Tuesday, May 5, 2015

யானையின் முயற்சி!!!

யானையின் முயற்சி!!! - www.v4all.org 

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது,

இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.

அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான்.

இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம்.

அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம்.

தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்…!

முயற்சிக்க மறந்தாலும் பகிர மறக்காதே ..!

Yours Happily
Dr.Star Anand Ram
Self motivation Trainer 
9790044225
www.v4all.org

No comments:

Post a Comment