சித்தர்கள் அழியா தேகத்துடன் மரணமில்லா
பெரு வாழ்வை அடைவதற்கு மந்திரம்(ஓலி),
தந்திரம், யந்திரம், ஔசதம் என்கிற நான்கு
உபாயங்களைக் கடை பிடித்தனர் என்பது
குறிப்பிடத் தக்கது. ஒலி அலைகளை
முறையாகப் பயன்படுத்தினால் அளவற்ற காந்த
ஆற்றலைப் பெற முடியும். 11 மனிதர்கள்
எழுப்பும் ஒலி அலைகள் மூலம் பெறப்படும்
காந்த சக்தியினால் 150 கிலோ எடையுள்ள ஒரு
கல் உருண்டையை 15 வினாடிகள் அந்தரத்தில்
நிற்கச் செய்ய முடியும். இதற்கு ஆதாரம்
இருக்கிறது. விஞ்ஞானிகள் ஆராய்ந்து ஒத்துக்
கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பூனாவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள சிவபூர் மலைச்சரிவில் அமைந்துள்ள
குவாமர் அலிதர்வேஷ் என்ற தர்காவில் பீரங்கிக்
குண்டு போன்ற வடிவமுள்ள ஒரு 150 கிலோ
எடையுள்ள கல் இருக்கிறது. ஒரே நேரத்தில் 11
பேர் சூழ்ந்து நின்று கொண்டு தங்கள் கை
விரல்களால் அந்தக் கல்லை தொட்டபடி, மூச்சு
விடாமல் குவாமர் அலிதர்வேஷ் என்று சத்தமாகச்
சொல்லும் பொழுது அந்தக் கல்லானது
தலைக்கு மேல் எழும்பி 15 வினாடிகள் நின்று
விட்டு விழுகிறது. ஒலி அலைகள் மூலம் எழும்
காந்த ஆற்றலும், புவியீர்ப்பு விசை எனும் காந்த
ஆற்றலும் மோதும் பொழுது இது நிகழ்கிறது.
&v=MjCVsHhnX6U
அது போலவே நாம் விடாமல் உச்சரிக்கும்
மந்திரங்கள் மூலம் அளப்பரிய காந்த ஆற்றல்
கிடைக்கிறது. காந்த ஆற்றலே ப்ரம்ம
சக்தியாகும். மனச் சலனத்திற்கு காரணமாக
இருப்பது ப்ரம்ம சக்தியாகிய ப்ராணனின்
குறைபாடே ஆகும். இதைத்தான் ப்ராணனின்
சலனம் மனதின் சலனம் என்பார்கள். மந்திரங்களை
உச்சரித்து ப்ராண சக்தியை பெருக்கிக்
கொள்ளும் பொழுது மனமும் வலிமை பெற்று
சலனமற்ற நிலைக்குச் செல்கின்றது. எளிதில்
சித்தத்தின் ஏகாக்ரதை வாய்க்கிறது. எனவே
மந்திரங்களுக்கு வலிமை இருக்கிறது என்பது
ஆதார பூர்வமான உண்மையாகும். மந்திரங்கள்
மூலம் நம் ஊழ் வினைகளுக்கு பரிகாரங்கள்
செய்து கொள்ள முடியும் என்பது உண்மையே
ஆகும். இந்த ஓலி தத்துவ அடிப்படையில்தான்
தற்காலங்களில் பெயர் மாற்றம் செய்து மேன்மை
அடையலாம் என்று சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment