Showing posts with label Motivator. Show all posts
Showing posts with label Motivator. Show all posts

Thursday, May 19, 2016

மூச்சைக் கவனி..... பேச்சை குறை.

மூச்சைக் கவனி.....
பேச்சை குறை.........
JC.Dr.Star Anand ram 

#வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.

#புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.

#சுவாசத்தைக் கவனித்தல்(தியானம்)
"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். 

 #சுவாசத்தைக் கவனித்தல் என  பொருள்   இது மிகவும் எளிய முறை.

 #எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
 முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.

#நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.

நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.

 #பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

 #உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.

அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.

 #சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.

 ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.

#அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.

#காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."

#எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.

Saturday, July 18, 2015

கோமாதா பற்றிய அரிய ஆன்மிக தகவல்கள்

கோமாதா பற்றிய அரிய ஆன்மிக தகவல்கள்
(share) செய்யுங்கள்)
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார்.
4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு
தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
11. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.
12. கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா? பணக் கஷ்டம் நீங்கும்.
13. பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
14. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.
15. பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம்.
16. பசுக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க முடியாது. எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ வேண்டும்.
17. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.
18. அதிகப்பால் கறப்பதற்காக பசுக்களுக்கு அதிகப
19. உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது.
20. பசுக்கள் இறந்தால், அவற்றுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
21. பசுவையும் கன்றையும் பிரிக்கும் பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது.
22. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது.
23. சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்.
24. ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
25. பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் சுமை குறையும்.
26. ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.
27. பசு தானம் கொடுக்கும் போது ஜெர்சி இன பசுக்களை தானம் வழங்கக் கூடாது. நாட்டு பசுவையே தானமாக கொடுக்க வேண்டும்.
28. சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது.
29. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும்.
30. பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
31. நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும்.
32. ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
33. ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும்.
34. மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.
35. பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும்.
36. ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம்.
37. கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்த னர்.
38. பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
39. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
40. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
41. திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிறைய பேர் பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக் கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம்.
42. நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண் டும்.
43. வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
44. வெளிப்புறம் மேயும் பசுக்களுக்கு நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.
45. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் வரை சாணத்தையும், கோசலத்தையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக் கழுவிவிட வேண் டும்.
46. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
47. வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும்.
48. பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
49. நமக்கு வருவாய் அளிக்க இயலாத நலிந்த பசு மாடுகளை, பசுக்களை பராமரிக்கும் பசு மடங்களிலும் தொழுவங்களிலும் சேர்ப்பிக்க வேண்டும்.
50. பசுக்களை அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரித்துக் காக்க வேண்டும்.
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand

Thursday, July 16, 2015

பொதுவாக ஆண்களை விட பெண்கள் பலவீனமானவர்கள் என்கின்ற

பொதுவாக ஆண்களை விட பெண்கள் பலவீனமானவர்கள் என்கின்ற கருத்து பரவலாகவே உள்ளது. உண்மையில் பெண் ஆணை விட பலவீனமானவள் தானா? மேலே படியுங்கள்....
ஒருவரை நாம் எதை வைத்து பலவீனமானவர் என்று சொல்ல முடியும்? இரண்டு காரணிகளை வைத்து ஒருவர் வலுவானவரா இல்லையா என்று சொல்ல முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.ஒன்று அவரது உடல் வலிமை; மற்றது அவரது மன வலிமை ஆகும்.
பொதுவாக பெண்கள் ஆண்களை விட உடல் வலிமையில் சற்று பலவீனமானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.ஆனால் மன வலிமையில்? மன வலிமையில் பெண்கள் ஆண்களுக்குசற்றும் சளைத்தவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் ஆண்களை விட மன வலிமை அதிகம் உடையவர்கள் என்றே தோன்றுகிறது.
பெண்கள் ஆண்களை விட உடல் வலிகளை எளிதில் தாங்கிக் கொள்கிறார்கள் என்பது நிஜம். 'பிரசவ வலி' தாங்கும் சக்தி ஒன்று போதும், அவர்கள் எவ்வளவு மன வலிமை உடையவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கு. மேலும் பெண்கள் கடினமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதில் அதிக பயம் கொள்வதில்லை. பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகவே செயல் படுகின்றனர்.
பெண்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் பெண்கள் தான் உலகம் முழுவதிலும் ஆண்களை விட அதிக வருடங்கள் உயிர் வாழ்கின்றனர்.
கூட்டி, கழித்து , பெருக்கி, வகுத்துப் பார்க்க்கையில் ஆண் = பெண் என்றே விடை வருகிறது.
சில விஷயங்களில் ஆண் தைரியமானவன், வலுவானவன்; சில விஷயங்களில் பெண் வலுவானவள், தைரியமானவள். இருவரும் சேரும் பொழுது ஒருவருக்கொருவர் நிறைவு செய்து முழுமையான பலன்களை ஜோடியாக இருக்கும் போது பெறுகின்றனர்.
என்னே இறைவனது படைப்புத் திறன்? உலகமே ஆண், பெண் என்னும் அற்புத உறவை அச்சாக வைத்தே சுழன்றுக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது.
பெண் பலவீனமானவள் அல்ல. ஆண், பெண் இருவரும் சமமே. வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Thursday, July 17, 2014

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு...
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே..


எந்தச் சூழலில் வளரும் குழந்தையையும் பெற்றோர் இப்படித்தானே ஆசையாகக் கொஞ்சுவார்கள்? கண்ணுக்குள் வைத்துக் காக்க நினைக்கும் குழந்தை  கண்ணை கசக்கி வரும் வரை காத்திருப்பானேன்? குழந்தைகளின் சேஃப் ரூல், பாடி ரூல் ஆகியவற்றோடு இன்னும் சில அடிப்படை விஷயங்களையும்  விவாதிக்கலாம். குழந்தைகளுக்கும் ரகசியம், தனிமை, முடிவுகள், தீர்மானங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் உண்டு. அது பற்றி...

பச்சைக் குழந்தைக்கும் பள்ளி செல்லும் குழந்தைக்கும் என்ன ப்ரைவசி என்கிறீர்களா? தனிமை அல்லது ப்ரைவசி என்பது அனைவருக்கும் அவசியம்.  குழந்தையை பாயிலோ தொட்டிலிலோ விட்டு, அவர்கள் தூங்காத நேரம் கவனியுங்கள். தனக்குத் தானே பேசிக்கொண்டு ஆனந்தமாக மறுத்தும்  சிரித்தும் அழுதும் கோபித்தும் சமாளிக்கும். பார்க்கும்போதே அழகு அள்ளும். அதுபோலவே பள்ளி செல்லும் உங்கள் குழந்தை தனக்குத் தானே  பேசிக்கொள்வதை கவனியுங்கள். அதெல்லாம் அவர்களின் ப்ரைவேட் டைம். இந்தத் தனிமையும் சில நேரம் இனிமையாக இருக்கும். உங்கள்  குழந்தைகளுக்கும் அவர்களின் தனிப்பட்ட நேரங்களை அனுமதியுங்கள். அதை அவர்கள் ரசிக்கும்போதே அவர்களுடைய இன்பமும் துன்பமும்  வெளிவரும்.

தனிமை அவசியம் என்றாலும், எவ்வளவு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம்  புரிந்துவிடும். அதுவரை உங்கள் கவனிப்பு  மிகவும் அவசியம். டி.வி. பார்க்கிறார்கள்... கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள்... இன்டர்நெட் பார்க்கிறார்கள்  என்றால் சிறிது நேரம் அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். ‘அதிக நேர தனிமை தேவையில்லை... டி.வி., கம்ப்யூட்டரில் அவர்கள் செலவிடும் நேரம்  முடிந்தது’ என்று நீங்கள் நினைக்கும்போது, அதிலிருந்து வெளியில் வர அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் பேச்சு கொடுங்கள். ‘டி.வி.யில் என்ன  புரோக்ராம்?’, ‘கம்ப்யூட்டரில் அது என்ன டெக்னாலஜி’ போன்ற கேள்விகளைக் கேட்டு மெதுவாக வெளியேற்றி விடுங்கள். ஒன்றை அதிகமாக   தடுக்கும்போது அதை நோக்கி மனம் செல்வது இயற்கையே. ‘டி.வி. பார்க்கலாம்...

உனக்கு விருப்பமான நிகழ்ச்சியை இத்தனை மணி நேரம் பார்த்துவிட்டு அடுத்த வேலைக்கு போய்விட வேண்டும்’ என்று சிறிது அழுத்தமாகச் சொல்லி  புரிய வைத்தல் அவசியம். பெற்றோரின் பிம்பம் அல்லது பிரதிபலிப்புதானே குழந்தைகள்? அவர்களை டி.வி. பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு,  நீங்கள் நாள் முழுதும் டி.வி.யில் மூழ்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
ரகசியம்...

இது மிக முக்கியமானது. குழந்தைகள் உங்களிடம் ரகசியம் காக்க தேவையில்லை. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துபவர்கள், ‘யாருகிட்டயும்  சொல்லக் கூடாது... சொன்னா அடிவிழும்’ என்றோ, வேறுவிதமாகவோ பயமுறுத்தி வைத்திருப்பார்கள். ‘அந்த ரகசியம் தேவையற்றது... அம்மாவிடம்  அல்லது அப்பாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்ற நம்பிக்கையை விதைப்பது நம் கடமை. குழந்தைகள் எங்கு சென்று வந்தாலும்  விசாரியுங்கள். விசாரணை என்பது கடினமாக இல்லாமல் மிக இயல்பாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், ‘போனதும் விசாரிப்பாங்க’ என எரிச்சல்  அடைந்து உங்களிடம் கண்டிப்பாக மறைப்பார்கள். உதாரணமாக... குழந்தைகள் சண்டையிட்டு லேசாக அடிபட்டிருப்பார்கள்...

அதை நீங்கள் விசாரித்துக் கோபமடைந்து, அடுத்த நாள் பள்ளியில் புகார் வரை சென்றால் அது அந்தக் குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். இன்று  சண்டையிடுபவர்கள் நாளை சேர்ந்துவிடுவார்கள். தேவையற்ற பதற்ற விசாரணை ஒரு நல்ல மனநிலையை சிதைக்கக் காரணமாகும். அதற்குப் பதில்,  தினப்படி இதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால் அவர்களே உங்களிடம் சொல்வார்கள். இது போன்ற நேரங்களில், ‘சரிடா கண்ணு... நாளைக்கு  சரியாயிடும்... அவனும் குழந்தைதானே? நீயே மிஸ்கிட்ட சொல்லு...’ என்று ஆறுதலளிப்பதே போதும். அவர்களுக்கு உங்களிடம் என்ன  வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கை வர வேண்டும். அது மட்டுமே முக்கியம்!

முடிவுகள் அல்லது தீர்மானங்கள் பிறந்த குழந்தைக்கு கூட முடிவுகளும் தீர்மானங்களும் இருக்கும். சின்னக் குழந்தைக்கு விருப்பமில்லாததை  ஊட்டினால் கூட, நம் மீதே துப்புவதும், இஷ்டமில்லாதவர்கள் தூக்கினால் கை காலை உதறி அழுது எதிர்ப்பை தெரிவிப்பதும் அதனுடைய முடிவும்  தீர்மானமும்தான். சிறுவயதில் இப்படி விளையாட்டாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் பழகுவது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கே உதவும். 

‘பள்ளியில் ஒரு விழா...

அதில் கலந்து கொள்ளவேண்டும்’ என்று அடம்பிடிக்கும் குழந்தை எனில், அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் கருத்தையும் சொல்லி,  முடிவை அவர்களையே எடுக்கச் சொல்லலாம். ஏதாவது ஒரு பொருள் தேவைப்படும்போது, அதனுடைய அவசியத் தேவைகளை விவாதித்து புரிய  வைக்கலாம். ஒரு வேளை இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனில், இன்னும் கொஞ்சம் விரிவாகவே விவாதித்து சொல்லித் தரலாம். எதுவுமே  ஆரம்பிக்கும்போது மட்டுமே கடினம்... பழகிவிட்டால் தானாகவே அவசியத்தையும் காரண காரியங்களையும் யோசிப்பார்கள். கொஞ்சம் பணம்  கொடுத்து அவர்களையே கடைக்குச் சென்று பழக்கலாம். ‘தேவை - தேவையில்லை’யை தானாகவே புரிய வைப்பது எளிது, சொல்லி புரியவைப்பதை  காட்டிலும்! 

விருப்பு வெறுப்புகள்...

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிறிய பிரச்சனை முதல் பெரிய விவாதம் வரை நிகழக் காரணம் இந்த விருப்பு வெறுப்புகளே. நமக்குப் பிடித்தது  குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால்தான் பிரச்னையே ஆரம்பிக்கும். நம் குழந்தைகள் நம்முடையவை அல்ல... கலீல் ஜிப்ரான்  கருத்துப்படி, ‘அவர்கள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்’... தனிமனித உரிமைகளை அவர்கள் இந்த பூமியை தொட்ட நொடியில்  பெறுகிறார்கள்.

ஆகவே, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும், குறைந்தபட்சம் காதுகொடுத்தேனும் கேட்கலாம். நம்மால் முடியக்கூடிய விஷயம்  எனில் சந்தோஷமாக அனுமதிக்கலாம். இல்லையெனில், ஏன் முடியாது என்று அவர்களிடம் தெளிவுபடுத்துவதும் நம் கடமைதான். மிகச் சிறிய  வயதிலிருந்தே இப்படி பழக்கினால் பிற்காலத்தில் பெரும் விவாதம் வருவதை தவிர்க்கலாம்.

Wednesday, July 16, 2014

அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தா - கடவுளையும் காட்டலாம்!

கடவுளையும் காட்டலாம்!
.
.
எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா?' என்று யாராவது உங்களிடம் கேட்டால், "முடியும்' என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். "முடியாது' என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன்.
.
ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டு விட வேண்டும் என நினைத்து காட்டில் தவமிருந்தார். ஒருநாள் ஒரு வேடன் வந்தான்.
.
அவன் பத்மபாதரிடம், ""சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு தூங்குதே! உனக்கு வீடு வாசல் இல்லையா?'' என்றான்.
.
""போடா அபிஷ்டு! நான் தியானத்தில் இருக்கிறேன்,''.
.
""அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக கண்ணை மூடி இருந்தே! சொல்லு!'' என்றான்.
.
""நான் நரசிம்மத்தை எண்ணி தவமிருக்கிறேன்,''.
.
""நரசிம்மமா? அப்படின்னா என்ன!''
.
""சிங்க முகம், மனித உடல் கொண்டது அது''.
.
""அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி... நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்! இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்,'' என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். "சரியான ஞானசூன்யம்' என்று எண்ணிக்கொண்டார்.
.
வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. மாலையாகி விட்டது.
.
""ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! முருகா! அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!'' என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.
.
இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு கண்டு அந்த நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் வந்தார்.
.
""ஆகா! மாட்டிகிட்டியா!'' என்ற வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான். வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த நாயகன் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றான்.
நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.
.
""சாமி! பாருமையா! இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்''.
பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் தான் தெரிந்தது.
.
""அடேய்! அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்,'' என்றபடி ஏளனமாய் சிரித்தார்.
அப்போது அவர் காதில் குரல் கேட்டது.
.
""பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்!'' என்றவர் மறைந்து விட்டார்.


.
ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி அவர் வெட்கப்பட்டார். பின், ஆதிசங்கரரை சந்தித்து அவரது சீடரான பிறகே ஞானம் அடைந்தார்.



Friday, July 11, 2014

கலாமும் , கடவுளும் ( அவசியம் படிக்க வேண்டிய பதிவு ) - நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTlhx-AfC1tqZFgqptlDn5LCKOF1f4GIYnQ3HgMQPG-fEqmBUVr
கலாமும் , கடவுளும் ( அவசியம் படிக்க வேண்டிய பதிவு )  - நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

மாசு , மருவற்ற  நம் சம காலத்து மகாத்மா  - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த  Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி.. 

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்...

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா? 

கலாம்: இல்லை ஐயா 

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா? 

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

எப்பூடி...?

  
இதே போன்று , சுவையான நிகழ்வு - ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் நடந்ததாக கேள்வி.
கரென்ட் கம்பத்திலே கைவைச்சுத்தான் , நான் கரென்ட் இருக்கிறதை நம்புவேன்னு சொன்னா, நீங்க கடவுளையும் பார்த்து , உணர்ந்து அதுக்கு அப்புறம் நம்புனா, போதும்...

இல்லையா , உணர முயற்சிப்போம்.. நானும் உங்க கூட சேர்ந்துக்கிடுறேன். ..

www.v4all.org 

Thursday, July 3, 2014

Real life Transfarmer - ‘நீ வாழ்நாள் எல்லாம் ஏழையாகத்தான் இருப்பாய்’ அலட்சியப்படுத்திய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்

‘நீ வாழ்நாள் எல்லாம் ஏழையாகத்தான் இருப்பாய்’ அலட்சியப்படுத்திய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன். - www.v4all.org 


அலட்சியப்படுத்திய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன் 

சீனாவை சேர்ந்த ஹு ஜியாயுன் என்ற இளைஞர் கடந்த 2007–ம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை காதலித்தார். அப்போது காதலர்கள் இருவரும் சினிமாவுக்கு செல்ல விரும்பினர். ஆனால் ஹு ஜியாயுனின் ஏழ்மையால், சினிமாவுக்கு 2 டிக்கெட் வாங்குவதற்கு கூட அவரால் முடியவில்லை.

இதனால் அவரது காதலி, ‘நீ வாழ்நாள் எல்லாம் ஏழையாகத்தான் இருப்பாய்’ என்று கூறிவிட்டு அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த ஹு ஜியாயுன், கடந்த 7 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து பணக்காரனாக உயர்ந்து விட்டார். இதை அவரது காதலிக்கு உணர்த்த விரும்பிய அவர், சினிமாவையே கையில் எடுத்தார்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ சினிமாவுக்கு, பீஜிங்கில் உள்ள 4 ஐமேக்ஸ் தியேட்டர்களின் முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிவிட்டார். இதற்கு 40 ஆயிரம் டாலர் (ரூ.24 லட்சம்) செலவானது. இந்த தொகையும், அவரது மாத வருமானத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தனது டுவிட்டர் இணையதளம் மூலமாக தெரிவித்துள்ள அவர், இதை தனது காதலி பார்க்கும் வரை மீண்டும் மீண்டும் வெளியிடுமாறு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, July 1, 2014

விவேகானந்தரின் வீர அறிவுரைகள் - 100% power full & Motivation - Must Read

விவேகானந்தரின் வீர அறிவுரைகள்

www.v4all.org 

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில்.
தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு

நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத
ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்,இந்துக்கள் சிறந்த இந்துக்களாகவும் வாழ வேண்டும் . ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.

கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.

உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.

இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?

உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவனிடத்தில்  தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.

பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

நாம் இந்த உலகில் பிறந்தது நம்மை வலிமையுடையவர்களாக்கி கொள்ளவே , நான் வேண்டுவதெல்லாம் வலிமை , வலிமை , வலிமை ஒன்றே 

நான் ஒவ்வொருவரின் முன் வைக்கும் முதல் கேள்வி இது தான் , நீ வலிமை உடையவனாக இருக்கிறாயா? நீ வலிமையை உணர்கிறாயா ? என்பது தான் 

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மரணம் மட்டும் தான் . தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

பொதுவாக இளைஞர்கள் ஜோதிடத்தின் பக்கம் செல்வது இல்லை , வலிமை மிக்க இளைஞன் எழுந்து நின்று என் தலை விதியை நானே அமைத்து கொள்வேன் என்கிறான் 

விதி என்பது என்ன ? நீ முன்னர் என்ன செய்தாயோ அதுதான் உனது இன்றைய விதி ,நீ இன்று என்ன செய்கிறாயோ அது உன் நாளைய தலை விதி 
துன்பபடுபவர்களை பார்த்து அது எல்லாம் அவர்கள் தலை விதி , கர்ம வினை என்பதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் 
அது அவர்கள் கர்மாவானால், அதை போக்குவதுதான் எனது கர்மா 

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
குருவுக்குப் பணிந்து நடந்தலும் , பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலும் வெற்றிக்கு வழிகளாகும்.

சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள் உங்களுக்கு இந்த உறக்கம் பொருந்தாது .
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfnqM3Z0XYpfE5gz9n_26N543cztQrfVDCHPs9j2JNpFKQ616N5YJbVtZ5atBWe_NdcLpbmToDsxQpwB7SdIUTAFI9ltvUyu0goMn_okCJIjvVLu4Nx1k0fjU2GOnXjZTYfubjtjZ7FCVw/s240/vivek.gif 








இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே!
என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ 
வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு 
ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ 
எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது.
 கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. 
தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் 
நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் 
மாறாமல் முன்னேறிச் செல்.

நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது  இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

சகோதரா!  நீ அழுவதேன் சகோதரா? மரணமோ, நோயோ உன்கில்லை. துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ 
வேண்டும்? மாற்றமோ, மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ 
ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன 
வேண்டுமானாலும் சொல்லட்டும் ,நீ உன் முடிவில் உறுதியாக இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.

கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.



இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.

மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். 
ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?
நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.

உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.

எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

ஒரு காரியம் செய்யும் பொது உண்டாகும் பலனில் ஏற்படும் அக்கறையை விட  அந்த காரியத்தை  செய்யும்  முறைக்கே அதிக அக்கறை கொடுக்க வேண்டும் . நான் கற்று கொண்ட பாடங்களிலே முக்கியமானதும் , பெரியதும் இதுவேயாகும் , இந்த ஒரு பாடத்திலிருந்து நான் பல பாடங்கள் கற்று கொண்டே வருகிறேன் .

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பது அல்ல , அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.

ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் செய்யும்  சாதாரணக் காரியங்களை கவனித்தாலே அவனுடைய உண்மை தன்மை தெரியும் .

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய். இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

தியானம் செய்யுங்கள் ,உன்னுடைய உண்மை தன்மையை நீ தெரிந்து கொள்ள விரும்பினால் நீ தியானம் செய் ,

மனம் அடங்க மறுக்கிறது , நாம் எங்கே போவது, எல்லோரும் குகைக்கு போய்விடலாமா? அதனால் என்ன பயன்? குகையில் பேய் இருக்குமோ? எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது குகையாகிவிடும், அந்த இடமே சொர்கமாக ஆகிவிடும் .

இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.

இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான், பிறகு இயற்கையை வென்று விடுகிறான் , இயற்க்கை அவனுக்கு அடங்கி விடுகிறது .
வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
பசு எப்போதாவது பொய் பேசி இருக்கிறதா , ஆனாலும் அது ஒரு பசுதான் ,மனிதன் பொய் பேசுகிறான் பிறகு அவனே தெய்வமாகவும் ஆகி விடுகிறான் 
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.

பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை?

நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீ ஒரு நூல் நிலையத்தையே படித்தவனை விட அறிவாளியாக இருப்பாய்.

பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.

ஆன்மிகத்தில் பேரின்பம் கிடைக்காமல் போனால் என்ன , அதற்காக புலன் இன்பதையா நாடி செல்வேன் ? அமுதம் கிடைக்காமல் போனால் சாக்கடை நீரையா அருந்துவேன்  

வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை.
மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உனக்கு எத்தனை மொழிகள் தெரிந்தால் என்ன ? உன் மொழி இலக்கண சுத்தமாக இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? நீ யாராக இருந்தால் என்ன ? கேள்வி இதுதான் உன்னிடம் கொடுப்பதற்க்கு எதாவது இருகிறதா - அப்படியானால் அதை நீ மற்றவருக்கு கொடு 

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.

இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கையோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.

எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.

இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.

என் மகனே என் வார்த்தைகளின் மீது உனக்கு சிறிதளவேனும் மதிப்பிருந்தால் முதலில் உன் அறை கதவுகளை திறத்து விடு , துன்பத்தில் வாடுபவர்களை பார் , அறியாமையால் வாடுபவர்களை பார் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய் ,

 அவர்களின் துன்பத்தை போக்கு , அறியாமையை போக்கு , அவர்களுக்கு கல்வியறிவு புகட்டு  இக்கருத்துக்களை எல்லாம் அவர்களிடம் பொய் சொல்லு,.


Urs - www.v4all.org