Tuesday, September 1, 2015

உங்கள் வியாபாரங்களுக்கான இலக்குகளை தீர்மானித்தல்

உங்கள் வியாபாரங்களுக்கான இலக்குகளை தீர்மானித்தல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
எந்த ஒரு வியாபாரத்திலும் இலக்குகள் அமைத்துக் கொள்வது முக்கியமானது, குறிப்பாக கவனம் சிதறக்கூடிய தனி நபர் தொழில் முனைவோர்களுக்கு இது அவசியம். இலக்குகள் உங்கள் செயற்பாடுகளை வழி நடத்தும், நீங்கள் அடையவேன்டியதைக் குறித்து உங்களை நகர்த்தும், மேலும் உங்கள் தொழில் வெற்றியை அளக்கும் ஒரு கருவியாகவும் அமையும்.
இலக்கு நிர்ணயிப்பதில் உங்களது அணுகுமுறையே இலக்குகளை நீங்கள் அடைவதை தீர்மானிக்கும். பெரும்பாலானோர் இலக்குகள் முக்கியம் என்று ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் ஐந்து சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே இலக்குகளை எழுதுகின்றனர் அல்லது இலக்குகளை அடைய செயற் திட்டங்களை வைத்துள்ளனர். இங்கு அச்சமே முக்கிய எதிரி. பலர் இலக்குகளை ஒரு காகிதத்தில் எழுதுவதை வெறுக்கின்றனர் (இலக்கு நிர்ணயித்தலில் இது முக்கியமான விடயமாகும்) ஏனெனில் அதற்கு கடப்பாடுடன் செயல்படுவது குறித்த அச்சம் அவர்களிடத்தில் உள்ளது. இதுதான் உங்கள் பிரச்சனை எனில் எழுதிய பிறகு இலக்கை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். மேலும், இலக்குகளை நாம் அதிக முறை எடுத்துக் கொள்ளும்போது இலக்கு நிர்ணயித்தல் வேலை மேலும் சுலபமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இலக்குகளை நிர்ணயித்து அதனை நீங்கள் அடைந்துவிட்டால், இலக்கு நிர்ணயம் செய்யும் ஆற்றல் மேலும் சில இலக்குகளை நிர்ணயிக்க உங்களை வலியுறுத்தும்.
இலக்கு நிர்ணயித்தலை நீங்கள் தவிர்த்தால், கீழ்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
குறுங்காலகால மற்றும் நீண்ட கால இலக்குகளை வைத்துக் கொள்ளவும்
வாராந்த இலக்குகள், காலாண்டு இலக்குகள், வருடாந்த இலக்குகள், ஏன் 3 அல்லது 5 ஆண்டுகால இலக்குகளைக் கூட நீங்கள் நிர்ணையித்துக் கொள்ளலாம். குறுகிய கால இலக்குகளை உருவாக்க ஒரு வழி முதலில் உங்கள் நீண்ட கால இலக்குகளை பரிசீலியுங்கள். ஒரு குறிப்பிட்ட டொலர் தொகையை வருமானமாக ஈட்ட விரும்புகிறீர்களா, அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வளவு வாடிக்கையாளர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளீர்களா? இது போன்று உடனடியாக ஏதும் தோன்றவில்லை எனில், என்ன வியாபார இலக்கை அடைய எண்ணியுள்ளீர்கள் என்பதை சிறிது நேரம் யோசிக்கவும். நீண்ட கால இலக்குகளை ஒரு முறை நிர்ணயம் செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் இப்போது பின் சென்று சிந்திக்கலாம். இந்த ஆண்டில் 1,00,000 டொலர்கள் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளீர்களென்றால் அந்த பணத்தை ஈட்ட உள்ள படிமுறைகளை பட்டியலிடவும். இந்தப் பட்டியலை உருவாக்குவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்களது நண்பர்களை உதவிக்கு அழைக்கவும். உங்கள் பட்டியல் முழுமை அடைந்த பிறகு அந்த சிறிய படிமுறைகளை இலக்குகளாக மாற்றவும்.
உங்கள் இலக்குகளை துல்லியமாக, அளவிடக்கூடியதாக, இறுதிக் கால அவகாசம் உள்ளதாக உருவாக்கவும்
என்ன விற்பனையை அதிகரிப்பது என்பது ஒரு நல்ல இலக்குதான் ஆனால் இது மிகவும் சாதாரணமாக பொதுவாக உள்ளது எனவே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் படிமுறையாக இது இருக்காது. உங்கள் இலக்குகளை துல்லியமாக இருக்குமாறு மாற்றவும். அனைத்து இலக்குகளும் துல்லியமாக ( புதிய வாடிக்கையாளர்களை பெறு), அளவிடக்கூடியதாக ( 3 புதிய வாடிக்கையாளர்களை பெறு), மற்றும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் (நவம்பரில் 3 புதிய வாடிக்கையாளர்களைப் பெறு) இருக்கவேண்டும்.
தோல்வி அடைவதற்கான இலக்குகளை நிர்ணயிக்கவேண்டாம்
உங்கள் இலக்குகளை அடையமுடியும் என்பதை உறுதி செய்து கொள்ளவும் குறிக்கோள் மிகவும் அடைய முடியாத உச்சத்தில் இருக்குமானால் உங்களை நீங்களே தோல்விக்கு தள்ளிக் கொள்வீர்கள்.
சோம்பேறித்தனம் வேண்டாம்
மறு புறம் சில தனி நபர் தொழில் முனைவோர்கள் சுலபமாக எட்டக்கூடிய இலக்குகளை அமைத்துக் கொள்வார்கள். இந்தக் கோணத்தில் நீங்கள் செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சவாலான சில பாதைகளை தேர்வு செய்யவும். ஒவ்வொரு காலாண்டிலும் ஒரே ஒரு புதிய வாடிக்கையாளர்களைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள் என்றால், இரண்டு அல்லது மூன்று என்று உங்களை சற்றே நெருக்கிக் கொள்ளவும்.
பொருத்தமானவற்றை நாடவும்
ஒரு துல்லியமான இலட்சியத்தை எட்ட இலக்குகள் உதவுமாறு இருக்கவேண்டும். உங்களை சுறுசுறுப்பாக வைக்கும் இலக்குகளை யோசிக்கவும், ஆனால் உங்கள் தொழிலின் முழுமையான வெற்றிக்கு தொடர்புடையதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் இலக்குகள் மதிப்புள்ளவை அல்ல என்று நீங்கள் நம்பினால், அதனை அடைய நீங்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளமாட்டீர்கள்.
பொறுமையாகவும்,விடாப்பிடியாகவும் இருக்கவும்
இலக்குகளாக நீங்கள் எழுதியவற்றில் பலவற்றை நீங்கள் அடையமுடியாமல் போகிறது என்பதால், இலக்குகளை நிர்ணயம் செய்யும் முறை சரியாக செயற்படவில்லை என்று தெரிந்தால், கைவிட்டுவிடாதீர்கள். பல மாதங்களுக்கு இலக்குகளை நிர்ணயிப்பதில் கவனம் செலுத்தவும், இதனால் உங்கள் இலக்கு நிர்ணயத் திறன்கள் வளரும்.
இலக்குகளை சீரான இடைவெளியில் மறுபரிசீலனை செய்க
உங்கள் வாராந்த இலக்குகள் அல்லது பிற குறுங்கால இலக்குகளை உங்கள் நேரடி பார்வையிற்கு உட்படுமாறு வைக்கவும் -- உதாரணமாக உங்கள் மேசை மீது, அல்லது உங்கள் கணினிக்கு அருகில் -- இதனால் எதனை நிறைவேற்றவேன்டும் என்பதை நீங்கள் அறிய முடியும். உங்கள் வருடாந்த இலக்குகளை மாதா மாதம் பார்த்து அதன் படி நீங்கள் செல்கிறீர்களா என்பதைப் பார்க்கவும். வியாபாரத்தில் மாற்றம் தேவை என்றால் உங்கள் இலக்குகளை மாற்ற பயப்படவேன்டாம். இலக்கு நிர்ணயித்தலில் வளைந்து கொடுக்கும் தன்மை ஒரு முக்கிய அங்கமாகும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No comments:

Post a Comment