Sunday, July 13, 2014

பென்சில் தத்துவம்

கைபிடித்தபோது பென்சில் எமக்கு காட்டியவை!

எம் கரங்கள் அகரம் தேய்த்து அடுத்ததாக பேனாபிடிக்கு முன்னர் எம் கைபிடித்தது பென்சில் தானே! அந்தப்பென்சில் எமக்;கு காட்டித்தந்த ஐந்து முக்கியமான விடயங்களை நாம் கற்றுக்கொண்டோமா?

பென்சில்....... 
பல விடயங்களை எழுதுவதற்கும் வரைவதற்கும் முழுமையாக அது தன்னை நமது கைகளில் ஒப்படைகின்றது.

அவ்வப்போது அதை நாம் சீவுகின்றோம். நாம் சீவும்போதெல்லாம் அது தன்னை கூர்மையாக்குகின்றது.

தவறுகள் செய்தாலும் அவற்றை அழிப்பதற்கும், திருத்தி எழுதவும் இடம் கொடுகின்றது.

வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் சீராக இருகின்றது.

சின்னம்சிறு பென்சிலாகும் அளவுக்கு சீவப்பட்டாலும் எழுதிக்கொண்டிருக்கின்றது. கடைசிவரை தன் சுவட்டினை காகிதத்தில் பதிக்கின்றது.

Nதுபோல..............

பல அரிய நகழ்வுகளை நிகழ்த்த நான் ஒரு கருவிதான் என்கின்ற அடக்க உணர்வோடு உங்களை கடவுளின் கைகளில் ஒப்படைத்துப்பாருங்கள்.

சோதனை வரும்போதெல்லாம் மேலும் மேலும் கூர்மையாகிக்கொள்ளுங்கள்.

தவறுகள் செய்திருப்பதாக தெரிந்தால் அதை ஏற்று உடனடியாக அதை திருத்திக்கொள்ளு;கள்.

வெளிச்சூழலால் புகழ்வந்தாலும், பழிதான் வந்தாலும் உள்ளே எப்போதும் உறுதியாகவே இருங்கள்.

கடைசிவரை உழைத்துக் கொண்டிருக்கவேண்டும் காலச்சுவட்டில் உங்களது பெயரை பதிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

இதுவே நீங்கள் பிடித்த பென்சில் உங்களைப்பிடித்து சொல்லிவிட்டுப்போன தத்துவம்

No comments:

Post a Comment