Thursday, September 3, 2015

ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!
மனிதர்களின் மன நிலை, யோசிக்கும் திறன், மூளையின் செயல் திறன், உடல் நலம், மன நலம் இவற்றுடன் தொடர்புள்ளவை நிறங்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.
சிவப்பு நிறம் எதனையும் வெற்றி கொள்ளும் தன்மையையும் பாதுகாக்கும் தன்மையையும் அளிக்கிறது.
பழுப்பு நிறம் சுயநல எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.
பச்சை நிறம் ஒருவரின் மன உறுதியை வெளிப்படுத்தும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
மஞ்சள் நிறம் உயர்ந்த கொள்கைகளையும் நோக்கங்களையும் கொடுக்க வல்லது. மூளை செயல்திறன் குறைவாக உள்ளவர்கள் முன்னேற்றம் காண உதவும். ஆன்மிக எண்ணத்தைப் பிரதிபலிக்கும். மனோ தைரியத்தையும், அறிவுத் திறமையையும், சுறுசுறுப்பாக இயங்கும் செயல்திறனையும் அளிக்கும்.
நீல நிறம் உற்சாகத்தை வழங்கும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தவும் பயன்படும். நட்புறவு, மகிழ்ச்சி, அமைதி நிலவ உதவும்.
ஊதா நிறம் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும் சுபாவத்தைக் கொடுப்பது. ஆராய்ச்சி எண்ணங்களையும் படைப்பாற்றலையும் அளிக்கும். தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி நிலைபெறச் செய்யும்.
வெள்ளை நிறம் தியாக சிந்தையையும் தன்னலமற்ற குணத்தையும் தருகிறது.

No comments:

Post a Comment