உங்கள் வீச்சின் தூரம்
அந்தக் காரியாலயத்தில் 15 ஆபீசர்கள் இருந்தனர். கம்பெனியின் வெற்றிக்கு அவர்கள்பாடுபடுகிறவர்கள்தான். ஆனாலும் அவர்களின் திறமையானவர்கள் யார் என்பதைக்கண்டறிய இப்படி ஒருசோதனை வைக்கப்பட்டது.
அடுத்த அறையில் ஒரு ஸ்டான்ட். மொட்டைக் குச்சி ஒன்று அதில் செருகப்பட்டிருந்தது. அந்தக் குச்சியை நோக்கித் தூரத்திலிருந்து ஒரு வளையத்தை எறிய வேண்டும். வளையத்தின் மையத்தில் குச்சி இருக்கும்படி வீச வேண்டும்.
எவ்வளவு தூரத்திலிருந்து வேண்டுமானாலும் வீசலாம். எங்கிருந்து வீசினால் குச்சியைச்சுற்றிக் கரெக்டாக வளையம் விழும் என்பதை, வீசுபவர் தனது இஷ்டத்துக்குநிர்ணயித்துக்கொள்ளலாம்.
சிலர் சாலஞ்சாகப் பத்தடி தூரத்தில் நின்று வீசிப் பார்த்தனர். தோற்றுப் போனார்கள். சிலர் ஆறடி தூரத்திலிருந்து வீசினர். சிலரோ வெகு குறைவான தூரமாக இரண்டடி மூன்றடி தூரத்திலிருந்து வீசினர். நமது முயற்சிகளும் இப்படித்தான். அடையவேண்டிய லட்சியத்தை அல்லது இலக்கை நிர்ணயித்துக் கொண்டவுடன் நமது திறமைக்கேற்ற அணுகுமுறையை கையாள்வது வெற்றியைத் தரும்.
ஒன்றை நினைவு கொள்ளுங்கள்
எல்லாமே தொலைந்தது என்று நிலை வரும்போது ஒன்றே ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 'நாளை' என்ற ஒன்று இருக்கிறது.
முதல் பொறுமை
எல்லாவற்றிலும், எல்லாரிடத்திலும் பொறுமை காட்ட வேண்டும். ஆனால் முதல் பொறுமை உங்களிடமே காட்டிக் கொள்ள வேண்டும்.
அதுவும் வேண்டும்
எல்லாரும் தலைவனாக இருந்துவிட முடியாது. சில பேர் தொழிலாளியாகவும் இருக்கத்தான் வேண்டும்.
மாற்றான் வீட்டு...
அயலார் வீட்டுக் குழந்தையானாலும் அதனிடமும் சிறிது கொஞ்சுங்கள்.
வேண்டாம் வெறி
எல்லாவற்றையும் இன்றைக்கே பண்ணி முடிக்க வேண்டும் என்ற வெறி வேண்டாம். சிலதை நாளைக்கு என்று ஒதுக்கிக் கொள்ளலாம்.
டாட்டா பை பை!
குடும்பத்தோடு வெளியூருக்குப் போய் வாருங்கள் - ஓரிரு நாள் என்றாலும் பரவாயில்லை.
அது அது அந்த அந்த....
முதலில் உன்னை organise பண்ணிக்கொள். உங்கள் ஆபீசில் அந்தந்த அயிட்டத்தை அந்தந்த இடத்திலே வைக்கிறதை வழக்கமாக்கிக்கொள்.
எங்கிருந்து விலகல்
Avoid selfish People. சுயநலக்காரர்களையும், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறவர்களிடமிருந்து விலகிக்கொள்.
ஓடிப் பிடிக்க
குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது ஓடிப் பிடித்து விளையாடுங்கள்.
சரியான லூஸ்!
லூஸான காட்டன் கிளாத்ஸ் அணியுங்கள்.
சின்னச் சின்ன
ஆபீஸ் போகிறதுக்கு முன் ஏதாவது சிறிய உடற்பயிற்சி பண்ணி விட்டுச் செல்லுங்கள்.
பங்கீடு
90% உன்னுடைய வேலையை உன் ஊழியர்கள் செய்யலாம். 10% உங்கள் மேற்பார்வை இருந்தால் போதும்.
90% வொர்க் ரொடீன். மிச்சம் 10% தான் உங்கள் ஒரிஜினல் work தேவைப்படும்.
எழுத்து வடிவம்
பரஸ்பர பிஸினஸ் பேச்சு வார்த்தைகள் எழுத்தில் வடிக்கப் பெறவேண்டும்.
எது எதிர்காலம்?
எதிர்காலம் என்கிறது செய்கிற வேலையில் இல்லை. செய்கிற ஆள்கிட்டேதான் இருக்கிறது.
உணர்ச்சி போதுமா?
தொழில் துவக்குவதற்கு உணர்ச்சி இருந்தால் போதும். நடத்துவதற்கு கெட்டிக்காரத்தனம் தேவை.
ஒப்படைப்பது யாரிடம்?
ஒரு தொழிலாளி சின்னக் காரியத்துக்குப் பெரிய கவனத்தைச் செலுத்தினால், அவனிடம் பெரிய பொறுப்புக்களை ஒப்படைக்கலாம்.

No comments:
Post a Comment