Tuesday, September 22, 2015

விடியலை நோக்கி - “The best way to find yourself

விடியலை நோக்கி….





“The best way to find yourself is to lose yourself in the service of others” – நமது தேசத் தந்தையின் பொன்மொழிகள் இவை.  காந்தி செய்த அரசியலும், இன்றைய தலைவர்கள் செய்யும் அரசியலும் முற்றிலும் நேர்மாறானது. காந்தியடிகள் அரசியலை ஒரு சேவையாக (Service) செய்தார்.  இன்றைய தலைவர்கள் அரசியலை தன்னை வளர்த்துக் கொள்தற்கான ஒரு தொழிலாகக் (Profession) கருதுகிறார்கள்.

சரியான வழிகாட்டல்

“எந்தக் குழந்தையும்நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன்
ஆவதும் தீயன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே!”

சிறுவயது முதல் மனித சமுதாயத்திற்குத் தேவை சரியான வழிகாட்டல், தன்னலமற்ற அன்புடன், தனது குழந்தையின் உயர்வுக்காகப் பாடுபடும் அன்னையப்போல், தனது நாட்டு மக்கள் உயர்வினைக் கருத்தில் கொண்டு பாடுபடும் தலைமையே சரியான வழிகாட்டுதலாக அமைய முடியும்.  தனது பெண்டு,பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் செயலினால்தான் இன்று சமுதாயம் தடம் மாறுவதாகக் கூறினார் பெரியார்.

தலைமைப் பண்புகள்

The king must be the Philosopher Ruler என்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ, எத்தனை சரியான வரிகள்.  தத்துவவாதியான ஒருவனுக்குதான் பண்பற்ற மற்றும் இவ்வுலகத் தேவைகளை சரியாகக் கணிக்கின்ற பக்குவம் இருக்கும்.  இவர் இந்த சமுதாயத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்.

ஒன்று Appetite Group இரண்டு Reasoning Group மூன்று Spirit Group.  பெரும்பாலும் சமூகத்தின் 98 சதவிகித்த்தை ஆக்கிரமிப்பது இந்த Appetite Group தான்.  அவர்கள் தான் மற்றும் தனது நிம்மதியான வாழ்வுடன் திருப்தி அடைவர்.  இவர்கள் ஆளும் திறமை அற்றவர்கள். இவர்களால் பின்தொடர்ந்து மட்டும்தான் செல்ல முடியும்.  ஆனால் மீதமுள்ள இரண்டு சதவீதத்தினர் அதாவது Spiritமற்றும் ReasoningGroup யை சேர்ந்தவர்களே ஆளப்பிறந்தவர்கள்.  அதாவது தலைமைப்பண்பு கொண்ட தத்துவவாதிகள்,முக்கியமாக பிறருக்காக சிந்திப்பவர்கள்.இந்த தத்துவவாதிகளை மட்டும் தலைவர்களாக நாம் ஏற்றுக் கொள்ளும் பாங்கு உருவாக வேண்டும் அல்லது தலைமை விரும்பும் இளைஞர்கள் தத்துவ வாதிகளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் மாட்சிமையுடைய சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இலட்சிய இலக்கு

மாக்கியவல்லியின் கூற்றுப்படி ஒரு அரசனாகப்பட்டவன் எந்த வழியிலாவது தனது நாட்டின் இலட்சிய இலங்கை அடையத் தயாராக இருக்கவேண்டும்.அவனுக்கு தனது நாட்டின் முன்னேற்றமே இலட்சியமாக இருக்க வேண்டும்.  ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். ஆனாலும் தனது நாட்டின் மீது தன்னலமற்ற அன்பு கொண்டிருந்தார்.

தேவை சரியான தலைமை

“தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி” . தலைமையை உருவாக்கும் பெரும் பொறுப்பு யாருக்கு உள்ளது? இச்சமூகத்திற்கு,அதாவது நமக்கு சிறுவயது முதலே குழந்தைகளை,சமுதாய அக்கறை கொண்ட மனிதனாக வளர்க்க வேண்டும்.இன்று சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டு திக்குத் தெரியாமல் தவிக்கும் பலருக்கு அரசியல் ஒரு புகலிடமாக உள்ளது. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்ற பெர்னாட்ஷாவின் கூற்றை இது மெய்ப்பிப்பதாக உள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.  சிறந்த வல்லமையுடைய மனிதர்கள் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார் பிளாட்டோ அந்த வல்லமையுடைய மனிதனுக்கு தலைமை ஏற்று நடத்த நாம் வாய்பளிக்க வேண்டும்.

“உலகத்தின் வரலாறு என்பது அது தனி மனிதர்களின் வரலாறுதான்!  ஆனால் அந்த தனி மனிதர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்” என்றார் விவேகானந்தர்.  தன்னம்பிகை மிக்க, தன்னலமற்ற தனி மனிதர்களை தலைவர்களாக்குவதன் மூலம் நமது தேசத்தின் வரலாற்றை மாற்றி அமைப்போம். விடியல் மிக அருகில் உண்டு.

No comments:

Post a Comment