Wednesday, March 4, 2015

அகத்தியர் தீட்சை

"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.
"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.
"யங் வங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.
"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.
"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.
"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.
"வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.
"மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.
கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.
அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.
"றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .
"ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.
"சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.
"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.
"சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.
"திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.
"ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.
"இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.
"அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.
"ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.
குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.
இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.
இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.
இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும், "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.
முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.
நாடியிலிருந்த பாடல் அப்படியே.. சில வார்த்தைகள் புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வேலை முதல் படியில் கால் வைப்பது மட்டுமே. மீதியை அந்த சிவம் பார்த்துக் கொள்ளும்..

1 comment:

  1. கெவுனம் என்றால் என்ன

    ReplyDelete