நான்கு வயதான அந்தப் பெண் குழந்தை நிமோனியா சுரம் வந்தது, அடுத்தவாரமே
இரண்டாம் முறை நிமோனியா தாக்கியதுடன் மட்டுமல்லாது, விஷக் காய்ச்சலும் கண்டது. மருத்துவமனையில் போராடிய அந்த குழந்தையின் தந்தையும்;, மருத்துவர்களும், குழந்தையை பிழைக்க வைத்தனர். ஆனால் அவர்களால் அந்தக் குழந்தையை முடக்கிப்போட வைக்க வந்த போலியோவை தடுக்க முடியவில்லை. ஆவளது கால்கள் சூம்பிப்போயின.

அந்தச்சிறுமி பல சோதனைகளையும் தாண்டி பல சிரமத்துடன் தனது ஒன்பதாவது வயதை அடைந்து, விபரம் தெரியவந்த நேரத்தில், கம்பிக்குள் செலுத்தப்பட்டு, பெலிட்டால் கட்டப்பட்ட தனது கால்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆவேசம் வந்தவளாக கண்கள் கலங்கியபடி சொன்னாள் ' அப்பா நானும் வேகமாக நடக்கவேண்டும் ஓடவேண்டும்'
அவளது தந்தை அளவுக்கு முன்னால் அழாமல், உள்ளே சென்று கடவுளின் முன்னால் தன் மகளின் நிலையை நினைத்து வாய்விட்டு அழுதார். அந்தவேளையில் அவரால் செய்ய முடிந்தது அதை மட்டும்தான்.

இருந்தாலும் தந்தை அவளை அழைத்துக்கொண்டு சென்று மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். பெரலிசிஸ் வந்தவர்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை என மருத்துவர்கள் உதடு பிதுக்கினார்கள்.
ஓவ்வொரு நொடியுடனும் மருத்துவரின் இந்த கைவிரிப்பால் போராடிய இந்தச்சிறுமி,
தனது கால்களில் கட்டப்பட்டிருந்த பெலிட்டை அவிழ்த்தி வீசினாள். சுக்கர நாற்காலியில் இருந்து இறங்கி மருத்துவர்களால் அவளால் எடுத்து வைக்கமுடியாது என்ற சொன்ன அவளது முதலாவது அடியை எடுத்து வைத்தாள்.

அப்பா நான் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்றாள் தனது 13ஆவது வயதில்.
பள்ளிக்குச் சென்றபோதிலும் அவளது முழுக்கவனமும் விளையாட்டிலேயே இருந்தது.
அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரிடம் சென்று தனது விருப்பத்தை கூறினாள்.

செஸ் விளையாடுகிறாயா? கரம் விளையாடுகிறாயா? என அந்த ஆசிரியர் கேட்டார்.
இல்லை.... நான் ஓடப்போகின்றேன் என்றாள் இவள்.
அவளது விருப்பப்படி ஆசிரியர் ஓட அனுமதித்தார். ஓடினாள், மற்றய மாணவர்கள் பரிசுகளும் வாங்கி வீடு சென்ற பின்னரே தனது போட்டி முடிவிடத்தை எட்டினாள் அவள்.

தொடர்ந்தும் மூன்று வருடங்களாக ஓடினாள் அவற்றில் பாதி அவளால் முடியாமல் மயங்கியும் விழுந்திருக்கின்றாள். மீதிகளில் கடைசியிலும் கடைசியாக வந்து எல்லைகளை தொட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவளது 16ஆவது வயதில் தன்னால் முடியும் என்ற மனத்திடத்திற்கு காலத்தின் பதில்கள் மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பித்தன. கல்லூரி ஓட்டப்போட்டியில் முதல் இடம், கல்லூரிகளின் ஓட்டப்போட்டியில் முதல் இடம், மாவட்ட ஓட்டப்போட்டியில் முதல் இடம், மகாண ஓட்டப்போட்டியில் முதல் இடம், தேசிய ஓட்டப்போட்டியில் முதல் இடம் என்று தாண்டி சர்வதேச ஓட்டப்போட்டி என்ற மைல்கல்லை தொட்டு நின்று நிதானித்தாள். உலகம் தனது மூக்கில் மேல் வைத்த விரலை எடுத்துக்கொள்ள மிக நீண்ட நேரம் தேவைப்பட்டது.
1960 ஒலிம்பிக்ஸ் உலகில் மிகச்சிறந்தவர்கள் மேதிக்கொள்ளும் களம். இதோ 100 மீற்றர் ஓட்டப்பாதையில் இவள்..... ஒலகில் இரண்டாவதாக வந்த சந்தர்ப்பமே இல்லை என்ற சாதனையினை தன்னகத்தே வைத்திருந்த ஜூட்டா ஹெயின் என்ற பெண்ணை, இரண்டாவதாக்கி முதலிடத்தை பெற்றாள் இவள்.
இன்று மாலையே 200 ஆவது மீட்டர் ஓட்டப்போட்டியிலும் முதலாவதாக வந்து தங்கம் வென்றாள் இவள்.

மறுநாள் காலை அஞ்சல் ஓட்டப்போட்டி... தத்தமது அணியின் மூன்றுபேர்கள் ஓடி முடித்து நான்காவதும், முடிவு வீராங்கனையுமான இவளிடம் குச்சியை இவளது நாட்டு வீராங்கனை இவளிடம் நீட்டுகின்றாள்....
இந்தக்கணப்பொழுதில் கோல் தவறுகின்றது இவள் நிலைகுலைந்து விழுகின்றாள்.
நிமிர்ந்து முன்னாலே பார்க்கின்றாள்.... அங்கே பேய்போல ஓடிக்கொண்டிருக்கின்றாள் ஜூட்டா ஹெயின். இதோ கீழே கிடந்த கோலை எடுத்துக்கொண்டு அந்தக்கணத்தில் புயலுக்கே வேகத்தை கற்றுக்கொடுத்தபடி ஓடினாள் இவள். உலகத்தில் ஒரு சாதனை படைக்கப்பட்டது அந்த கணத்தில்த்தான்.

ஓட்டப்பந்தயத்தில் மூன்று தங்கம்வென்ற உலகின் அதிகவேகமான பெரலிசிஸ் தாக்கிய அந்தப்பெண் தான் வில்மா ருடல்ப்.
உங்கள் மனங்களுக்குள்ளும் சூம்பிய கால்களுடன் சாதனைகள் வேதனைகளுடன் வியாபித்திருக்கலாம். 'என்னால் முடியும'; என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லுங்கள்..... உங்கள் மதும் இப்போதே வில்மா ஆகலாம்....

No comments:
Post a Comment