உங்களின் உள் எதிரிகள் யார் - www.v4all.org
எதிரிகளே இல்லாதவர்கள் என்று இன்று யாரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் உங்க்ளுக்கு சில எதிரிகளாவது இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் நான் இப்பொழுது உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளப் போகும் விஷ்யம் அந்த எதிரிகளைப் பற்றி அல்ல. உங்களின் உள் எதிரிகளைப் பற்றிய சில உண்மைகளை உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன்.
உங்களின் உள் எதிரிகள் யார் என்று அறிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பது எனக்குப் புரிகிறது. பேராசை, பொறாமை, கோபம், வெறுப்பு, பயம் ஆகியவை தான் நான் குறிப்பிடும் உள் எதிரிகள் ஆகும். மனிதனுக்கு ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கவே கூடாது. நீங்கள் சொந்தமாக ஒரு வீடு இருக்க வெண்டும் என்று நினைப்பது ஆசை. பத்து வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது பேராசை தானெ? எனக்கு மட்டும் தான் வீடு இருக்க வேண்டும், மற்றவர் யாருக்கும் இருக்கக் கூடாது என்று எண்ணுவதும் பேராசை தான். பேராசை என்னும் எதிரி உங்களை அழித்து விடும் தானே?
அதே போல் தான் பொறாமை, கோபம், வெறுப்பு, பயம் என்னும் உள் எதிரிகளும் உங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துபவை தான். கோபத்தினால், வேலை போய் விடலாம். ஏன் வாழ்க்கைத் துணையே பிரிந்து விடலாம். பொறாமை, பயம் போன்றவற்றால் நிம்மதியும், சந்தோஷமும் அழிந்து போகும்.
வெறுப்பினால் எந்த நன்மையும் விளையாது.இந்த உள் எதிரிகளை நீங்கள் வென்று விட்டால் வாழ்க்கை உங்கள் வசப்படும். வாழ்க்கை வசந்தமாகும். வாழ்க வளமுடன்!
urs
Dr.Star Anand ram
www.v4all.org
urs
Dr.Star Anand ram
www.v4all.org
No comments:
Post a Comment