இது ஒரு மன வேதனை அதிர்ச்சி பகிர்வு...கவனம்.www.happy4all.org
கலப்படம்...தலை முடி அவுட்...
உணவில் சேர்த்தால் வியாதி....
தற்போது பாக்கெட்டுகளில்அடைத்து விற்கப்படும் சில கம்பெனி தேங்காய் எண்ணெய், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை.
தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமையான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காய வைத்து செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல்லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது.
ஆனால் சமீப காலமாக பெரும்பாலான கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயே இல்லை.
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .
பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும், தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
பல கம்பெனிகள் தேங்காய் எண்ணெயை மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்கிறார்கள்.
அவர்கள் பொய் சொல்வதில்லை.
உண்மையை அவர்களின் தயாரிப்புக்களின் மேல் அட்டையிலேயே (லேபிள்) அச்சடித்தும் இருக்கிறார்கள்.நாம்தான் பார்த்துப் படித்து புரிந்து கொள்வதில்லை.
மினரல் ஆயில் என்றால் என்ன ?..
பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதில் பெட்ரோலியப் பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ இதை இப்படியும் சொல்வார்கள்”சீமை எண்ணெய் – சீமெண்ணெய்” .
இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .
எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .
மினரல் ஆயிலில் உருவாகும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். அரிப்பு வரும், குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மேலும் ஆபத்தானது. இந்த மினரல் தேங்காய் எண்ணெய்யை உணவுக்குப் பயன்படுத்துவது இன்னும் கொடுமையானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.
நாம் முன்பெல்லாம் பனிக்காலங்களில் நம் வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் உறைந்து போய் விடும். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெய் உறைவதில்லை. இதை யோசித்திருக்கிறோமா?
ஆனால் அதே சமயம் பெரும்பாலான எல்லாக் கம்பெனி எண்ணெய் பாட்டில்களின் மேலே லேபிளில் ஒரு முக்கியமான விஷயம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது இதுதான்.
“STORE IN A COOL & DRY PLACE PROTECTED FROM SUN LIGHT”
புரிந்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயாக இருந்தால் குளிர் காலத்தில் உறைந்து போகும். வெயிலில் வைத்து உபயோகிப்போம். ஏனெனில் அது உண்மையான தேங்காய் எண்ணேய். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெயை குளிர்ந்த, வறட்சியான இடத்தில் வைக்க சொல்கிறான். கூடவே வெயில் படாமல் வைக்கவும் சொல்கிறான்.
ஏனெனில் வெயில் பட்டால் மண்ணெண்ணெய் ஆவியாக ஆரம்பித்து விடும்.
என்ன ஜாக்கிரதை பாருங்கள்!?.
இதை விட இன்னொரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கை.
Warning : For External use only .
Keep out of reach of children to avoid
accidental drinking; and inhalation
which can cause serious injury.
Discontinues use if skin irritation occurs
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
எச்சரிக்கை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
தற்செயலாக குடிப்பதையோ, நுகர்வதையோ தவிர்க்கவும்,
ஏனெனில் அவை மோசமான தீங்கை உண்டாக்கும்.
தோலில் எரிச்சல் ஏற்பட்டால் உபயோகிப்பதை நிறுத்தவும்.
இரண்டு எலும்பும், ஒரு மண்டை ஓடும் போட்டு அபாயம்னு சொல்லவில்லை. அவ்வளவுதான். இது நான் சொல்லவில்லை குழந்தைகளுக்கென்றே பிர்த்யேகமாக பொருட்களை தயாரித்து விற்கும் புகழ்பெற்ற ஜான்ஸன்ஸ் & ஜான்ஸன்ஸ் கம்பெனி அதன் ஹேர் ஆயில் லேபிளில் சொல்கிறது.
# குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஆயிலையே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க சொல்கிறது.
# எண்ணை வாய்க்குள் போகவும், சுவாசிக்கும் போது மூச்சுக் காற்றோடு உள்ளே போகவும் வாய்ப்பிருக்கும்போது அது மோசமான தீங்கை உண்டாக்கும் என்கிறது.
# எரிச்சல் வந்தால் நிறுத்துஎன்கிறது.
நம்ம பாப்பா எரிச்சல்னு சொல்லி பேசத் தெரியுமா? யோசியுங்கள் நண்பர்களே!.
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.
மாய வலையில் வீழாதீர்கள்...
இந்த எண்ணை மட்டுமல்ல.
எல்லா எண்ணெய்யும் இதே
கதைதான்!?
வாழ்க கலப்பட தமிழகம்...
வளர்க சுகாதாரத் துறை...
அழிக மக்கள்!!!???
இதை மீண்டும் மீண்டும் ப[truncated by WhatsApp]
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.
10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)
ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)
இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)
கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)
இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)
அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese)
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek)
கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)
இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)
5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.
No comments:
Post a Comment