Tuesday, September 1, 2015

வாடிக்கையாளர்களை எவ்வாறு பின் தொடருவது

வாடிக்கையாளர்களை எவ்வாறு பின் தொடருவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
விற்பனைக்கு பின்னரான சேவைகளினால் வியாபாரத்தை நீங்கள் மீண்டும் பெற முடியும், இதுதான் பெரும்பாலான வெற்றிகரமான வியாபாரங்களின் மிக முக்கிய அங்கமாகும். தொலைபேசி, நேரடி, அல்லது அஞ்சல் மூலமாக நீங்கள் அவர்களைப் பின் தொடர முடியும். இதோ நீங்கள் முயற்சித்து பார்ப்பதற்கான சில வழிமுறைகள்:
விற்பனையின் பிறகு சில வாரங்களுக்கு பின்னர் வாடிக்கையாளர்களை அழைக்கவும்
உதாரணமாக, நீங்கள் ஒரு மோட்டார் வாகன்ஙகள் கடையை நடாத்திவந்தால், வாடிக்கையாளர்கள் கார்களை வாங்கிச் சென்ற இரு வாரங்களுக்கு பின்னர் அவா்களை தொலைபேசி ஊடாக அழைத்து கார் எப்படி உள்ளது என்பது பற்றி விசாரியுங்கள், மேலும் உங்களது வியாபார நடவடிக்கையில் அவர்கள் திருப்தியுற்றார்களா என்பதை கண்டறிய மறக்காதீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால் அது அறியப்படும்: அவர்களுடைய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கவும் இதுவே சிறந்த தருனமாகும்.
குறித்துக் கொள்ளுங்கள்
உங்களிடமிருந்து வாங்கியதற்கு நன்றி என்று குறிப்பிடும் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை அனுப்புவது மிகவும் எளிமையான வழிமுறையாகும். பல வியாபார உரிமையாளர்கள் இதனைப் பின்பற்றுகிறார்கள். இந்த வகையான தனிநபர் அணுகுமுறையானது எப்போதும் வரவேற்கப்படுவதுடன் மனதில் பதியவும் செய்கின்றது. கடித பின் தொடரல்கள் பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை, ஏனெனில் அவற்றில் தனிப்பட்ட உணர்வுகள் வெளிப்படுத்தப்படாது.
தொடர்பில் இருங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களை அடிக்கடி தொலைபேசியில் அழைத்து வியாபாரம் எந்த வகையிலாவது மாறியுள்ளதா எனவும், எதிலாவது உங்களுடைய உதவி தேவைப்படுகிறதா எனவும் விசாரியுங்கள். புதிய வளர்ச்சிகள், மேம்பாடுகள், அல்லது அதிகரிப்புகள் தயாரிப்புகள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள வாடிக்கையாளார்கள் எப்போதும் ஆவலாக இருப்பார்கள்.
வாடிக்கையாளார் உள்ளீட்டைப் பெறுங்கள்
வியாபார பதிலளிப்பு அட்டையில் பின்வருவதைப் போன்ற ஒரு கருத்துக் கணிப்பு ஆய்வு விபரமொன்றை அச்சிட்டு உங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பிவையுங்கள். பேரி ஜே. ஃபார்பர் எழுதிய Superstar Sales Secrets (கேரியர் பிரஸ்) நூலிலிருந்து இது எடுக்கப்பட்டது.. உங்கள் வாடிக்கையாளர் சேவை மற்றும் பின் தொடருதல்கள் ஆகியவற்றைத் தீர்மானிக்க இந்த கருத்துக் கணிப்பு ஆய்வை மேற்கொள்ளுமாறு ஃபார்பர் சிபாரிசு செய்கிறார்:
மதிப்பிற்குரிய வாடிக்கையாளரே,
உங்களுக்கு இன்னும் சிறப்பாக எப்படி சேவை செய்வது என்பதை நாங்கள் அறிய, இந்த கருத்துக் கணிப்பு அட்டையைப் பூரணப்படுத்தி எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் பெயர் ___________________________________________
கம்பனியின் பெயர்_______________________005F________________
தொலைபேசி இலக்கம் ____________________________ திகதி _____________
பின்வருவனவற்றுக்கு சரியான பதில்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பதிலளிக்கவும்.
வரவேற்பாளரின் நட்பும் பிற உதவியும்      
__ மிகச்சிறந்தது நன்று  __ நன்று  __ சாதாரணம்  __ மோசம்

கேள்விகளுக்கான பதில்கள்      
__ மிகச்சிறந்தது நன்று  __ நன்று  __ சாதாரணம்  __ மோசம்

விநயம், மனோபாவம் & ஊழியா்குழாமின் தோற்றம்      
__ மிகச்சிறந்தது நன்று  __ நன்று  __ சாதாரணம்  __ மோசம்

வாடிக்கையாளருடன் எங்கள் நிறுவனத்தின் தொடர்பு முறைகள்      
__ மிகச்சிறந்தது நன்று  __ நன்று  __ சாதாரணம்  __ மோசம்

நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளின் சேவை      
__ மிகச்சிறந்தது நன்று  __ நன்று  __ சாதாரணம்  __ மோசம்

ஒட்டுமொத்தக் கணிப்பீடு மதிப்பீடு      
__ மிகச்சிறந்தது நன்று  __ நன்று  __ சாதாரணம்  __ மோசம்


சேவை அழைப்புக்கு உடனடியாக விற்பனை பிரதிநிதிகள் பதிலளிக்கிறார்களா?
__ ஆம்    __ இல்லை

எங்கள் உற்பத்திப் பொருள் பற்றி பிறருக்கு சிபாரிசு செய்வீர்களா?
__ ஆம்    __ இல்லை

எனது கணக்கைப் பற்றி கலந்தாலோசிக்க என்னை அழைக்கவும்.
__ ஆம்    __ இல்லை

கருத்துரைகள்
__________________________________________________________
__________________________________________________________
__________________________________________________________
__________________________________________________________


பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No comments:

Post a Comment