படிப்படியான அணுகுமுறை
|
உண்மையில் நீங்கள் வியாபாரத்தில் இருக்கவேன்டுமா என்பதை முடிவு செய்க
உங்களுக்கு மதிப்பு மிக்கவற்றில் சிலவற்றை (அனைத்தையும் அல்ல) நீங்கள் ஆபத்து எல்லைக்குள் கொண்டு வருகிறீர்கள். அதாவது நீங்கள் மையத்திலிருந்து விலகிய ஒரு விசித்திரப் போக்கிற்கு ஆளாக நேரிடலாம், அதாவது, வேலை நேரம் உங்கள் குடும்ப மற்றும் பிற மகிழ்ச்சியான நடவடிக்கைகளுக்கான நேரங்களை இழந்து ஒரு சமச்சீரற்ற ஒரு வாழ்க்கையை நீங்கள் உருவக்கிக் கொள்ள நேரிடலாம். ஒரு வேலையாளாக நீங்கள் உணராத மன அழுத்த அளவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
என்ன வியாபாரம் மற்றும் எங்கே என்பதை முடிவு செய்க
வெற்றி பெறும் ஒரு தொழிலதிபருக்கான அம்சங்கள் உங்களுக்கு இருக்கிறது என்றும் நிச்சயமாக தொழில்தான் செய்வது என்றும் நீங்கள் முடிவு செய்து வீட்டீர்கள் என்றால், உங்களுக்குக் சிறந்த தொழில் எதுவென்றும், அந்தத் தொழிலை எந்த இடத்தில் அமைப்பது என்றும் என்பதை முடிவு செய்யவேண்டும். தேர்வு உத்தி இந்த அமர்வின் பின் பகுதியில் விளக்கப்படுகிறது.
முழு நேரமாக ஆரம்பிப்பதா அல்லது பகுதி நேரமாக ஆரம்பிப்பதா என்பதை தீர்மானம் செய்க
உங்கள் வியாபாரத்தை பகுதி நேர வியாபாரமாகஆரமபிப்பதில் சில சுவாரஸ்யமான நன்மைகளும், சில தீமைகளும் உள்ளன. (அதாவது, இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைத் தொடர்ந்தபடியே பகுதி நேரமாக வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிப்பது). ஆனால் எப்போதும் பகுதி நேரமாக வியாபாரம் ஆரம்பிப்பதில் உள்ள நன்மைகள் ஆபத்துக்களை பெரும்பாலும் களைந்து விடுகிறது.
- வேலையிலிருந்து ஓய்வு, ஆரோக்கியம், மற்றும் சில துணைப்பயன்கள், விடுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் வருமான வாய்ப்புக்களை நீங்கள் தவிர்க்கவேண்டிய சூழலிலிருந்து விடுபடுகிறீர்கள்.
- உங்கள் வேலையையும், வியாபாரத்தையும் முழுமையாக இருவேரு உலகங்களாக நீங்கள் பிரித்து வைப்பதை உள்ளடக்கிய, உங்கள் முரண் நலன் சார்ந்த துறைகளை பராமரிக்க முடிந்ததென்றால் உங்கள் முழு நேர வேலை பாதிப்படையாது.
- துணை உற்பத்திகள், ரியல் எஸ்டேட், சிறப்பு உணவு, மின் - வர்த்தகம், நேரடி சந்தைப்படுத்தல் அல்லது குடும்பமாக நடத்தும் தொழில் ஆகிய பகுதி நேர தொழிலுக்குக் ஒத்து வரும் தொழில்களை தெரிவு செய்தால் உங்கள் முழு நேர வேலைக்கும் இதற்கும் முரண்பாடுகள் தோன்றுவதை தவிர்க்கலாம்.
- குடும்பத் தொழிலை நடத்துவதில் பல நன்மைகள் உண்டு. நீங்கள் வேலையில் இருக்கும்போது கூட உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அதை கவனித்துக்கொள்வார்கள். இந்த விதத்தில் ஏற்கனவே உங்களுக்கு ஒரு நிறுவனத்திற்கான உள்ளார்ந்த கட்டமைப்பு கிடைத்து விடுகிறது. வியாபாரம் செய்வதன் பயன்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடியும்.
ஆனால் ஒரு பகுதி நேரத் தொழிலைத் துவங்குவதில் பரிசீலிக்கவேண்டிய சில ஆபத்துக்கள் உள்ளன:
- நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்திலிருந்தே உங்கள் பகுதி நேர வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்ற சபலம் தோன்றும். இது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நியாயம் செய்வதாகாது, மேலும் எந்த ஒரு சூழலிலும் இதனை செய்யகூடாது. (நீங்கள் உங்கள் வேலையில் இருக்கும்போது, நெருக்கடிகளை எதிர்கொள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரோ அல்லது ஒரு நம்பகமான மனிதரோ இருப்பது அவசியம்.)
- இன்னொரு பிரச்சனை நீங்கள் உங்களை வேலைக்கு அமர்த்தியவருடன் போட்டியில் இறங்குவது, மறுபடியும் இது ஒரு சரியான விடயமன்று. அதாவது நீங்கள் முதலாளியாக இருந்து உங்கள் ஊழியர் இது போன்று செய்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் அல்லது கையாள்வீர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.
- உங்களது வேலையுடன் உங்களுக்கு ஏற்படும் முரண் அந்த வேலையை கெடுப்பதோடு உங்கள் பகுதி நேர வியாபாரத்தையும் பாதிக்கும்.
- அதிகப் வேலைப்பழு, மற்றும் உடற்சோர்வு ஆகியவை ஒரு பகுதி நேர முனைவோர்களின் ஒரு உண்மையான பிரச்சனையாகும்.
தேர்வு உத்தி
|
- நேரம் எடுத்துக் கொண்டு நன்றாக யோசித்து உங்களுக்கான சரியான வியாபாரம் கிடைக்கும் வரை காத்திருக்கவும். வாய்ப்புகளை தொலைத்தால் உங்களுக்குக் யாரும் அபராதம் இடப்போவதில்லை. தொழிலைத் தேர்வு செய்வது என்பது நிறைய திட்டமிடுதலை வேண்டுவது மேலும் உங்கள் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவை வெற்றியடைவதில் முக்கியமானது.
- பெரும் சவாலை ஏற்படுத்தும் தொழில்களை தேர்வு செய்யாதீர்கள். எப்போதும் ஒரு அடி உயரத்தைத் தாண்டுவது எடுத்தவுடனேயே 7 அடி உயரத்தை தாண்டுவதைக்காட்டிலும் சுலபமானது.
- நீண்ட நாள் பொருளாதார ஆற்றல் கொண்ட ஒரு தொழிலை அடையாளம் காண்க. வெய்ன் கிரெட்ஸ்கியின் அறிவுரையை கடைபிடியுங்கள்,"பந்து செல்லும் இடத்திற்கு செல்லுங்கள், அது எங்கு இருந்ததோ அங்கு அல்ல.."
- ஒரு மிகப்பெரிய தவறு என்பது புறக்கணிப்பு செய்யும் பிழையாகும். அதாவது உங்கள் கண் முன்னே தோன்றிய ஒரு வாய்ப்பை நீங்கள் அவதானிக்க தவறுவது.
- நடைமுறை மற்றும் எதிர்கால சந்தையில் வளர்ச்சி காணும் ஒரு வியாபாரத்தை தெரிவு செய்யவும். சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் பல வியாபாரத்தில் இல்லை, ஏனெனில் வால் மார்ட், ஹோம் டெபோ போன்ற மிகப்பெரிய தொடர் கடைகள் குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் அளித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்துள்ளது.
- அமெரிக்க வரலாற்றில் ஒரு வெற்றிபெற்ற வியாபார அதிபரும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவர் வொரன் பஃபேயின் அறிவுரையை கடைபிடியுங்கள்: திரு. பஃபே அவர்கள் விலை கொடுக்கும் ஆற்றல், மற்றும் நீண்ட நாளைய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள "வாடிக்கையளர் ஏகபோக வியாபாரங்களைத்" தெரிவு செய்வார். உதாரணம்: சீஸ் கேண்டி'ஸ், கோக கோலா மற்றும் ஜில்லெட் ரேசர்கள். உங்களால் இதுபோன்ற தொழில்களை ஒரு சிறிய அளவில் செய்ய முடியுமா? இந்தக் கொள்கையை நீங்கள் ஒரு சிறிய அளவில் செயல்படுத்த முடியுமா?
- "சரக்கு அல்லது பண்டக வியாபாரங்களை" தவிர்க்கவேண்டும், ஏனெனில் இது அனைத்தும் விலை தொடர்பானது, வியாபார சந்தைப்போட்டிகளில் ஈடுபட, உங்கள் வியாபாரத்தை காப்பற்ற மிகக்குறைந்த விலையில் நீங்கள் விற்க வேண்டி வரும் திரு பஃபே அவர்கள் கூறுவது போல், "சரக்கு அல்லது பண்டக வியாபாரத்தில் உங்களது அமைதியான போட்டியாளருக்கு ஈடான ஒரு சாமர்த்தியமே உங்களிடம் இருக்கும்.."
- பெரும்பாலான சேவைத் வியாபாரத்தில் விலை ஆற்றல் உண்டு.
- உங்களுக்கு தெரிந்த வியாபாரத்தை செய்வீர்களா அல்லது தெரியாத வியாபாரத்தை தெரிவு செய்வீர்களா?
- நீங்கள் ஒரு பொருளை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், குறைந்த விலையில் உங்களுக்காக உற்பத்தி செய்து வரும் ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பதன் இலாப நட்டங்களை கணக்கிடவும். வேறு வகையில் கூற வேன்டுமென்றால்"ஒரு நிலையற்ற கோபரேசன் நிறுவனத்தை நடத்துவது.." ஒரு" நிலையற்ற நிறுவனம்"என்பது, உற்பத்தி மற்றும் பொதியிடல் ஆகியவற்றை வெளியாள் ஒப்பந்தத்திற்கு விடுவது.
கவனிக்கவேண்டிய விடயங்கள்
|
தேவைப்படும் செயற்பாடுகள்
மீண்டும் ஒரு முறை எச்சரிப்பது நல்லது: மிகவும் பொதுவான ஒரு தவறு மற்றும் ஒரு விலைமதிக்கமுடியா தவறு என்பது ஆரம்பிப்பதற்கான சரியான வியாபாரத்தை தெரிவு செய்யாதது. உங்கள் தேடலுக்கு பொருத்தமான நேரம் இதுவே.
நீங்கள் வியாபாரம் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லையா? இதனைச் செய்யவும்:
ஒரு வெற்றுத் தாளின் மேல் பகுதியில் நீங்கள் விரும்பும் ஒரு வியாபாரம் நடவடிக்கையை எழுதுங்கள். (இதனை தலையங்கமாக வைத்துக் கொள்ளவும்). தனித்தனி பக்கத்தில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் நடவடிக்கை பற்றி எழுதுங்கள்.
அதே தாள்களில் நீங்கள் எழுதியுள்ள உங்கள் நடவடிக்கைக்கு தொடர்பான வியாபாரங்களை பட்டியலிட்டுக் கொள்ளவும்.
இதே தாள்களில் உங்கள் நடவடிக்கைக்கு தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் பட்டியலிடவும். சாத்தியமாகக் கூடிய ஒவ்வொரு பொருள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை பட்டியலிட உங்கள் சிந்தனையை தூண்டி விடவும்.
மோசமான காலங்களில் சுமாராக ஓடும் வியாபாரம் பற்றிய பட்டியலை தயாரிக்கவும் (இதில் ஒன்று உங்களுக்கு பொருந்தும்). உதாரணத்திற்கு வெற்றிலைப்பாக்குக் கடை, தானியங்கி வாகன பழுது மற்றும் துணிக்கடை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உதாரணம்
உதாரணமாக நீங்கள் ஒரு 3 வியாபாரங்களை அடையாளம் கண்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்: கயிறு திரித்தல், பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை மற்றும் வாகனப் பழுது பார்க்கும் தொழில். இப்போது நீங்கள் கீழ்வரும் பட்டியலை வைத்து (அல்லதுஉங்களது பட்டியலுடன் கூட) மதிப்பிட்டு கொள்ளலாம். இதற்கு 1- 10 என்று புள்ளிகளையும் வழங்கலாம்.
குறிக்கோள் | சணற் கயிறு திரித்தல் | பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை | வாகனப்பழுது பார்த்தல் |
6 | 3 | 10 | |
விரிந்து கொண்டே செல்லும் தேவையை நான் பூர்த்தி செய்ய இயலுமா? | 8 | 5 | 10 |
இதில் நிபுணத்துவம் பெற முடியுமா? | 7 | 8 | 10 |
நான் அதனை கற்க முடியுமா? முதலில் சோதனை செய்ய முடியுமா? | 9 | 8 | 9 |
இது போன்ற பகுப்பாய்வு உங்களுக்கான வியாபாரத்தை தெரிவு செய்வதில் உங்கள் குறிக்கோளை அடைய உதவும்.
உங்கள் மனத்தில் குறிப்பாக உள்ள ஒரு வியாபாரத்தை எவ்வாறு மதிப்பிடுவது.
உங்கள் சிந்தனைகளை தெளிவு படுத்த உதவும் சில கேள்விகள் இதோ:
- இது நான் மகிழ்ச்சியுடன் செய்யக் கூடியதா?
எனக்கு பிடித்தமான நடவடிக்கைகள்: __________________________
நான் இவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்: ________________________________ - நெருக்கமான பதலீடு இல்லாத விரிவடைந்து கொண்டே செல்லும் தேவையை இது நிறைவேற்றுமா?
- வாடிக்கையாளர்கள் இதற்கு நெருக்கமான பதிலீடு இல்லை என்று கருதும் ஒரு இலக்கு நிர்ணயித்த, சிறப்புப்பண்பு பெற்ற ஒன்றில் நான் சிறந்து விளங்க முடியுமா?
- மூலதனத் தேவைகளை என்னால் கையாள முடியுமா?
- முதலில் வேறு ஒருவரிடம் பணியாற்றி நான் இந்த வியாபாரத்தை கற்றுக் கொள்ள முடியுமா?
- தொழிற்சாலை மற்றும் தேவைப்படும் குறைந்த பட்ச ஊழியர்கள் இன்றி நான் ஒரு நிரந்தரமற்ற நிறுவனத்தை நடத்த முடியுமா? ("நிரந்தரமற்ற நிறுவனம்" என்பது, ஒரு வியாபாரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் வெளியார் ஒப்பந்தத்திற்கு "அவுட் சோர்ஸ் செய்வது," அதாவது உற்பத்தி மற்றும் பொதியிடலை ஆகியவற்றை துணை ஒப்பந்தத்திற்கு விடுவது. )
- நான் முதலில் சோதித்துப் பார்க்கக்கூடிய பொருள் அல்லது சேவை இதுவா?
- என்னுடைய திறனுக்கு உதவி புரியக்கூடிய திறனுடைய பங்காளர் அல்லது வியாபாரத்திற்கு நிதியளிக்கும் பங்காளியை நான் பரிசீலிக்க வேண்டுமா?
என்ன வியாபாரம் செய்ய வேன்டும் என்று முடிவு செய்த பிறகு இவற்றைச் செய்யவும்:
வியாபாரத்தின் சிறப்பம்சங்கள் குறித்த "சாதக" மற்றும்"பாதக" பட்டியலை தயாரிக்கவும். ஒரு காகிதக்தை அடுத்தடுத்து உள்ள இரண்டு பத்திகளாக கோடிட்டு பிரித்துக் கொண்டு, ஒரு பக்கம் "சாதகங்களையும்" மறு பத்தியில்"பாதகங்களையும்" பட்டியலிடவும். இது பல சமயங்களில் உங்கள் சிந்தனையை தெளிவு படுத்தும்.
நீங்கள் தெரிவுசெய்துள்ள பிரிவில் வெற்றிபெற்ற குறைந்தது 5 வியாபாரங்களின் பெயர்களை எழுதவும். இந்த ஐந்து வியாபாரங்களிலும் உள்ள பொது அம்சங்களை ஆராய்ச்சி செய்து அவை வெற்றியடைந்ததற்கான காரணங்களை பட்டியலிடவும்.
செய்யவிருக்கும் வியாபாரம் குறித்து பலரிடம் கலந்துரையாடுங்கள் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வியாபாரம் பற்றிய எதிர்மறை அம்சங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். மாறாக அதன் ஆபத்துக்களை இப்போதே, வியாபாரம் தொடங்கிய பிறகு அல்லாமல், காணவும். தகவல்களை உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். தகவல்களை விரைவிலேயே எழுதிக் கொள்ளவும்.
வெற்றியடையாத போட்டி முறைகளை ஆராய்ச்சி செய்யவும் மேலும் காரணங்களை எழுதவும்.
முழுமையாக தகுதி பெறவும்.
ஆரம்பிப்பதற்கு முன்னரே முழுமையாக தகுதி பெறவும்:
- தகுதி பெற சிறந்த வழி இதே வியாபாரத்தில் உள்ள ஒருவருடன் வேலைக்குச் செல்வதாகும்.
- உங்களுக்குத் தேவையான பாடங்களில் வகுப்புகள் அனைத்திலும் பங்குபெறுக. உதாரணமாக: கணக்குப்பதிவியல், கண்னி மற்றும் விற்பனை.
- இதற்குப் பொருத்தமான அனைத்து நூல்களையும் வாசிக்கவும்.
- நீங்கள் செய்யவிருக்கும் வியாபாரத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களிடம் கேள்வி கேட்கவோ, உதவி கோரவோ தயங்க வேண்டாம்.
முடிவெடுக்கும் நேரம்:
உங்களுக்கு பணம் மற்றும் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும் விதமாக என்ன விற்பனை செய்யமுடியும், எந்த சேவையை செய்ய முடியும்?
உங்களுக்கு பணம் மற்றும் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும் விதமாக என்ன விற்பனை செய்யமுடியும், எந்த சேவையை செய்ய முடியும்?
இந்த அமர்வை நிறைவு செய்ய, நீங்கள் ஒரு வியாபாரத்தை அல்லது உங்களுக்கு சிறந்தது என்று நீங்கள் முடிவு செய்த வியாபாரத்தை தேர்வு செய்வதில் நீங்கள் முடிவு செய்திருக்கவேண்டும். அடுத்த பதினொரு அமர்வுகளில் அதியுச்ச பயன்களை அடைய ஒரு தெளிவான திட்டத்தை நீங்கள் வந்தடைந்திருப்பது அவசியம். உங்களுக்கான வியாபார திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பதை இரண்டாம் அமர்வு உங்களுக்கு எடுத்துரைக்கும்.
அமர்வு 1 வினா-விடை: ஒரு வியாபாரத்தை தீர்மானித்தல் செய்க.
No comments:
Post a Comment