Saturday, September 12, 2015

உடற்பயிற்சி செய்தால் ஆயுள் கூடும்..

உடற்பயிற்சி செய்தால் ஆயுள் கூடும்...


தினமும் ஒரு 15 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் 3 ஆண்டுகள் நம் ஆயுள் கூடுகிறது என்று ஜெர்மனி நரபியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஸ்ட்ரோக், இருதய ரத்தக்குழாய் நோய்கள், புற்று நோய் மற்றும் நீரிழிவு ஆகியவை  ஆகியவை ஏற்படும் சந்தர்ப்பங்கள் பெருமளவு குறைவதாக இவர்கள் கூறுகின்றனர்.

4 லட்சம் பேரை ஆய்வு செய்ததிலிருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 8 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியே செயாமல் இருப்பவர்களைக் காட்டிலும் பயிற்சி செய்பவர்களின் மரண விகிதம் 14% குறைவாக இருப்பதாகவும் இந்த நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment