5 சுய தொழில்
1.நூடுல்ஸ் தயாரித்தால் வருவாய் சுவைக்கலாம்! |
நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ என்று கூறுகிறார் கோவை அஜ்ஜனூரை சேர்ந்த பூமாலை. அவர் கூறியதாவது: சொந்த ஊர் ஊட்டி. மதுரை காமராஜர் பல்கலையில் எம்ஏ பொது நிர்வாகவியல் படித்துள் ளேன். திருமணமான பின், கண வர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறேன். சிறுவயது முதலே சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை.
பெரும்பாலானோர் விரும்பும் நூடுல்ஸ் தயாரிக்க முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில் நூடுல்ஸ் தயாரிப்பு பயிற்சி அளிப்பதை அறிந்து அங்கு ஒரு மாதம் பயற்சி பெற்றேன். பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக நூடுல்ஸ் தயாரித்து விற்கிறேன். தினமும் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்களை பல்வேறு பிராண்ட் நிறுவனங்களுக்கு விற்கி றேன். அதை வாங் கும் நிறுவனங்கள் தங் கள் நிறுவன பெயரில் விற்கின்றனர்.
சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கிறேன். புதிய சுவைகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். புதுப்புது வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஆர்டர்கள் குவிகின்றன. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.
தயாரிப்பது எப்படி?
பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும். அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.
பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார். பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.
கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.
கிடைக்கும் இடம்
மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.
தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடி யாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.
முதலீடு
பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம், வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம், 50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம். மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.
கட்டமைப்பு
இயந்திரங்களை நிறுவ, பொருட்களை இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.
உற்பத்தி செலவு
ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.
வருவாய்
15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் லாபம் அதிகரிக்கும்.
சந்தை வாய்ப்பு
அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது. மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்கள் தயாராக இருக்கின்றன.
2.காளான் வளர்ப்பு
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!
தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

3.சுய தொழில் துவங்கி முன்னேற கொடுவா மீன் வளர்ப்பு பயிற்சி
காரைக்கால் : காரைக்காலில் சுய தொழில் துவங்கி முன்னேற, ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம், "கொடுவா மீன் வளர்ப்பு பயிற்சி' அளித்து வழிகாட்டுகிறது.
காரைக்கால் கருக்கலாச்சேரியில் மத்திய அரசின் ராஜிவ்
காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு, ஆராய்ச்சி அடிப்படையில் நோய் தாக்காத டைகர் இறால், வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடும் மெத்தை நண்டு, விற்பனைக்காக கல் நண்டுகள், கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் துவங்க வேண்டும் என்ற நோக்கில், கொடுவா மீன் மற்றும் நண்டு வளர்ப்பு குறித்து இம்மையம் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. நாகை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, கூண்டுகளில் கொடுவா வளர்ப்பு குறித்த பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது. 5 செ.மீ., அளவு, 2 கிராம் எடையுள்ள கொடுவா மீன் குஞ்சுகள் கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு பின், 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை வளர்ந்து விற்பனைக்கு தயாராகிறது. வெளி மார்கெட்டில் 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களாக நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில் தொழில்நுட்ப முயற்சிகள், கொடுவா மீனின் வாழ்க்கை முறைகள், தாய் மற்றும் சினை மீன்களை சேகரித்தல், முட்டையிடுதல், குஞ்சுகளை வளர்த்தல், கூண்டில் வளர்க்கப்படும் கொடுவா மீன் வளர்ப்பு முறைகள், நாற்றாங்கால் முறையில் கொடுவா வளர்த்தல், தண்ணீரின் தர அளவீடுகள், மீன் வளர்ப்பதற்கான கூண்டுகள் அமைத்தல், மீன்களை பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தொடர்ச்சியாக நேற்று கொடுவா மீனின் இனப்பெருக்க முறைகள் குறித்தும், கரு முட்டைகளை ஆய்வு செய்வது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திட்ட மேலாளர் பாண்டியராஜன், பண்ணை மேலாளர் கணேஷ், கணபதி, ராஜேந்திரன், அருள்ராஜ், சுந்தரேசன், குணசேகரன், ஜான் சாமுவேல் உட்பட பலர் பயிற்சி அளித்தனர். இறுதியில், தமிழ் வழியில் உள்ள கொடுவா வளர்ப்பு பயிற்சி புத்தகம் மற்றும் பயிற்சி குறித்து "சிடி'யும் மகளிர் குழுவினருக்கு வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், சீர்காழி ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தை, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
4.புகைப்படத் தொழில் - பல லட்சம் வருமானம்
பெற்ற தாய் சொல்லை கேட்காதவர்களும் கூட புகைப்படக்காரர்கள் சொன்னால் தட்டாமல் கேட்பார்கள். வாழ்க்கையில் நல்லதோ, கொட்டதோ அதை பதிவு செய்து தருபவர்கள் புகைப்படக்காரர்கள்தான். நம்மை யார் என்று உணர்த்துவதற்கு புகைப்படம் தான்
ஆதரமாக திகழ்கின்றன. வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துவிட்ட புகைப்படத் தொழில் கற்பனை சக்தி மிகுந்தவர்களுக்கு கதவை திறந்து காத்திருக்கிறது.
முக்கிய நகரங்களில் மட்டுமில்லாமல் ஸ்டூடியோ தொழிலை கிராமங்களிலும் செய்ய முடியும். 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் இருப்போர் தங்களை வளர்த்துவிட்ட தொழிலையே வாழ்க்கையாக எடுத்துச் செய்கின்றனர். 50 வயது வரை வற்றாமல் வருமானம் தருவதாக உள்ளது புகைப்படத் தொழில்.
ஸ்டூடியோ ஆரம்பிக்க சிறிய இடமும், குறுகிய கால பயிற்சியும் இருந்தாலே போதும். ஆர்வத்துடன் கற்கும் 6 மாத பயிற்சியின் முடிவில் விரும்பியபடி இத்துறையில் எந்தவொரு தொழிலையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஈடுகொடுத்து அவரை திருப்திபடுத்தும் படியான வேகம் இத்தொழிலுக்கு தேவை. ஒளிப்பட தொழிலில் செய்யப்படும் முதலீட்டைபோல் குறைந்தபட்சம் 20 சதவீத இலாபத்தை பெற முடியும்.
ஸ்டுடியோ வைப்பதற்கு அமைப்பு, பகுதியை பொறுத்து ஒரு லட்ச ரூபாய் முதலீடு இருந்தாலே போதும். தொழிலின் வேகத்திற்கு ஏற்ப அடுத்தடுத்து முதலீடுகளை மேற்கொள்ள முடியும். முதலீடு பெருக பெருக வருமானமும் உயரும். இதற்கு வங்கிக் கடன்களும் கிடைக்கின்றன.
எனினும் பிறரிடம் தொழில் கற்றால் அவருடைய சாயலும், அணுகுமுறையும் ஒட்டிக்கொள்வது இயல்பாகும். தொழில்நுட்ப ரீதியாக இத்துறை அடைந்திருக்கும் முன்னேற்றத்தை குறுகிய காலத்திற்குள் அறிந்து கொள்ள உதவுகின்றன பயிற்சி நிலையங்கள். இவை உயரங்களை எட்ட கிடைத்துள்ள எளிய வாய்ப்புகளாக தெரிகின்றன. கான்ஸ்டபிள் பதவியில் இருந்து தொடங்குவதை விட ஐ.பி.எஸ் படித்து ஏ.சி.யாக பணியை தொடங்குவது நல்ல அடித்தளம் என்பது போன்றது இதுவாகும்.
ஒளிப்படத் தொழில் பல கிளைகளுடன் விரிந்து கிடக்கிறது. இதில் இறங்கும் முன்பு தங்களின் ஆர்வம் விளம்பரத்துறையா, சினிமாவா, சொந்த ஸ்டூடியோவா என்பதை உணர்வது அவசியம். துறையை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் சிறப்பு பயிற்சி பெறுவது இலக்கை எளிதாக்கும் என்பது இளைய தலைமுறையின் நம்பிக்கை.
பாஸ்போட் அளவு படம் எடுப்பது, திருமண கவரேஜ் என்று மட்டுமே இருந்தது புகைப்படத் தொழில். ஆனால் குளத்தில் எறியப்பட்ட தொழில் நுட்ப கல்போல் பல வட்டங்கள் விரிந்து வளர்ச்சி அடைந்துவிட்டது. இதனால் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான தேவை அதிகம் கொண்ட தொழிலாக இது மாறியுள்ளது.
புகைப்படம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்ட நிலையில் அதன் வருமான வாய்ப்புகளும் பல கிளைகளாக பிரிந்து நிற்கின்றன. புகைப்படத்துடன் தொடர்புடைய லேமிசேன், பிரேம்கள், ஆல்பம், விசிட்டிங் கார்டு என்று தொடர்பு தொழில்கள் ஏராளம்.
சாப்பிடும் அரிசியில் பெயர் எழுதி இருப்பதாக சிலர் கூறுவது உண்டு. இங்கே தட்டில் படத்தையே பொறித்து நமதாக்கி கொள்ள முடிகிறது. பேப்பரில் மட்டுமல்லாமல் காக், பிளேட் என்று பொருட்கள் என்று விரும்பும் பொருட்கள் மேல் பிரிண்ட் போடும் தொழில் நுட்பமும் உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்கள் வந்துவிட்ட நிலையில் சிறிய படம் முதல் பிரமாண்ட படங்கள் வரை பிரிண்ட் போடப்படுகின்றன.
புகைப்பட தொழிலுக்கு அடிப்படை கேமிரா என்றாலும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் அதை பல்வேறு தளங்களுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. குறைந்தபட்ச வருமானம் நிச்சம் என்பதால் ஆர்வத்தையும், திறமையையும் கலந்து உழைத்தால் பல லட்சம் வருமானம் தருவதாக உள்ளது புகைப்படத் தொழில்.

5.சிறிய முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில்
அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி
பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
ஹோம் மேட் சாக்லேட்
பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
ஹோம் மேட் சாக்லேட்
தேவையான முதலீடு :
குறைந்த பட்சம் 10,000
குறைந்த பட்சம் 10,000
லாபம்:
15 முதல் 20 சதவீதம் வரை
15 முதல் 20 சதவீதம் வரை
சாதகமான அம்சம்கள் :
- பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை.
- ஒரு சில நாள் பயிற்சியே போதும்.
- மூலப் பொருள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள்.
- மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்.
- தரமாக செய்தால் ஒரு வருடம் வரை வைத்து விற்பனை செய்யலாம்.
பாதகம் :
- 24 மணிநேரமும் குளிர்சாதன வசதி வேண்டும் அதற்கு தடையில்லா மின்சாரம் தேவை.
- சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும்.
- முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மார்க்கெட்டிங் செய்வது.
எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல் , புதுப்புது சுவைகளை எல்லோரையும் கவரும் வகையில் பேக்கிங் செய்து , வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம்.
கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான வித விதமான அச்சுகள் சந்தியிலேயே கிடைக்கின்றன. சக்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள் , ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம்.
No comments:
Post a Comment