Sunday, July 27, 2014

இறந்த ஆத்மா வெற்றி பெற பிரார்த்தனை முறைகள்

இறந்த ஆத்மா வெற்றி பெற இந்து மதம் கூறும் பிரார்த்தனை முறைகள்

       1.    சின்னத்திரையில் படம் பார்ப்பதுபோல் உங்கள் எண்ணத்திரையில் பகவானைப் பார்க்க வேண்டும். அவ்வப்போது இப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டீர்களானால் உங்கள் உள்ளக் கோயில் புனிதமான அன்பாலயமாகி விடும்.

       2.    பகவானை நினைத்தவுடன். வேண்டாத சிந்தனைகள் மனதில் வலம் வரும். அந்த நேரத்தில் மந்திரங்களை ரொம்ப நிதானமாக உச்சரித்து பகவானின் பாதத்தில் பூக்களைப் போட்டு பூஜிக்கப் பழக வேண்டும்.

       3.    காலை நேரத்தில் நடந்து கொண்டே மந்திரம் கூறி பகவானை உள்ளத்தில் படம் பிடித்துப் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.

       4.    அடிக்கடி ஐந்து நிமிடம் மனதை பகவான் பக்கம் திருப்பி அமைதியாக மந்திரம் கூறிப் பார்க்க வேண்டும்.

       5.    இறைத் தொண்டில் கலந்து கொண்டு வந்தால் மக்களின் அறியாமையை நீங்கள் பார்த்து வருந்தி தன்னைத் திருத்த முயற்சிப்பீர்கள்.

       6.    போலியான பொய்ப்பேச்சு, வேண்டாத காரியங்களில் தலையிடுதல், இதையெல்லாம் தவிர்த்து அவ்வப்போது பகவானை நினைத்து, பகவான் காலடியில் வலதுபக்கம் அமர்ந்து பூப்போட்டு மந்திரம் கூறிவரப் பழகுங்கள். தியானம் வெற்றிபெற நேரம் இன்றியமையாதது. தயவுசெய்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

           'தன் கடமையைச் செய்பவர் கடவுளுக்கு
            பிடித்த கருவியாகிறார்.'


            ஆகையால் கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு கடமையைச் செய்வதே கடவுள் வழிபாடு. ஓய்வு நேரங்களில் மந்திரம் கூறி பகவானை நினைத்து வருவதே தியானம். இதனால் இரண்டு வழிகளில் வெற்றி கிட்டும். ஒன்று உலக வாழ்க்கை மற்றொன்று மறுமை வாழ்க்கை.

No comments:

Post a Comment