு 10000 தடவை ஆகியது, அதுதான் நிஜம்” என்பாராம்.

தோற்று போய் இனி இது நமக்கு லாயக்கு படாது என்று ஒரு செயலை விட்டு விலகும்போது, வெற்றி அவர்களுக்கு மிக அருகாமையில் இருக்கும். அதை உணராமல் தோற்றுவிட்டோம் என்று பலர் விலகி விடுகின்றனர்.

தோல்வியை பற்றி தவறான கண்ணோட்டத்துடன் நம்மிடையே இன்று நிறைய பேர் இருக்கின்றனர். எடிசனை போன்று தோல்வியை தோல்வியாக கருதாமல் அவை நாம் அடுத்து எடுத்துவைக்க போகும் அடிக்கு படிகட்டாக நினைத்தோம் என்றால் நிச்சயம் தோல்வியை கண்டு துவளமாட்டோம். உற்சாகம் தான் அடைவோம். 

ஆனால் இதுபோன்று நினைப்பதற்கு உங்கள் மனமும் இடம் கொடுக்க வேண்டும். அதுபோன்று நினைப்பதற்கு உங்கள் மனதையும் நீங்கள் பழக்க வேண்டும். மனதை பழக்குவதற்கு தியானம் என்ற அறிய கருவியின் மூலம் தான் முடியும். தியானம் மட்டும்தான் உங்கள் மனதை ஊடுருவி சென்று உங்கள் மனதை உங்கள் வசப்படுத்தி தோல்வியை கண்டு துவள செய்யாமல் செய்யும் அற்புத மருந்து.

Yours Happily
Dr.Star Anand Ram
Self motivation Trainer 
9790044225
www.v4all.org

No comments:

Post a Comment