இந்த உலகில் எல்லோரும் விற்பனையாளர்களே.
எல்லா மனிதர்களும் அறிவையோ – திறமையையோ – பொருளையோ – சேவையையோ விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தத்
தொழில் செய்வோரும் தன் தொழில்கள் வெற்றி
பெற – பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள – விற்பனைத்திறமையைப் பெருக்கிக்கொள்ள
அவசியமானது. அதுவும் இன்று போட்டிகள்
நிறைந்த இவ்வுலகில் ஜெயிப்பதற்குப் பெரிய போராட்டம் நிகழ்த்த
வேண்டியுள்ளது.
தரமான,
நல்லபொருளாக இருந்தாலும் – அறிவு, திறமை எவ்வளவு
இருந்தாலும் – விறபனைத்திறமை இல்லாத பட்சத்தில் வளர்ச்சி
காலதாமதமாகிறது. உண்மைதான் வெல்லும், தகுதியுள்ளது வாழும். மற்றவை விழும்
என்பது வாழ்வின் நியதிதான். ஆனால், நம் பொருளின்
தரத்தை எப்படி உணரவைப்பது – மக்களிடம்
எடுத்துச் செல்வது – நமது அறிவை திறமையை
உலகுக்கு வெளிப்படுத்துவது – என்பது ஓர் கலை.
ஒரு விஞ்ஞானம்.
இந்த விற்பனைக் கலையை விற்பனைத் திறமையை
மேலும் மேலும் வளர்த்துக் கொண்டால்
வெற்றியைப் பெற்றுக்கொண்டேயிருக்கலாம். வெற்றிபெற்றால் போதாது. தொடர் வெற்றி
பெற வேண்டும் அதைப் பெற முடியும்!
திரும்பத்திரும்ப
சொல்லப்படும் இவ்வரிகள் உங்கள் உள்மனதில் பதிந்து
அதை அடைவீர்கள்!
மனிதர்களுக்கு
நாம் பொருளையோ திறமையையோ, அறிவையோ – சேவையையோ கொடுக்கிறோம். விற்பனை செய்கிறோம். அதன்
விளைவாக அவர்கள் நமக்குப் பணமோ
பொருளோ கொடுக்கிறார்கள்.
தொழில்
ரீதியாக நம்மோடு சம்பந்தப்பட்ட அனைவரும்
வாடிக்கையாளர்களே
(Customers).
வாடிக்கையாளர்களைத்
திருப்தி செய்கிற அளவு, சந்தோஷப்படுத்துகிற
அளவுக்கு நம்முடைய தொழில் வளர்ச்சி இருக்கிறது.
வாழ்வின் மகிழ்ச்சி அந்த அளவைப் பொறுத்து
அதிகரிக்கும்.
இந்த வாழ்வின் நியதி – பிரபஞ்ச இயக்கத்துவம்
– சொல்வது என்னவென்றால்
“எதைக்
கொடுக்கிறோமோ அதையே பெறுகிறோம்”
”Give: you will be given – BIble”
எல்லாம்
புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.
“All are cyclic process”
அந்த வகையில் நாம் சந்தோசமாக
இருக்க வேண்டும் என்றால், நம் சம்பந்தப்பட்ட அனைவரையும்
சந்தோஷப்படுத்தினால்தான், அவர்கள் நம்மை சந்தோசப்படுத்துவார்கள்.
நம் வாடிக்கையாளர் வளர்ச்சிக்கு நாம் துணைபுரிந்தால் அவர்கள்
நம் வளர்ச்சிக்குத் துணைபுரிவர்.
ஆகவே நம்முடைய நோக்கம் மிகமிகத் தரமான
பொருட்களை எந்தவித குறையுமின்றிக் கொடுத்து
முழு அன்பும், திறமையும், அறிவும் கலந்த சேவையை
முழுமையாகக் கொடுத்து அவர்களைத் திருப்தி/மகிழ்ச்சி அடையச் செய்தல் ஆகும்.
விற்பனைக்குப்
பின்னர் மீண்டும் சேவையைத் தொடர்ந்து அவர்களை மேலும் மேலும்
சந்தோசப்படுத்துவோம்
(Customer Delight)
விற்பனைக்குப்
பின்னர் மீண்டும் சேவையைத் தொடர்ந்து அவர்களை மேலும் மேலும்
சந்தோசப்படுத்துவோம் (
Customer Delight).
No comments:
Post a Comment