விரிவாக்குவதற்குமுன்னா் பின்பற்ற வேண்டிய விதிகள்
உங்கள் வியாபாரம் ஆரம்பிக்ப்பட்ட உடன், அதனை வளர்ப்பதில் உள்ள சவால்களை நீங்கள் எதிர்நோக்குவீர்கள். இந்த அமர்வில் விரிவாக்கத்திற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விதிகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
உங்கள் வியாபாரத்தை வளர்ப்பது பற்றி சிந்திக்கும் முன்னா், உங்கள் வளர்ச்சியைத் தொடங்கத் தேவையான ஒரு நிலையான அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் தொடக்க நடவடிக்கையில் பிழைகளைச் சரி செய்ய வேண்டும், இதில் இலாபத்தன்மையை அதிகரிப்பதும்அடங்கும்.
உங்கள் ஆரம்பத் தொழிலின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் அனுபவம் பெற்றிருந்தால், நீங்கள் உங்கள் தொழிலிலை விரிவுபடுத்துவதற்கான நிலையில் சிறந்து விளங்கியுள்ளீர்கள் எனப் பொருள்படும். நீங்கள் ஒரு இணையத்தள ரீதியான வர்த்தகமொன்றை ஆரம்பித்தாஸ்ரீம் அல்லது ஒரு உணவகத்தை திறந்தாலும் சரி, உங்கள் வியாபாரத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் நீங்களே பிரத்தியேகமான முறையில் ஈடுபடுங்கள். அப்போது, சரி செய்யக்கூடிய குறைகளை விரைவில் கண்டறிய முடியும், இதனால், மாற்றங்களை விரைவாகச் செய்து, இழப்புகளைக் குறைக்க முடியும்.
உங்கள் வியாபாரத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் நீங்களே தனிப்பட்ட ரீதியில் ஈடுபட வேண்டும் என்று கூறுவதன் மற்றொரு காரணம், விரிவாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னர், நீங்கள் யாருக்கு அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் கையளித்தீர்களோ அவர்களிலேயே அனைத்து விடயங்களுக்கும் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்பதாகும். மேலும் உங்கள் வியாபாரத்தை எவ்வாறு நிருவகிக்க வேண்டும் என்று கூறி உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. உங்களுக்கு அதை மேற்கொள்வதில் உங்கள் சொந்த அனுபவம் உண்டு.
நீங்கள் உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்திய பின்னர் , ரொக்கப் பதிவேட்டைப் பேணுபவராக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். பணியாளர் திருட்டுத்தனம் மற்றும் சுருக்கத்தைத் (கடைத் திருட்டு) தடுப்பதற்கான தடுப்பு முறைகளை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வியாபாரத்திற்குப் பொருந்தக்கூடிய இழப்பு தடுப்பு முறைகள் உங்கள் போட்டியாளர்களால் பெரும்பாலும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆகவே, உங்கள் தொழிற்துறையில் ஏற்கனவே உள்ள முறைமைகளைக் கண்டறிந்து அவற்றைச் நடைமுறைப்படுத்துங்கள். (நீங்கள் ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோர் திறப்பதாக இருந்தால், சிறப்பாகச் செயல்படுத்தும் முறைமைகளைப் பற்றி அறிந்து கொள்ள, அதற்கு முன்னரே, 7-லெவனுக்காகப் பணிபுரியுங்கள்!)
குத்தகை அல்லது கடன் வழங்குநர் கோரிக்கைகளுக்காக உங்கள் தனிப்பட்ட உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்க்கவும். கூடுமானவரை உங்கள் வியாபாரச் சொத்துகளை தனிப்பட்ட சொத்துகளிலிருந்து பிரித்து வையுங்கள். வங்கிகள் வியாபாரக் கடன்களுக்காக உங்கள் தனிப்பட்ட உத்தரவாதம் கேட்பது வழக்கம், இந்த பழக்கத்தின் பயனாக உங்கள் தனிப்பட்ட சொத்துகளை அவை கடனில் ஈடுபடுத்தலாம்.
உதாரணமாக, உங்கள் இரண்டாவது ஸ்டோருக்கு இடம் வழங்கும் சாத்தியக்கூறுள்ள ஒரு உரிமையாளர், குத்தகைக்கு தனிப்பட்ட உத்தரவாதம் வழங்கக் கேட்கலாம். ₨3,000 –க்கான ஒரு ஐந்தாண்டு குத்தகையில் ஒரு மாதத்திற்கு மொத்தமாகும் தொகை ₨180,000 –ஆக இருக்கும். இந்த தொகை உங்கள் வியாபாரத்தின் ஆரம்ப மூலதனத்தை விட மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும், கூடுதலாக ஸ்டோர்களைச் சேர்ப்பதற்கான ஆசை மற்றும் ஆர்வத்தில், மிக சுமையான கடன் பொறுப்புகளுக்கு உள்ளாக்கிக் கொள்ளும் தூண்டுதலும் உருவாகும்.
உங்கள் கடன் பொறுப்புகளை கட்டுப்படுத்துவதில் ஒழுக்கத்தைக் காக்கும் பழக்கத்திற்கு பதிலாக, நீங்கள் ஒரு ஓராண்டு குத்தகைக்கான கால அளவு தொடா்பில் அதிக கால நீட்டிப்பு வழங்கும்படி கோரலாம். இவ்வஇவ்வாறு செய்தால் உங்கள் கடன் பொறுப்பு ₨36,000 –ஆகக் குறையும்.
ஆரம்பத் தொழில் முனைவோர், ஒரு முன் நடவடிக்கையைக் கொண்டு தொடங்குவதன் முக்கியத்துவத்தை கவனிக்காமல் தவறவிடுவதற்கான காரணங்கள்
ஆரம்பத் தொழில் முனைவோர், தொழிலை விரிவாக்குவதற்கு முன்னர், ஒரு வெற்றிகரமான முன் நடவடிக்கையைக் கொண்டு தொடங்குவதன் முக்கியத்துவத்தை கவனிக்காமல் தவறவிடுவது தொடர்பில் புரிந்துகொள்ளக்கூடிய சில காரணங்கள் உள்ளன.
தொழில்முனைவோர், பொதுவாக தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சில நேரங்களில் நாம் எம்மைப் பற்றியோ அல்லது எமது தயாரிப்பு அல்லது சேவைகளைப் பற்றியோ அதிக நம்பிக்கை கொண்டிருப்பதே ஆகும். இந்த திடமான நம்பிக்கை எம்மை, விரிவாக்கத்தைத் மேற்கொள்வதற்காக நிரூபிக்கப்பட்ட அடித்தளத்தைப் பெறுவது உட்பட்ட பல முக்கிய சிக்கல்கள் பற்றி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விரிவாக்கத் திட்டங்களில் ஈடுபடத் தூண்டி விடும்.
பல வளமான தொழில்முனைவோர் தமக்கு சம்பந்தமில்லாத தொழிலில்களில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளமை திடமான நம்பிக்கைக்கு ஓர் காரணமாகும். உதாரணமாக, ஒரு வளர்ந்த தொழிலைக் கொண்டுள்ள ஒரு தொழில்முனைவர், அவருக்கு தனது நிபுணத்துவம் அந்த வியாபாரத்திற்கும் பயன்படும் என்று நினைத்துக் கொண்டு அனுபவமில்லாத புதியதொரு வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்கலாம்.
பதற்றம் என்பது மற்றொரு எதிரி ஆகும். பல அலகுகளைக் கொண்ட தொழில்முனைவோர் தங்கள் முதல் அலகில் குறைகளைக் கொண்டிருக்கலாம். பலர் முதலில் பணத்தை இழப்பார்கள். இதுவே, குறைகளைக் கண்டறிந்து ஒரு ஆரோக்கியமான வருவாய் அறிக்கையை வழங்க வேண்டிய சரியான நேரமாகும். இதைச் செய்ய முடியவில்லை என்றால், இது உங்கள் யோசனையைக் கைவிடுவதற்கான் சரியான நேரமாகும். ஆனால், நீங்கள் ஒரு தொடர் உணவகங்களைத் திறக்கிறீர்கள் என்றால், அதில் ஆறு உணவகங்களை, பதற்றத்துடன் திறந்தீர்களானால், உங்கள் இழப்புகள் மிக அதிகமாக இருக்கும்.
விரிவுபடுத்தப்பட்ட வியாபாரத்தில் நீங்கள் எதிர் கொள்ள வேண்டிய சில விவகாரங்கள் ஆரம்ப வியாபார நடவடிக்கையில் காணப்படுவதில்லை
உங்கள் ஆரம்ப வியாபாரத்தில் காணப்படாத சில கட்டுப்படுகள் விரிவுபடுத்தப்பட்ட வியாபாரத்தில் அவசியமாக இருக்கும். நீங்களாகவே செய்யும் வழக்கத்திலிருந்து மாறி கவனமான தயாரிப்புக்கு வழிவகுக்கும். உதாரணமாக, உங்கள் முழு மொத்த நிருவாகத்திற்குள் காணப்படும் தனித்தனி பிரிவுகளின் செயல்திறனை அளவிடும் கணிப்பீடு மற்றும் பணப் புழக்க கட்டுப்பாடுகள் உங்கள் வியாபார நடவடிக்கைக்குத் தேவைப்படும். இந்த அறிக்கைகள் அவ்வப்போது முறையாக தேவைப்படும். பல வியாபாரங்களில், சிறிய சிக்கல்களை சமாளிக்க முடியாத அளவிற்கு, பெரிதாகமல் தடுப்பதற்காக வார அடிப்படையிலான வருவாய் அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் தொழில் அலகின் நிதி சார் அறிக்கை முறையை அமைப்பதற்கு கணக்காளர் உங்களுக்கு உதவலாம்.
விரிவுபடுத்தப்பட்ட வியாபாரத்தில், பொறுப்பு மற்றும் அதிகாரம் என்பன மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் காணப்படலாம். பணிக்கு ஆட்சேர்த்துக்கொள்வது, மதிப்பீடு செய்வது மற்றும் பயிற்சியளிப்பது போன்றவற்றில் புதிய திறன்கள் தேவைப்படும். பெரும்பாலான வியாபாரங்களின் விரிவாக்க வீச்சு, தனது ஆரம்பத் தொழில் அலகில் இருந்து இரண்டாவது அலகினை அமைக்கும் அளவிற்கு வளர்வதே ஆகும். முதலிலிருந்து இரண்டாவதைத் தொடங்கி பெரிய வெற்றியை நீங்கள் அடைந்துவிட்டால், அது தொடரும். அதிலிருந்து நீங்கள் தொடர்ச்சியாக குக்கி-கட்டர் இயக்கத்தை முன்னேற்றலாம்.
அதிகாரக் கையளிப்பு இதனால் செய்ய முடியும்:
சில நேரங்களில் ஆரம்பத் தொழில் முனைவோர்க்கு அதிகாரத்தைக் கையளிப்பது கடினமாக இருக்கும். நீங்கள் மாற்றம் செய்ய விரும்பாத சில செயல்களைத் தவிர மற்றைய செயல்களுக்கு மாத்திரம் அதிகார அதிகாரக் கையளிப்புச் செய்ய பல வழிகள் உள்ளன. உதாரணமாக, காசோலைகளில் கையெழுத்திடுவது மற்றும் மூலதனததை ஒதுக்குதல் ஆகியவற்றை நீங்களாகவே மாத்திரம் செய்து கொண்டு பயிற்சியளிப்பது போன்ற செயல்களை உங்கள் முகாமையாளர்களிடம் அதிகாரத்தைக் கையளிக்கலாம்.
இந்த செயல்களை விட்டுக்கொடுக்காமலும், உங்கள் முக்கிய பணியாளர்களை இரண்டு வழிகளில் நீங்கள் ஊக்குவிக்கலாம்: அங்கீகரிப்பு மற்றும் வெகுமதி. அங்கீகரிப்பு என்பது வெறும் பட்டம் வழங்குவது மட்டுமல்ல அதற்கும் மேலானதாகும். மிக முக்கியமான அங்கீகாரம் என்பது, உங்கள் முக்கியமான பணியாளர்களை அவர்களுக்கு பொருத்தமான அதிகாரமும் பொறுப்பும் உள்ள பதவிகளில் இருக்கின்றனரா என்பதே ஆகும். அதிகாரம் கையளிக்கப்படும் போது, உங்கள் முகாமையாளர்கள் சில தவறுகளைப் புரியலாம், ஆனால் அவர்களின் தவறுகள் அவர்களுடைய அதிகார எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். அநேகமாக நிதிசார் அறிக்கையிடலானது நிதிசார் தவறுகளின் பாதகமான விளைவுகளைக் குறைக்க உதவும்.
சிறந்த முகாமையாளர்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வெற்றிகளைப் பொருத்து பண ஊக்குவிப்புத் தொகைகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கலாம். உங்கள் முகாமைத்துவக் குழுவுக்கான ஊக்குவிப்புத் தொகை இழப்பீடு ஒவ்வொரு முகாமையாளருக்கும் பிரத்தியேகமானதாக இருக்க வேண்டும், அப்போது ஒரு முகாமையாளருக்கான ஊக்குவிப்புத் தொகை அவருடைய மற்றைய விவகாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் அவருடைய தனிப்பட்ட சாதனையில் தங்கியிருக்கும். உதாரணமாக, நீங்கள் பல ஸ்டோர்களைத் தொடர்ச்சியாக உருவாக்கியிருந்தால், ஒவ்வொரு ஸ்டோரின் முகாமையாளருக்கும் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகை அவருடைய ஸ்டோரின் இலாபம் அல்லது நட்டத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
அப்படி ஒரு இலாபப் பகிர்வு திட்டத்தை அமைப்பது தொடர்பில் உங்களுக்கு யோசனை இல்லை என்றால், உங்கள் வெற்றிகரமான போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் யோசனையைப் பெறலாம், அவர்கள் முன்கூட்டியே அவ்வாறான முறைமைகளில் சோதனை முயற்சிகளை செய்திருப்பார்கள்.
முக்கியமான பணியாளர்களை ஊக்குவிக்கும் வழிகள்: வெகுமதியும்அங்கீகரிப்பும் ஆகும்
முதலில் நாம் அங்கீகரிப்பு என்பதற்கான வரைவிலக்கணத்தை அமைப்போம்: ஒரு வியாபாரத்திலுள்ள முக்கியமான பணியாளர்களுக்கு, இலாபம் மற்றும் ஒரு குறிப்பிட்ட செயலுக்கான பொறுப்பு போன்றவற்றோடு தொடர்புள்ள அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது முக்கியமான பணியாளர்களை நிர்வகிக்கும் "இலாப நிலையமாக" மாறும். ஒவ்வொரு இலாப நிலையத்திற்கும் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் தனித்தனியான இலாப மற்றும் நட்ட பொறுப்புகள் உள்ளன. (பல துரித உணவக கடைகள் வார அடிப்படையிலான இலாப நட்ட அறிக்கைகளைக் கொண்டு இயங்குகின்றன!) உங்களைச் சேர்ந்த முக்கியமானவர்கள், தொழில் முனைவோர் முடிவெடுக்கும் அதிகாரம் மேலும் அவர்களது இலாபங்களில் இருந்து ஊக்குவிப்புத் தொகை இழப்பீடு செலுத்தும் மற்றும் இருப்பதாக உணரச் செய்யும் சூழலை அமைத்துத் தருவதே இதன் கருத்தாகும். ஆனால், இரண்டு ஒதுக்கப்படாத பதவிகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அது உங்களது சொந்தப் பொறுப்பாகும்:
இது, உங்கள் வியாபாரத்தின் முக்கியமானவர்களின் இலாப நிலையத்தை இயக்குவதில் ஒரு வரையறை இருக்க வேண்டும் எனப் சிபாரிசு செய்கின்றது, ஏனெனில் அவர்கள் சில தவறுகளைச் செய்யலாம்.
மேலே குறிப்பிட்ட, இரண்டு தடைகள் மற்றும் அவ்வப்போதான நிதிசார் அறிக்கையிடல் போன்றவற்றின் மூலம், உங்கள் முகாமையாளர்களை ஊக்குவிக்கலாம் மற்றும் பெரும் இழப்புக்களையும் தவிர்க்கலாம்.
ஊக்குவிப்புத் தொகைத் திட்டங்கள், ஒவ்வொரு வியாபார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும், தனிப்பட்டவர்களின் பொறுப்புக்கான இலாப நட்ட அறிக்கையின் அடிப்படையிலும் அமைதல் வேண்டும் என்பது தெளிவு.
இலாபப் பகிர்வின் மூலம் முகாமையாளர்களுக்கு வெகுமதியளிப்பதன் மூலம், நீங்கள் அவர்களை வெற்றிகரமான பாதையில் நகர ஊக்கமளிக்கிறீர்கள். மேலும், அவர்களின் வெற்றி அதிகரித்தால் (மற்றும் வெகுமதி) உங்கள் வியாபாரம் அதிக இலாபமடைகிறது.
ஒரு முகாமையாளரின் ஊக்குவிப்புத் தொகையை நிர்ணயிப்பதற்கு மூ-வகைத் (பல வகை உள்ளன) திட்டங்கள் இங்கே.
இலாபம் ஈட்டும் நிலையங்கள் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்:
இலாப நிலையங்களை உருவாக்குவதற்கு பயன்படக்கூடிய சில அடிப்படை விதிகள் பற்றி இங்கு ஆராய்வோம்:
உங்கள் வியாபாரத்தை ஆரம்பித்தல் நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியவையும் மேற்கொள்ளப்படக் கூடாதவையும்
மேற்கொள்ளப்பட வேண்டியவை
நீண்ட கால நிதித் திட்டத்தை முன்னெடுங்கள்
உங்கள் வியாபாரத்தை விரிவாக்க முன்னர், உங்கள் சட்டத்தரனி, கணக்காளர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, உங்கள் வருங்கால பணியாளர்களுக்கும் உங்களுக்குமான நலன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமையான முகாமையாளர்களை தக்கவைத்துக் கொள்வதும், பணிக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்குமான போதிய பலன்களைத் தருவதே இதன் இலக்காகும். ஓய்வூதியத் திட்டங்கள், உடல்நலக் காப்பீடு, மற்றும் சுற்றுலா விடுமுறை சலுகைகளைக் கருத்திற் கொண்டு வசதிகளை உருவாக்க வேண்டும். இதன் பின்னர், இவற்றுக்கான செலவுகளை உங்கள் நிதித் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.
பொதுவான வியாபாரச் சிக்கல்கள்
வியாபாரம் விருத்தி அடையும் வேளையில் மேற்கொள்ளப்படும் பொதுவான சில தவறுகளை இப்போது அடையாளம் காண்போம். இதுபோன்ற தவறுகள் மிகப் பாதகமாக இருக்கலாம், எனவே முன்னிருந்தவர்கள செய்த தவறுகளை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளவும்!
கடும் வியாபாரச் சிக்கல்களைக் கையாள்வதற்கான அடிப்படை விதிகள்:
சிபாரிசுசெய்யப்படும் செயற்பாடுகள்
அமர்வு 12 -க்கான வியாபாரத் திட்டம்: விரிவாக்கமும் சிக்கல்களைக் கையாளுதலும்
இந்த அமர்வு - வியாபாரத் திட்ட டெம்ப்ளேட் ஆவணம் 12 -க்கான வியாபாரத் திட்ட டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கம் செய்து, இப்போது அதை நிறைவுசெய்யுமாறு சிபாரிசுசெய்கிறோம்..
வியாபாரத் திட்ட டெம்ப்ளேட்டைப் நிரப்புவதற்கான வழிமுறைகள்:
நீங்கள் பாடங்களைத் தொடரும்போது வரும் வணிகத் திட்டத்தின்
ஒவ்வொரு பிரிவையும் பூர்த்தி செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
1 முதல் 12 வரையிலான அனைத்து அமர்வுகளுக்கான டெம்ப்ளேட்டையும் ஒரே ஆவணமாக உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆராய்ச்சி முடிவுகளையும், பின்னணி சாதனங்களையும் உட்படுத்தவும். பின்னணித் தரவு, உங்கள் சுயசரிதை, விளக்கப் படங்கள், விளக்க வரைபடங்கள் மற்றும் ஆராய்ச்சி தரவுகள் என்பவற்றைப் பயன்படுத்தி, அதை ஆர்வமூட்டுவதாக ஆக்கவும். உங்கள் வியாபாரத் திட்டம் பூர்த்தியானவுடன், அதனை அச்சிட்டு, 12 பிரிவுகளையும் வரிசைப்படுத்துங்கள்.
மேலும் பல வியாபாரத் திட்ட வடிவமைப்புகள் நூலகங்களில், புத்தக சாலைகளில் மற்றும் மென்பொருளில் கிடைக்கக்₨டியனவாக உள்ளன.
அமர்வு 12 வினாடி வினா: விரிவுபடுத்தலும் சிக்கல்களைக் கையாளுதலும்
|
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Saturday, September 5, 2015
உங்கள் வியாபாரம் ஆரம்பிக்ப்பட்ட உடன் விரிவாக்குவதற்குமுன்னா் பின்பற்ற வேண்டிய விதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment