என்ன வியாபாரம் மற்றும் எங்கே என்பதை முடிவு செய்க
வெற்றி பெறும் ஒரு தொழிலதிபருக்கான அம்சங்கள் உங்களுக்கு இருக்கிறது என்றும் நிச்சயமாக தொழில்தான் செய்வது என்றும் நீங்கள் முடிவு செய்து வீட்டீர்கள் என்றால், உங்களுக்குக் சிறந்த தொழில் எதுவென்றும், அந்தத் தொழிலை எந்த இடத்தில் அமைப்பது என்றும் என்பதை முடிவு செய்யவேண்டும். தேர்வு உத்தி இந்த அமர்வின் பின் பகுதியில் விளக்கப்படுகிறது.
முழு நேரமாக ஆரம்பிப்பதா அல்லது பகுதி நேரமாக ஆரம்பிப்பதா என்பதை தீர்மானம் செய்க
உங்கள் வியாபாரத்தை பகுதி நேர வியாபாரமாகஆரமபிப்பதில் சில சுவாரஸ்யமான நன்மைகளும், சில தீமைகளும் உள்ளன. (அதாவது, இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைத் தொடர்ந்தபடியே பகுதி நேரமாக வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிப்பது). ஆனால் எப்போதும் பகுதி நேரமாக வியாபாரம் ஆரம்பிப்பதில் உள்ள நன்மைகள் ஆபத்துக்களை பெரும்பாலும் களைந்து விடுகிறது.
- வேலையிலிருந்து ஓய்வு, ஆரோக்கியம், மற்றும் சில துணைப்பயன்கள், விடுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் வருமான வாய்ப்புக்களை நீங்கள் தவிர்க்கவேண்டிய சூழலிலிருந்து விடுபடுகிறீர்கள்.
- உங்கள் வேலையையும், வியாபாரத்தையும் முழுமையாக இருவேரு உலகங்களாக நீங்கள் பிரித்து வைப்பதை உள்ளடக்கிய, உங்கள் முரண் நலன் சார்ந்த துறைகளை பராமரிக்க முடிந்ததென்றால் உங்கள் முழு நேர வேலை பாதிப்படையாது.
- துணை உற்பத்திகள், ரியல் எஸ்டேட், சிறப்பு உணவு, மின் - வர்த்தகம், நேரடி சந்தைப்படுத்தல் அல்லது குடும்பமாக நடத்தும் தொழில் ஆகிய பகுதி நேர தொழிலுக்குக் ஒத்து வரும் தொழில்களை தெரிவு செய்தால் உங்கள் முழு நேர வேலைக்கும் இதற்கும் முரண்பாடுகள் தோன்றுவதை தவிர்க்கலாம்.
- குடும்பத் தொழிலை நடத்துவதில் பல நன்மைகள் உண்டு. நீங்கள் வேலையில் இருக்கும்போது கூட உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அதை கவனித்துக்கொள்வார்கள். இந்த விதத்தில் ஏற்கனவே உங்களுக்கு ஒரு நிறுவனத்திற்கான உள்ளார்ந்த கட்டமைப்பு கிடைத்து விடுகிறது. வியாபாரம் செய்வதன் பயன்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடியும்.
ஆனால் ஒரு பகுதி நேரத் தொழிலைத் துவங்குவதில் பரிசீலிக்கவேண்டிய சில ஆபத்துக்கள் உள்ளன:
- நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்திலிருந்தே உங்கள் பகுதி நேர வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்ற சபலம் தோன்றும். இது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நியாயம் செய்வதாகாது, மேலும் எந்த ஒரு சூழலிலும் இதனை செய்யகூடாது. (நீங்கள் உங்கள் வேலையில் இருக்கும்போது, நெருக்கடிகளை எதிர்கொள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரோ அல்லது ஒரு நம்பகமான மனிதரோ இருப்பது அவசியம்.)
- இன்னொரு பிரச்சனை நீங்கள் உங்களை வேலைக்கு அமர்த்தியவருடன் போட்டியில் இறங்குவது, மறுபடியும் இது ஒரு சரியான விடயமன்று. அதாவது நீங்கள் முதலாளியாக இருந்து உங்கள் ஊழியர் இது போன்று செய்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் அல்லது கையாள்வீர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.
- உங்களது வேலையுடன் உங்களுக்கு ஏற்படும் முரண் அந்த வேலையை கெடுப்பதோடு உங்கள் பகுதி நேர வியாபாரத்தையும் பாதிக்கும்.
- அதிகப் வேலைப்பழு, மற்றும் உடற்சோர்வு ஆகியவை ஒரு பகுதி நேர முனைவோர்களின் ஒரு உண்மையான பிரச்சனையாகும்.
No comments:
Post a Comment