பணம் இருந்தால் மகிழ்ச்சியாய் வாழ முடியுமா?
பணம் மனித வாழ்க்கையின் பிரதான தேவைகளில் ஒன்றாகி விட்டது. பணம் நம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அவசியம் தேவைப்படுகிறது.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று சொல்லுவார்கள். இன்று குணம் உள்ளவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணம் உள்ளவர்கள் முன் வரிசையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
பணத்தால் பல விஷயங்களை வாங்க முடியும் என்பது உண்மை தான். பணத்தால் கார் வாங்க முடியும். வீடு வாங்க முடியும். ஏன், மகிழ்ச்சியைக் கூட ஓரளவுக்கு வாங்க முடியும். நல்ல வாழ்க்கைத் துணையை கூட அடைய முடியும். புகழைக் கூட பெற முடியும்.
ஆனால் பணத்தால் உண்மையான மகிழ்ச்சியை, இயற்கையான ஆரோக்கியத்தைத் தர முடியுமா?
உணவு, உடை, இருப்பிடம் இல்லாதவருக்கு பணம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். ஆனால் அதே பணம் அந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆன
பின் அதே மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஒரளவக்கு மேல் பணத்தால் அதிக மகிழ்ச்சியை தர முடிவதில்லை.
பின் அதே மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஒரளவக்கு மேல் பணத்தால் அதிக மகிழ்ச்சியை தர முடிவதில்லை.
பில் கேட்ஸ் ஒரு நாளைக்கு 10 முறை சாப்பிட முடியுமா? அல்லது ஒரே நேரத்தில் 3 காரில் தான் செல்ல முடியுமா?
பணத்தால் நிறைய விஷயங்களை வாங்க முடியும் தான். ஏன் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கூட ஓரளவுக்கு வாங்க முடியும். ஆனால் உண்மையான மகிழ்ச்சியை, நிரந்தரமான சந்தோஷத்தை பணத்தால் நிச்சயம் வாங்கவே முடியாது என்பது தான் நிஜம்.
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பணம் சம்பாதிப்போம். ஆனால் சம்பாதிப்பதற்ககாகவே வாழ்க்கையை ஒரு போதும் வாழ வேண்டாம்.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment