Sunday, July 13, 2014

முதுகு லியை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்கு சில டிப்ஸ் .....




முதுகு வலியை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்கு சில டிப்ஸ் ..... 





1. நாற்காலியில் அமரும்போது, நன்றாக சாய்ந்து, உங்கள் முதுகுப் பகுதி நாற்காலியோடு ஒட்டி இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது, கால்களை கீழே தரையில் வைக்காமல், ஏதாவது பலகை அல்லது பெட்டியின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

2.கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஏதாவது ஒரு பேடை எடுத்துவைத்து, அதில் கீபேடை வைத்து டைப் செய்யுங்கள். அதேபோல், உங்கள் கண்ணும் கம்ப்யூட்டர் திரையும் இணைகோட்டில் இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள். கழுத்தை நிமிர்த்தியோ, அல்லது குனிந்தோ திரையை பார்க்க வேண்டாம் (பார்க்க: படம் 3).

3.அமர்ந்திருக்கும் சேரில் இருந்தபடி கழுத்தைத் திருப்பி ஏதாவது பொருட்களை எடுப்பது, இடுப்பை மட்டும் திருப்பி டெலிபோன் எடுப்பது போன்ற செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும் மொத்த உடம்பையும் திருப்பி எடுங்கள் (பார்க்க: படம் 2).

4.படுத்துக்கொண்டு படிப்பது, சேரில் உட்கார்ந்து கொண்டே டேபிளில் கவிழ்ந்தபடி படிப்பது.. இவை எல்லாம் அப்போதைக்கு வசதியாகத் தோன்றினாலும் வயதாகும்போது முதுகுவலியில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

5.ஒரே இடத்திலோ... அல்லது ஒரே நாற்காலியிலோ நீண்டநேரம் உட்கார்ந்திருந்தால், முதுகு வலி வரலாம். எனவே, அவ்வப்போது எழுந்து ஒரு ‘வாக்’ போய் வாருங்கள்.

6. அதிக எடை உள்ள பொருட்களை தூக்கும்போது, சரியான முறையில் தூக்காவிட்டால், நிச்சயம் முதுகு வலி ஏற்படும். அவற்றைத் தூக்கும்போது இடுப்பை வளைக்காமல், முழங்கால்களை மட்டும் வளைத்துத் தூக்குங்கள் (பார்க்க: படம் 4). பொருளை மார்புக்குக் கீழே, உடம்புக்கு நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே, கனமான பொருட்களை, தூக்குவதைவிட இழுத்துச் செல்லுவது நல்லது.

7. நிமிர்ந்து நேராக நிற்கும்போது, ஒரு பாதம் முன்னேயும், அந்தப் பாதத்தின் முட்டுப் பகுதி சிறிது வளைந்தும் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் நிற்க வேண்டியிருந்தால், பாதங்களில் ஒன்றைவிட மற்றதை உயரமாக ஒரு பலகையின் மேல் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள் (பார்க்க: படம் 1). நீங்கள் நின்றுகொண்டிருக்கும் நிலையை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.

8.பொதுவாக, நம் எடையை உடல் முழுவதுமே சேர்ந்து சமமாகத் தாங்குகிறது. ஹை ஹீல்ஸ் அணியும்போது விரல் மட்டும்தான் மொத்த பாரத்தையும் சுமக்க வேண்டியதாகிறது. அதனால், முதுகுக்கு அழுத்தம் அதிகரித்து முதுகு வலி ஏற்படுகிறது. ஆகவே, முதுகு வலி வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் ஹை ஹீல்ஸ் செருப்புகளுக்கும் ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்

No comments:

Post a Comment