Showing posts with label Corporate Training Company in tripur. Show all posts
Showing posts with label Corporate Training Company in tripur. Show all posts

Wednesday, May 18, 2016

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்


கெட்ட கனவுகள், நிம்மதியற்ற உறக்க நிலை,பேய்-ஆவி பயம் நீங்க சிறிய வெள்ளை துணியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் கருப்பு உப்பை சிறிதளவு முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்க மேற்கண்டவை நீங்கும். அனைத்து தீய சக்திகளையும் ஓட்ட வல்லது கருப்பு உப்பு.

Monday, July 27, 2015

சிரிப்பு யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சிரிப்பு யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
www.happy4all.org

சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்வதால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. 

சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுவதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. 

இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும். சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்க முடிகின்றது.

Tuesday, July 21, 2015

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை
(share) செய்யுங்கள்)
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand


Saturday, June 20, 2015

கலிலியோ

பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.
தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.
அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.
கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.
அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.
அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.
கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவன் சொல்வதாகக் காரணம் சொல்லி அவனை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.
கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை “Dialogue” புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
தனியே ஒரு குரல்!!!
68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.
கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய “Dialogue” நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.
சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.
எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.
urs
www.v4all.org

Monday, June 15, 2015

மஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்!

மஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்!
எனக்குள் ஒரு கேள்வி: விநாயகர் முருகன் சிவன், விஷ்ணு --- ஒரே கடவுளின் பல வடிவங்களுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர,
மூலமான ஒரே கடவுளுக்கென ஏன் அந்த மந்திரம் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி. ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான
மந்திரந்தான் ஆயினும் சாஸ்திரக் கருத்தை மட்டுமே கொண்டு சிலர் ப்ரணவ ஜபம் செய்யலாம், முதலில் ‘ஓம்’ என்று கூறிவிட்டு அதோடு அந்தந்த
தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர (ஓம் கணேசாய நம:) : தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்கிறார்கள்.
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத்
தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின்
கருத்து.
இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும்என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுதுஅவர்கள்
முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன்.
நேரம்: மாலை ஐந்து மணி.
முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டியபகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின்மறுபுறத்திலி
ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள். அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும்,
பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, " நேற்றிரவு பெரியவாள்
சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள்
அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன்
வினவினார்.
அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: "மடியும்வேண்டாம்;
அந்தரங்கமும் வேண்டாம்" " அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய
ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’: மந்திரோபதேசம் பெற்றோம்.
‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்று மஹா பெரியவா கூறினார்கள்.
மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும்.
ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று
பெரியவாளும் ‘வஹ’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.
ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்றமகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர்
அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது! ‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.
நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’
எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக்கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது
ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.
ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக
மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்! எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே
வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில்
ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்

குண்டலினி எழுந்தால் என்னவாகும்?

குண்டலினி சக்தியை எழுப்புவ தற்காக
சித்தர்கள் சொன்ன உண்மை ரகசியங்கள் .
---------------------------------------------------------------
குண்டலினி எழுந்தால் என்னவாகும்?
-----------------------------------------------------------
குண்டலினி என்பது நமக்குள்
புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும்,
அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக
சுருண்டு நமது மூலாதாரத்தில்
புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த
குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது,
இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன்
மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு
அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட
முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர்,
நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு
ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது
உடலானது எழுபத்தி இரண்டாயிரம்
நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும்,
இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில்
இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில்
விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும்
குண்டலினியை கவனிப்போம்.
குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த
நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை
சீண்டினால் என்ன ஆகும் சீறிக்
கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு
ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!
ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது
மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி
கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற
குண்டலினி சக்தியானது
மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து
துரியம் என்கிற உச்சந்தலை வரை
கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த
துரியத்திற்கு குண்டலினியை கொண்டு
வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை
காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.
இப்படி குண்டலினியை மூலாதாரத்தில்
இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு
கொண்டு வந்தால் என்னவாகும்?
அந்த அனுபவத்தை கொங்கணவர்
பின்வருமாறு விளக்குகிறார்.
உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.
- கொங்கணவர் -
உணர்வற்று, உடலற்று, யோகமற்று,
ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று,
பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய
இரண்டும் அற்று லெச்சை, கூச்சம்,
சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று,
நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும்
புத்தியும் லயித்து போகவேண்டும் என்று
எண்ணினால் குண்டலி யோகத்தை செய்
என்கிறார் கொங்கணவர்.
இப்போது குண்டலினியை எழுப்பி மேலே
கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில்
மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு
நிலையாக உயர்த்திட வேண்டுமா?
குண்டலினியும் நாடியும்!!
-----------------------------------------
குண்டலினி பற்றிய அடிப்படை
தகவல்களைத்தான் இது வரையில் நாம்
பார்த்திருக்கிறோம். குண்டலினி என்பது
என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி
இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக்
கூடியது? என்பது மாதிரியான விவரங்களை
இதுவரை பார்த்திருக்கிறோம்.
இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியை
எழுப்புவது, அதன் செயல்பாடுகள்,
விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க
வேண்டி இருக்கிறது.
அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்த
பதிவினை வாசித்து விட வேண்டுகிறேன்.
நேற்றைய பதிவில் நமது உடலில் எழுபத்தி
இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக ஒரு வரித்
தகவலை பகிர்ந்திருந்தேன். இப்போது இந்த
நாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம்
இப்போது அவசியமாகிறது.
நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல்,
நோக்குதல் போன்றவை நேரடி
அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை
நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என
பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற
மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்
சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த
நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம்.
ஆனால் நரம்புகளைப் போல இவற்றை
நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை
சூட்சுமமானது என்கின்றனர்.
மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம்
நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர்
பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும்
விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில்
7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம்
நாடிகளும், இடது கண்ணில் 2000ம்
நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலது
காதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500
நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,
பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,
முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம்
நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலது
கையில் 1500 நாடிகளும், இடது கையில்
1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம்
நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம்
நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,
பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில்
13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள்
என ஆக மொத்தம் 72000ம் நாடிகள்
இருக்கின்றதாம்.
இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள்
முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை
பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை,
காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை,
சங்கினி, குரு என்பதாகும்.
பிங்கலை என்பது வலது நாசியிலும்,
இடங்கலை என்பது இடது நாசியிலும்,
சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு
நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும்,
காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன்
என்பது வலது கண்ணிலும், அத்தி என்பது
வலது காதிலும், அலம்புடை என்பது இடது
காதிலும், சங்கினி என்பது பிறப்பு
உறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும்
ஓடுகிறதாம்.
இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த
எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது
உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு
மையங்களில் இணைந்து பிரிந்து
செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார
மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார
மையங்கள்தான் நமது உடலை இயக்கிக்
கொண்டிருக்கின்றன. இவை
மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான
துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக
அமைந்திருக்கின்றன.
இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு
விளக்குகிறார்.
உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
கொச்சிநரை சொல்லவில்லை
வெளுத்தமார்க்கம்
குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.
- காகபுசுண்டர் -
1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம்
3.மணிபூரகம் 4.அநாகதம் 5.விசுத்தம்
6.ஆக்ஞேயம் 7.துரியம் என்பதே இந்த ஆதார
மையங்கள். இவை மனித உடலில் முறையே
1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு
4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு
7.உச்சந்தலை என ஆறு இடங்களில்
அமைந்திருக்கிறது.
இதுவரை நாடிகள் மற்றும் அவை
குவிந்திருக்கும் ஆதார மையங்கள் பற்றிய
அடிப்படை தெளிவுகளைப் பார்த்தோம். நமது
குண்டலினியானது இந்த ஆதார மையங்களின்
ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால்
நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி
இந்த பதிவினை இடைச் செருகலாய்
பகிர்ந்தேன்.
குண்டலினியும்... சாதகனும்!
---------------------------------------------
குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோ
இல்லை. அது ஒரு வகையான உள்நிலை
உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து
கொள்ள முயற்சிப்பதில்தான் இதன்
செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல்
சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது
உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம்.
உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற
வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.
குண்டலினியை எழுப்பிட பல்வேறு
உத்திகளை நமது முன்னோர்கள்
சொல்லியிருக்கின்றனர்.
அது பற்றி பின்னர்
பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற்
கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர்
பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன்
முதலில் மெய்யான குருவினை கண்டறிய
வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை
குறைத்தவனாக இருப்பது மிகவும்
அவசியமாம். தீவிர
வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க
வேண்டும். சுத்தமான மனமுள்ளவனும்,
மனத்தின் ஆவேசமான ஆசைகளைத்
துறந்தவனை மெய்யான குரு தானாகவே
அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே
முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார்.
இத்தகைய குருவின் வழிகாட்டுதலில்
பயிலும் சாதகனே குண்டலியை
எழுப்புவதால் உண்டாகும் முழுப்
பலனையும் அடைவான் என்கின்றனர்.
நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம்,
பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால்
மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன்
இடறி விழுந்து தன்னையே கெடுத்துக்
கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற
அவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே,
சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள்
(குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும்
காரணமாய் அமையும் என்கின்றனர்.
யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை.
ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க
வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு
இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க
ஆசிரியன் அவசியம். கடைசியாக
நிதானமானதும் குண்டலினி
எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில்
பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை)
உண்டாகும். ஆதலால் சாதகன்
ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த
ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி
விடுவான்.
குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த
சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க
வேண்டியது மிக அவசியம். குண்டலினி
பற்றிய விபரங்களோ விளக்கங்களோ
முழுமையாக தெரியாதவர்கள் இதில்
வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய
அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.
குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!
----------------------------------------------------------------------
மூலாதாரத்தில் புதைந்திருக்கும்
குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள்
கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில்
பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி,
ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால்
குண்டலினியை எழுப்ப முடியுமாம்.
இராஜயோகிகள் சலனமற்ற
தியானத்தினாலும், மனப்
பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.
சாமான்யர்கள் பக்தி அதாவது
முழுமையான சரணாகதியின் மூலம்
எழுப்புகின்றனர்.
ஞானிகளோ பிரித்து அறியும் மன
உறுதியினால் எழுப்புகின்றனர். இதை
விவேக வைராக்கியம் என்கின்றனர்.
தாந்திரிகர்கள் மந்திர சக்தியால்
குண்டலினியை எழுப்புகின்றனர்.
இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு
முறையும் இருக்கிறது. அதாவது குருவினை
பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப்
படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால்
சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய
தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும்
குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை
எல்லோருக்கும் அருளுவதுமில்லை.
ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை
எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது.
எனினும் நமது உடல் மற்றும் மனப்
பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு
செய்ய குருவினால் மட்டுமே முடியும்.
அவரே நமக்கு சரியான வழி எது என்பதை
உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால்
குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம்
இல்லாத எளிதான காரியம்தான்.
அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?
எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த
ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு
செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு
நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம்
வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான
செயல் இல்லை. மிகுந்த பொறுமை,
விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி
உள்ளவர்களுக்கு மட்டுமே இது
சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா
சக்திகளும் சித்திக்கும்.
எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு
ஆதார மையத்தையும் அடையும் போது
அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல
மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை
வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த
சக்தி மையம், தலை அல்லது முகம்
மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம்
மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த
அதார மையங்களை சக்கரம் என்று
அழைப்போம்.
எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு
சக்கரத்தையும் கடந்து செல்லும் போது
ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி
வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும்
சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.
குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!
---------------------------------------------------
நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை
விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை
நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான
யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை
ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள்.
ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப்
பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து
பழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாக
விளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசை
திரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகே
அடிப்படைகளை மட்டும் தொட்டுச்
செல்வோம்.
தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி
யோகத்தின் முதல் நிலை. இதை நாம்
பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம்.
கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை
பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால்
அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்
கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக
பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும்
தேவையானவைகளை சேகரித்து வைப்பது,
அதனை பாதுகாப்பது போன்றவைகளையே
தன்னை உணர்தல் என நினைத்துக்
கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல்
அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது
அறிதல்கள்.
நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும்
மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர்
கவனித்திருப்போம். உண்மையில் தன்னை
அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும்
மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான்
துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது,
அதுவாகவே வெளியே போகிறது என
தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம்
அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில்
நமது மகத்துவமே இந்த மூச்சில்தான்
அடங்கி இருக்கிறது.
சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான
தாளகதியில் நமக்குள் நடந்து
கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால்
மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண
நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல்
அல்லது மனம் வருந்த ஒரு செயலை
செய்யும் போது விடும் சுவாசத்திற்கும்
வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த
தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல்
நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க
கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர
முடியும்.
சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச
முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை
உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம்,
முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக
தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள்
நமது சுவாசம் எத்தகையது என்பதை
உணர்ந்து அவற்றை முழுமையான
சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும்.
இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள்
உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன்
பொருட்டே இதனை விளக்கிக்
கொண்டிருக்கிறேன்.
அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோ
மந்திரமோ இல்லை ஒரு வகையான
பயிற்சிதான்... முழுமையான சுவாசத்தை
அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க
அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை
கவனிக்க மனம் அதில் ஒடுங்கும்.
கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும்.
சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க
உண்டாகும் மாற்றங்களே குண்டலினி
பயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகி
விட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை,
இது சிரமமான வேலையும் இல்லை.
ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும்
உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.
குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும்
சாதகன் முதலில் தனிமையான இடத்தை
தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக
இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய
வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை,
வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய
பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி
உள்ள இடங்களும் சிறப்பானதே.
அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை
செய்திட எல்லா வகையான ஆசனங்களை
பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம்
இல்லை. தளர்வாகவும், வசதியாகவும்
அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை
தெரிந்து பயன்படுத்துவது அவசியம்.
சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான
பத்மாசனம் போதுமானது. உட்காருவது
கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில்
அமர்ந்து செய்யலாம்.
குண்டலினியும் முன் தயாரிப்பும்!
-----------------------------------------------------
குண்டலினி யோகத்தை துவங்குவதற்கு
தேவையான முன் தயாரிப்புகளையே
இத்தனை நாளாக பார்த்து
வந்திருக்கிறோம்.அந்த வரிசையில்
தனிமையான,அமைதியான சூழலில்
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
இந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பது
வரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.
பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத்
தண்டானது நிமிர்ந்து இருப்பதால்
சுவாசமானது மூலாதாரத்தில் இருந்து
துரியம் வரை தடையின்றி செல்லும்
என்கின்றனர்.மேலும் பத்மாசனத்தில் அமரும்
போது நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்திருக்க
முடியும்.மேலும் இப்படி அமரும் போது
விரல்களில் சின் முத்திரை அல்லது ஞான
முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஆசனம் தயாராகிவிட்டது. அடுத்த
நிலை சுவாசத்தை கவனிக்க
ஆரம்பிப்பதுதான், சிலர் சொல்வது போல
தினமும் இத்தனை நிமிடங்கள்
அமர்ந்திருந்தால் போதுமானது என்பதில்
எனக்கு உடன்பாடில்லை, சித்தர்களும்
அத்தகைய நேரக் கட்டுப்பாட்டினை
வரையறுக்க வில்லை. நம்மால் எத்தனை
நேரம் கவனம் குவித்து சுவாசத்தை கவனிக்க
முடியுமோ அத்தனை நேரம் செய்வது
சிறப்பு.
ஆரம்ப நாட்களில் சுத்தமாய் உங்களால்
சுவாசத்தை கவனிக்கவே முடியாது. அப்படி
யாராவது கவனிக்க ஆரம்பித்து விட்டேன் என
யாரும் சொன்னால் அதை நம்பவும்
கூடாது.மனம் நிறையவே அலைபாயும், அது
எங்கெல்லாம் போகிறது என்பதை கவனிக்க
ஆரம்பியுங்கள், மனம் தானாய் உங்களை
நோக்கி மீண்டு வரும். அப்படி வரும் போது
சுவாசத்தை கவனிக்க சொல்லுங்கள். கவனம்
குவியும். வலிந்து செய்வதை காட்டிலும்
இது மிக எளிய உத்தி!
வெறுமனே சுவாசத்தை மட்டும் கவனித்தால்
போதுமானது, எதுவும் அற்புதம் நிகழும்
என்றெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது.
உடலை, மனதை, சுவாசத்தை தளர்வாக்கவே
இந்த பயிற்சி. நாட்கள் செல்லச் செல்ல சில
மாற்றங்களை உணரத் துவங்குவீர்கள். இதனை
வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
என்னுடைய அனுபவத்தைச் சொல்ல
வேண்டுமெனில் ஒரு உள்ளார்ந்த அமைதி
உண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாக
இருக்கும்.
இந்த நிலையில்தான் குண்டலினியை பற்றி
யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இனி நமது செயல்திட்டம் இரண்டு
கட்டங்களை உள்ளடக்கியது. முதலில்
குண்டலினியை விழித்தெழச் செய்வது,
அடுத்து அவற்றை அடுத்த அடுத்த ஆதார
மையங்களான சக்கரங்களை நோக்கி
நகர்த்துவது அல்லது உயர்த்துவது.
இது மூலாதாரம் துவங்கி துரியம் வரை ஆறு
நிலைகளில் நடைபெறும். ஒவ்வொரு
சக்கரமும் மலரும் போது அதற்கான
பலன்களை நாம் உணரத் துவங்குவோம்.
இந்தப் பயணத்தில் உடல் ரீதியான சில
பிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ள
வேண்டியிருக்கும்.


காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.

Thursday, June 11, 2015

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது
16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும்  கிடைக்காது.
19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
20. கடவுளை நம்புங்கள்.

Wednesday, June 10, 2015

மாற்றி சிந்தித்து வெற்றியை அடையலாம் !

உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின்
மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி
என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் “ஆம்” அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.
ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை
அனைத்திற்கும் காரணம்.
எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்தநல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும் நல்லவையாக இருக்கும்.
கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும் கெட்டவையாக  இருக்கும்.
மனது என்பது ஒளி  நாடாவை போன்றது. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து திருப்பி சொல்லும்.
ஆழ்மனது  என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது. உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும்.
ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.
அதனால் தோல்விகரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள் ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும்.
இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது
என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும்.
அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும்.
இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை
செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும் உங்களுடைய நினைப்பில் தான் உள்ளது. அந்த தடையை தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த தடையை தகர்த்து எறிந்து  விடுவீர்கள்.
விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள். எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது. சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள் நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை உண்டாக்க முடியுமா?
எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து
எறிந்து விடலாம்.
ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால் அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள்
சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.
தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு இருங்கள். வெற்றி நிச்சயம்.
மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக மாற்றி நினைப்பதற்கு  ஒரு கருவி தேவை. அந்த கருவிதான் தியானம்.
தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை மாற்றி                                                     நினைக்க வைத்து உங்கள் வெற்றியை அடையலாம்.

Tuesday, April 28, 2015

வெப்சைட் பெயர் வந்தது எப்படி?

வெப்சைட் பெயர் வந்தது எப்படி? 
www.v4all.org

ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்! - விகடன்
இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?
வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?
லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும் பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.
லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.
வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.
வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.
வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.
மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!

Tuesday, April 14, 2015

சுட்டெரிக்கும் வெயில்! தப்புவது எப்படி?


www.v4all.org 


வெயிலில் செல்வதால் உடம்பு சூடு, வயிற்று வலி, தலைவலி என உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது. முகம், கை, கால் என ஒரு கருப்பு திரையே நம்மேல் ஒட்டிக் கொள்ளும்.
கருத்து போகும் முகத்தை நார்மலாக்க, முகத்தை ‘பிளிச்’ செய்வது ஒன்றே தீர்வு ஆகாது. ‘பிளிச்’ ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.


**முகம் கறுப்பு மறைய 7 எளிய வழிகள்**


இவை எளிமையானது மட்டுமல்ல செலவும் குறைச்சல், பாதுகாப்பானதும் கூட!

1. எலுமிச்சம் பழச்சாறு, பன்னீர், வெள்ளரிசாறு போன்றவற்றை எடுத்து கலக்கி முகத்தில் கழுத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

2. எலுமிச்சைசாறு + தேன் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை அலம்புங்கள்.

3. பச்சை பால், மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை முகத்தில் பூசி காய விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.

4. மோர் மற்றும் ஓட்ஸை கலந்து முகத்தில் மெதுவாக தேய்க்க, கரகரப்பான ஓட்ஸ், உலர்ந்த தோலை எடுக்க, மோர் சருமத்தை குளிர்ச்சியாக்கும்.

5. பச்சை பயிறு மாவு+எலுமிச்சை சாறு, மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி காய்ந்த பின், குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

6. வெறும் எலுமிச்சை சாற்றை முகம், கழுத்து, கை முட்டி, கால், முழங்கை போன்ற இடங்களில் தடவி 15 நிமிடம் காய விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். கறுப்பு மறையும். எலுமிச்சை சாறு ‘பிளிச்’ போல வேலை செய்யும்.

7. இளநீரை முகத்தில் பூசி வர கறுப்பு குறைவதுடன், சருமம் பளபளப்பாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடும்.

8. மஞ்சள் + எலுமிச்சை சாற்றை கலந்து பூசி, காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர கறுப்பு மறையும்.

9. பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில மசாஜ் செய்து வர கறுப்பு மறையும்.


வெயிலை எதிர்கொள்ளுங்க!
கோடையை கொண்டாடுங்க!

Effects of Negative thoughts

Effects of Negative thoughts 
----------------------------------------------

The moment negative thought enters in your mind,

1. Your body releases acid. 
2. Your aura decreases.
3. Your resistance power decreases.
4. Your system's functions are affected.
5. Your heart beat increases.
6. Your blood pressure increases.
7. Unwanted hormones are released.

With that negative thought you may or may not harm others...but you definitely harm yourself!!!

Think positive remain healthy💗

urs
www.v4all.org 

Wednesday, April 1, 2015

வள்ளலார் சொன்ன மகா ரகசியம்


வள்ளலார் சொன்ன மகா ரகசியம் - www.v4all.org 


வாழ்விக்க வந்த வள்ளல்
சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ ராமலிங்க அடிகள். எல்லாவுயிரையும் தம் உயிராய்க் கருதி வாழ்ந்த மகான்.
“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
என்று உலக உயிர்களுக்காக இரங்கிய உத்தமர்.
அருட்பெருஞ்சோதி வள்ளலார்
மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
என்றெல்லாம் இறைவன் தனக்கருள் புரிந்த விதத்தை வெளிப்படுத்தியவர்.
வள்ளலார் சொன்ன ரகசியம்

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி
-என்ற பாடல் அவர் பெற்ற மறை ஞான அனுபவத்தின் விளங்குகிறது. இப்பாடலை பலரும் யோகநிலை விளக்கமாகவே கருதுவர். ஆனால் வள்ளலார் குறிப்பிடும் உண்மைப் பொருள் வெளிப்படையானதல்ல. அது மிக ரகசியமானது. யோக, ஞான நெறி நின்றார்க்கு மட்டுமே பொருள் விளங்கக் கூடியது. வள்ளலார் குறிப்பிட்டிருக்கும் ‘வானம்’ என்பது இங்கே பரவெளியாகிய சபையைக் குறிக்கிறது. ஆக்ஞா சக்கரமாகிய புருவமத்தியில் நிகழும் நெற்றிக்கண் திறப்பையே மயில் ஆடுவதாய் வள்ளற் பெருமான் குறிப்பிடுகிறார். மயில் தோகையை விரித்தாடும்போது அந்தத் தோகையில் காணப்படும் கண்களையும், அதனால் ஏற்படும் பரவச நிலையையுமே அவர் ”மயிலாடக் கண்டேன்”  என்கிறார்.
அப்படியானால் குயில்?
மயில் தோகையை விரித்தாடும்போது கவனம் வேறு எங்கு செல்லும்? அதன் அழகிலேயே மனம் நிலைபெற்றிருக்கும். அதுபோல ஆக்ஞா சக்கரமானது திறந்த பின் ஏற்படும் பரவச நிலையிலேயே எப்போதும் மனம் திளைத்திருக்கத் தலைப்படும். அப்போது அங்கே ’நாதம்’ தோன்றும். அந்த நாதமாகிய ஒலியையே, இனிமையான அந்த சப்தத்தையே ‘குயில்’ என்று உருவகிக்கிறார் வள்ளலார். குயில் கூவுவது எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அவ்வளவு இனிமையாகவும், பரவசத்தைத் தருவதாகவும் அந்த உணர்வு இருப்பதாக அவர் குறிப்பிடுவதே ”மயில் குயில் ஆச்சுதடி”.
குயிலின் குரலை நாம் கேட்க முடியும். ஆனால் அந்தக் குயிலின் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை உணர்வது சற்று கடினமாக இருக்கும். அதுபோல நாத ஒலியை நாம் கேட்டாலும், அது எங்கிருந்து வருகிறது என்பதை அவ்வளவு எளிதில் உணர இயலாது. மேலும் குயிலின் குரலைக் கேட்டுத்தான் நாம் பரவசமாகிறோமே தவிர, குயிலின் உருவத்தைக் கண்டு அல்ல. குயிலின் குரல்தான் இங்கே முக்கியமாகிறதே தவிர, குயில் அல்ல. ஆனால் குயில் இல்லாமல் அந்தக் குரல் இல்லை. இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் ’நாதத்தை’ குயிலுக்கு உருவகித்திருக்கிறார் வள்ளலார்.
வள்ளலார் பலவற்றை மிக இரகசியமாகவே, மறை ஞான சூட்சுமமாகவே கூறியிருக்கிறார். அவர் சித்தர். மாபெரும் யோகியும் கூட. ஆதலால் அவர் கூறிய சிலவற்றிற்கு நாம் நேரடியாகப் பொருள் கொள்ளுவது என்பது இயலாது.
அதே சமயம் புருவமத்தியாக ஆக்ஞா சக்கரத்தையே அவர் மூலாதாரமாகக் கருதினார் என்று யாரேனும் கருதினால் அது மிகப் பெரும் பிழையாகும். அதற்கான ஆதாரம் அருட்பாவில் எங்கேயும் இல்லை. வள்ளலாரின் எண்ணமே வேறு.
அவரது உரைநடையில் ’பிண்டானுபவ இலக்கணம்’ என்னும் பகுதியையும், ஞானசித்தியும் ஒளிநிலையும் என்னும் பகுதியையும் ஆழப்படித்தால் அவர் என்ன கூற வருகிறார் என்பது விளங்கும்.
”நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியார் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்றுக் கொள்வது நலம்” என்கிறார் வள்ளலார் தனது உரைநடை நூலில். அதாவது மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி படிப்படியாக ஆக்ஞா சக்கரம் வரை சென்று இறுதியில் நெற்றிக்கண் திறப்புப் பயிற்சியை மேற்கொள்வதை விட, ஆரம்பத்திலேயே நேரடியாக நெற்றிக் கண்ணைத் திறப்பது நல்லது. அதற்கான திறன் பெற்ற ஆசாரியார்களை நாடி அதைச் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
ஏன் அப்படிச் சொல்கிறார்?
மூலாதாரக் குண்டலினியை தானாகவும் முயன்று மேலே எழுப்பலாம். குருநாதர்களின் உதவியாலும் மேலே எழும்பச் செய்யலாம். இப்படி படிபடிப்படியாக அவை மேலே எழும்பப் பல காலம் பிடிக்கும். பல நிலைகளைக் கடந்து வர வேண்டும். மேலும் அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடும். அதனால்தான் அதை நேரடியாக எழுப்புவது சிறந்தது என்கிறார் வள்ளலார். அதற்கு சமரச சன்மார்க்க சங்கத்தை நாடலாம் என்பதையே ”ஆசாரியார் அனுக்கிரகம்” என்று வள்ளலார் கூறுகிறார்.
யோக சாதனையில் மிக உயரிய உச்சத்தை அடைந்தவர் வள்ளற் பெருமான். அதைக் கொண்டுதான் “சாகாக் கலை” என்ற உயரிய கலையை அவர் உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். மூலாதாரத்திலிருந்து எழும்பு குண்டலினியை ஒழுங்குபடுத்தினால், அதை ஆக்ஞாவையும் கடந்து துரியாதீத நிலைக்குக் கொண்டு சென்றால் அங்கே இறை தரிசனம் கிட்டும். கடவுளைக் காணலாம். உணரலாம் என்பதே அவர்தம் கருத்து.
குண்டலினி ஒரு பாம்பு போலச் சுருண்டு கிடக்கிறது மூலாதாரத்தில். அதைத் தான் ஔவையும் சுட்டுகிறார். ”மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே…” இது விநாயகர் அகவலில் வரும் பாடல் வரிகள். இதில் இடம்பெற்றுள்ள ’கால்’ என்ற பதத்திற்கு பலரும் கால், பாதம், விரல் என்றெல்லாம் பொருள் கூறியிருக்கின்றனர். ஆனால் ‘கால்’ என்பதன் பொருள் இங்கே காலைக் குறிக்கவில்லை. அதன் உண்மையான பொருள் ‘கீழ்’ என்பதாகும். ’மூலாதரத்து அக்னியைக் (குண்டலினி) கீழே இருந்து எழுப்பும் கருத்தை அறிவித்தாய்’ என்பதுதான் ஔவை கூறும் உண்மையான பொருள்.
வள்ளற் பெருமானும் தனது உரைநடையில் ஆதி அநாதி என்ற சொற்றொடரைக் குறிக்குமிடத்து ஆதி, கீழ் என்பது காலைக் குறிக்கும் என்றும், அநாதி, மேல் என்பது தலையைக் குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
வள்ளலாரைப் போன்ற, தன்னலம் கருதாத, பொன், பொருள், புகழுக்கு ஆசைப்படாத மகா யோகிகளாயே இதுபோன்ற உயர்நிலைகள் சாத்தியம். இந்தக் கால, மூச்சுப் பயிற்சியை மட்டுமே சொல்லித் தந்து, அதை ஒரு பெரிய உன்னத சாதனையாக, சமாதி நிலையாக உருவகிக்கும் ஹை டெக் சாமியார்களால் அது முடியாது. அது நிரந்தரம். இது தற்காலிகம். வேறு பாட்டைப் பிரித்து உணர்ந்து கொள்வது சிறந்தது.
இன்று வையகத்தை வாழ்விக்க வந்த வள்ளலாரின் அவதாரப் பெருநாள். இந்நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ச்சோதி

Sunday, January 25, 2015

கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே.......
.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........
உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.
நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் அதற்க்கான செயல்களை மட்டும் செய்.
எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.
.அது மட்டுமே நிரந்தரம்.
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது.