தொழில் முனைவோர் - தேவையான குணநலன்கள்
தொழில் முனைவோர் கீழ்க்கண்ட குணநலன்களைப் பெற்றிருத்தல்
அவசியம். தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருகிறோம என்ற எண்ணம் மனதின் அடிதளத்தில் இருக்க வேண்டும்.
சிறு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது தங்களுக்கன்று பொருள் ஈட்டுவதுடன்வேறு பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ முடியும். இது தவிர தொழில்மூலம் இயற்கையின் வளங்களை நுகர்வோர்க்கு வாழ்க்கை வசதிகளாக மாற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர்.
சிறு தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றவர்களை விடச் சிறப்பான சில குணநன்களைப் பெற்றிருத்தல் அவசியம்.
1. தொழில் தாகம்
தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தனியாத தாகம் வேண்டும்.
2. சிரித்த முகம்
நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்(று) இருள்.
பகலும்பாற் பட்டன்(று) இருள்.
(திருக்குறள் 999)
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாகும்.
எல்லாத் தொழிலிலும் பொதுமக்களுக்குடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில் முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும்,குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பிப் பழக வேண்டும்.
3. மனதில் உறுதி இருக்க வேண்டும்
முன் வைத்த கால் பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின்தொடக்க காலத்தில் பல தனைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம்தளராத உறுதி கொள்ள வேண்டும்.
4. முயன்றால் முடியும்
தொடங்கும் தொழில் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினோர்கெடுவதில்லை. மனமுண்டானால் வழி உண்டாகும். போன்ற பழமொழிகளைவழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
5 எதையும் தாங்கும் இதயம்
தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கை. தோல்வியைக்கண்டு துவளாத மனம்வேண்டும். எதையும் தாங்கும் இதயம் தொழில் துறையின் வெற்றிக்குத் தேவையானஒன்று.
6. தலைமைப் பண்பு
எந்தத் தொழில் அமைப்பானாலும் அதன் தலைமை நிர்வாக, முக்கியமானவர். நமக்கு பொருள் விற்பவர்கள் ஆகிய பலர் கூட்டாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்கின்ற அறிவும் திறனும் வேண்டும். புகை வண்டியின் வேகம் அதன் இன்ஜினின் வேகத்தைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
7. காரியத்தில் கண்
தொழில் தொடங்கி நடத்தும்போது சிறு தொழிலாகப் பதிவு செய்தல், பஞ்சாயத்து,நகராட்சி போன்றவற்றின் அனுமதி பெறுதல், வங்கிக்கடன் பெறுதல், மின் இணைப்புப் பெறுதல், விற்பனை வரி பதிவு செய்தல், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதிபெறுதல் போன்ற பல அரசு அனுமதிகளைப் பெற, வேண்டியவற்றை தாமதமின்றிச் செய்ய வேண்டும். இம்முயற்சியில் பல நேரங்களில் சத்திய சோதனை வரும்.வரும்போது நேர்மைக்காகப் போராட வேண்டும் என்பதைக்கொஞ்சம் ஒதுக்கி வத்து விட்டுக்காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.
8. பொறுப்பேற்றல்
தொழில் நடத்தும்போது பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். தரமானபொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்தல், ஊழியருக்கு நியாயமானஊதியம் வழங்குதல், அரசு விதிகளை நிறைவேற்றுதல், வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்துதல், வரி செலுத்துதல் போன்ற பல பொறுப்புகளை விரும்பி நிறைவேற்றவேண்டும்.
9. உழைப்பு
தொழில் முனவோர் காலநேரம் பாராது கடினமாக உழைக்க வேண்டும். காரியம் கைகூடும் வரை மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது உழைத்திடவேண்டும்.
10. முடிவெடுத்தல்
தொழில் உலகம் கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும், கணந்தோறும்பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. சிறந்த முடிவுகளை தேவையனவர்களுடன் மற்றும் அது தொடர்பான அனுபவம் மிக்கவர்களுடன் அல்லது நாமே உடனுக்குடன் எடுக்க வேண்டும். தாமதம் செய்யும்போது மற்றவர்கள் நம்மை முந்திவிட வாய்ப்புண்டு.
11. விழிப்புணர்வு
தங்கள் தொழிலுக்கு ஏற்படும் விளைவுகளையும், அதைச் சமாளிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
12. தொலைநோக்கு
தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலின் எதிர்கால வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொலைநோக்குப் பார்வை அவசியம். அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.
13. நன்மதிப்பு
தொழிலில் வெற்றிபெற நன்மதிப்பு (Goodwill) பெரிதும் உதவுகிறது. நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்தல், கல்வி மருத்துவ நிறுவனங்கள் நடத்துதல்,ஆக்கப்பணிகளுக்குத் துணை நிற்றல், எளிமையாக, நேர்மையாக வாழ்தல்,போன்றவற்றால் இந்த நன்மதிப்பைப்பெற முடியும்.
14. திசை திரும்பாமை
எடுத்த தொழிலில் கவனமாக இருக்கவேண்டும். வெற்றி பெறும் வரை வேறுதிசையில், தவறான பாதைகளில் கவனம் செலுத்தக் கூடாது. வெற்றியினால் கர்வமும்,திசை திருப்பமும் புகாவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு தொழிலில் கவனம் கொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும்
No comments:
Post a Comment