Saturday, September 5, 2015

வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் தனிச்சிறப்புப் பண்புகள்

வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் தனிச்சிறப்புப் பண்புகள்
சான்றிதழ்
கொல்லெட் பால்
Collette PaulSTM Media Inc. வியாபார சஞ்சிகைகள் வெளியீட்டாளர்
"நீங்கள் எந்தத் வியாபாரத்தை ஆரம்பித்தாலும் நிதி சார்ந்த பொறுப்புகளை முகங்கொடுத்து பேணிக்கொள்ளும் திறமையுடன் இருக்கவும்"
Transcription - html
தைரியம்::அதாவது உங்களுக்கென்று சொந்தத் வியாபாரத்தை வைத்துக்கொள்ளவேண்டுமென்ற தீராத ஆசை வைத்துக் கொள்வதற்கான தெரழில் முனைவோருக்கு இருக்கும் ஒரு இயல்பூக்கமே தைரியமாகும். உங்கள் இலட்சியத்தை அடைவதில் தைரியமும், அர்ப்பணிப்பும் முழுமையாக வேண்டும். நீங்கள் நினைத்த வியாபாரத்தின் மீது உங்களுக்கு காதல் இருந்தால், உங்கள் இலட்சியத்தின் மீதான பக்தி இன்னும் கூடுதலாக இருக்கும். வாழ்க்கை குறுகிய காலமே உள்ளது, எனவேஉங்களுக்கு திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்காத ஒரு வியாபாரத்தை ஆரமபிக்க முடியாது. மேலும் நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் ஆகியவற்றின் வழியே உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றிக் கொள்ளவும்.
அறிவுத்திறன்: ஒரு முறையானக் கல்வித் தகுதிகள் முக்கியமானது என்பதோடு அதே வேளையில், ஒரு தொழில் முனைவோருக்கான"மூளைத்திறன்" என்பது வெறும் இடைக்கால சாதனைகளைக்காட்டிலும் கூடுதலானது ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராக நீங்கள் உருவாக, நீங்கள் ஆரம்பிக்கும் வியாபாரத்தைப்பற்றிய ஒரு நடைமுறை அறிவு வியாபாரத்தை நீங்கள் தொடங்கும் முன்னரே தேவை. நடைமுறை அறிவு, மற்றும் சரியான அனுபவம் இணைந்து உருவாவதே தேவையான அறிவாற்றல். செயலறிவு,நடந்தவற்றை பின்பற்றிச் செல்லுதல், மற்றும் விபரத்திற்கான கவனம், ஆகியவைமிக முக்கியம்.
மூலதனம்: முதலாம் ஆண்டில் குறைந்தது உங்கள் சொந்தப்பணம், மற்றும் ஒரு காசுப் பாய்ச்சலை பேணிக்கொள்ள போதுமான அளவு முதலீடு ஆகியவை உங்களுக்கு தேவை. எதிர்கால அமர்வில் காசுப்பாய்சல் கட்டுப்பாட்டின் மூலம் எதிர்கால பணத்தேவைகளை கணிக்க நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். சிறிய அளவில் குறைந்த முதலீட்டுடன் பல வியாபாரங்ள் ஆரம்பிக்கப்படலாம் . பிறகு வியாபாரம் வளர வளர உங்கள் அனுபவம் கூடும், உங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் பணப்பெருக்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பிறரை சேர்த்துக் கொள்ள உங்களுக்கு ஆரம்ப மூலதனம் தேவையில்லாமல் இருக்கலாம் ஏனெனில் முதலில் அனைத்தையும் நீங்களே செய்பவராகக் கூட இருக்கலாம். தாமாகவே"செய்யுங்கள்"என்ற கொள்கை அனைத்தையும் கற்றுக் கொள்ளவும், பிறருக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கவும் கற்றுக்கொள்ள சிறந்த வழி. உங்கள் வியாபாரத்திற்கு இடும் மூலதனத்திற்கு வரையறை வைத்துக் கொள்வதன் மூலம் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment