Thursday, July 17, 2014

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)



கடன் பட்டிருந்தால்
கடனானதற்குப் பிறகு சிலர்இப்படியாகி விட்டதேநான் என்ன பாவம் செய்தேனோ என்று புலம்பிக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் இப்படி செய்திருக்க வேண்டும் இப்படி செய்திருக்கக் கூடாதுஇப்படி செய்ததால் தான் இப்படி ஆனதுஎன்று பழைய சம்பவ ஆராய்ச்சிகளிலேயே மீண்டும் மீண்டும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் கோபம்டென்சனாகி யார் இவ்வாறு நடக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் திட்டிக்கொண்டும்சபித்துக் கொண்டும் இருப்பர். இன்னும் சிலர்கவலைப்பட்டுக் கவலைப்பட்டு கடன் தொல்லையிலிருந்துதப்பிப்பதற்காக வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுவர்.

நண்பர்களேகடந்தவை கடந்தவைதான்அவற்றிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்கஇந்த அனுபவத்தை வைத்துமீண்டும் தொடர்ந்து செயல்பட்டால் கடன்களிலிருந்து மீளமுடியும்செல்வம் குவிக்க முடியும்அந்த ஆற்றல்எல்லோரிடமும் இருக்கிறதுஇதை உணருங்கள்கடனுக்குக் காரணமானவரையும் ஏமாற்றியவரையும் மீண்டும்மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால்எதிர்மறைஎண்ணங்கள் அதிகமாகும்மனச்சக்தி வீணாகும்அது உங்கள் ஆக்கஅறிவு செயல்படுவதைத் தடை செய்யும். கடன் நினைவுகள் வரும்பொழுதெல்லாம்அதை ஒரு சவாலாகமாற்றுங்கள்எழுந்து நில்லுங்கள்உங்களால் ஜெயிக்க முடியும்!

(என்னுடைய தோல்வியிலிருந்து வெற்றிக்கு நூலில் இன்னும் பல விளக்கங்கள் உள்ளன)
கடன் அதிகமாய் இருந்தால்வட்டி அதிகம் கட்ட வேண்டியது வந்தால்உங்களது சொத்துக்களை விற்றும் கட்டுங்கள்.சமுதாய அந்தஸ்து என்றபோலி கௌரவம் பார்க்க வேண்டாம்கடன்களைக் கட்டியபிறகு மனச்சிக்கல் இல்லாமல்உற்சாகமாகத் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள்பணம் வந்துவிட்டால் எல்லா மதிப்பும் தானே வந்துவிடும்.

கடன் பட்டதற்குப் பிறகு சிலர் கடன் கொடுத்தவர்களை சந்திக்கப் பயந்து கொள்வர்சொன்ன தவணைக்கு கொடுக்கமுடியுமோமுடியாதோஎன்னாகுமோ என்ற மன உளைச்சலில் இருப்பர்.நீங்கள் 5ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 5ம் தேதி உங்களால் கொடுக்க முடியாதசூழ்நிலை ஏற்படுமானால், 4ம் தேதியே கடன் கொடுத்தவரைச் சந்தித்து நிலையை விளக்கி விடுங்கள்மீண்டும்திருப்பிக் கொடுக்க சற்று அவகாசம் வாங்கி வாருங்கள்இதனால் கடன் கொடுத்தவர் சற்று சங்கடப் பட்டாலும் அதுபிரச்சனையாகாது.

ஆனால் 5ம் தேதி பணம் இல்லை என்று பிரச்சனையில் போகாவிட்டால்அவர் 6ம் தேதி உங்களை சந்திக்க வந்தால்வரும்போது எப்படி வருவார்அது உங்களுக்கே தெரியும்ஆகவேசிங்கத்தை அதன் குகையிலேயே சென்றுசந்தியுங்கள். மீண்டும்மீண்டும் எண்ணுங்கள்பணத்தை சம்பாதித்துக் கடனைக் கட்டியே தீருவேன் என்றுசெயல்படுங்கள்உங்களால் முடியும்!

கடனிலிருந்து விடுபடும் பயிற்சி
Think Yourself Rich என்றநூலில் டாக்டர் ஜோசப் மர்ஃபி கூறுகிறார்.

அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள்மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள்பணம் உங்களுக்குநிறையக் கிடைப்பது போலவும்அதை எடுத்துச் சென்று கடன் கொடுத்தவரிடம் கொடுப்பது போலவும்அவர்மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்வதைப் போலவும்நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டுநிம்மதி சந்தோசத்துடன் வீடுதிரும்புவது போலவும் போன்ற காட்சிகளை மனத்திரையில் பாருங்கள்இப்பொழுது கண்களை விழித்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பயிற்சியைக் காலையிலும்மாலையிலும் செய்து வரவர இந்தக் காட்சிகள் மேல் மனதிலிருந்து உள் மனத்தில்பதிந்து வெற்றியாக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனைகளைச் செய்து விட்டுத் தொடர்ந்து செயல் புரியுங்கள்.வாழ்த்துக்கள்!
கடனை வசூலிக்கும் முறைகள்
1.    கடன் பெற்றபணத்தை என்றைக்குத் திருப்பித் தருகிறார்கள் என்று கேட்டு நாளைக் குறித்துக் கொள்ளவும்அந்தநாளில் சரியாக அவர்களிடம் கேட்கவும்மாறாகஇந்தப் பணம் வராதுஇவர் திருப்பிக் கொடுக்க மாட்டார்என்றஅனுமானத்தில்கேட்காமல் விடக்கூடாது.
ஒருமுறைT.V. பேட்டியில் ஒரு Finance சொன்னார்நம் முன்னோர்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பது பற்றிபழமொழி ஒன்றைக் கூறியுள்ளார்கள்கறக்காத பாலும்கேட்காத கடனும் திரும்ப வராது அதேபோலக் கொடுத்தகடனைக் கேட்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பணம் திரும்பிவரும்.

2.    “இப்படிக் கடனை வாங்கித் திரும்பக் கொடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக் கிறார்களேஇப்படி இருந்துகொண்டிருக் கிறார்களே என்று எரிச்சலடையாமல் அவரை சபிக்காமல் கீழ்க் கண்டவாறு அவர்களை வாழ்த்தவேண்டும்.

நம்மிடம் பணம் வாங்கியவரை மனதில் கொண்டு வந்து அவரிடம் செல்வம் பெருக வேண்டும்அவர் பணத்தைதிருப்பிக் கொடுக்கும் நிலையை அடைய வேண்டும்அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று தினமும்வாழ்த்துங்கள்இந்த வாழ்த்து எண்ண அலைகள் அவருடைய மனதில் பதிந்துபணம் சம்பாதிக்கும் எண்ணங்களைத்தூண்டி செயல்படுத்த வைத்துபணத்தைத் திருப்பிக் கொடுக்க வைக்கும்நல்ல எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

இந்தப் பயிற்சி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்திற்கு அளித்த மாபெரும் பரிசு.வசூல் செய்யும் மனக்காட்சிப் பயிற்சி ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்கஒவ்வொரு முறையும்வசூல் செய்யப் போகும் முன்பும் இந்தப் பயிற்சியைக் செய்துவிட்டுப் போகவும்.
அமைதியாக அமர்ந்து கொள்ளவும்கண்களை மூடிக்கொள்கமூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்க. 10லிருந்து 1வரை தலைகீழாக எண்ணிக்கொள்கஇப்பொழுது மனக்காட்சியில் உங்களிடம் கடன் வாங்கியவருடைய உருவத்தைக்கொண்டு வருக.

நீங்கள் அவரிடம் செல்வது போலவும்அவரிடம் பணம் கேட்பது போலவும்அவர் சந்தோசமாக பணத்தை எடுத்துக்கொடுத்து விடுவது போலவும்நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்த்துச் சொல்லி திரும்புதல் போலவும்காட்சிகளை மனத்திரையில் பார்க்கவும்பின் மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளவும்.

இந்தப் பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்யும் பொழுதுஆழ்மனத்தில் பதிந்து அது நடைமுறையில் சாத்தியமாகும்சூழ்நிலை உருவாகும். இன்னொன்று எதை எதிர்பார்க் கிறோமோ அதுவே நடக்கிறதுஎதிர்பார்ப்பு விதி (Law of Expectation) அதைத்தான் சொல்லுகிறது. கொடுத்தது திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும் பொழுது அந்தப்பணம் திரும்பி வரும்இப்பொழுது செய்த மனக் காட்சிப் பயிற்சி அந்தநம்பிக்கையை பலப்படுத்தும்.

பணத்தைக் கேட்கும் முறை

கொடுத்த பணத்தைக் கேட்கப் போகும் பொழுதுபணம் வசூலாகாத பட்சத்தில் திரும்பி வருவதற்கு முன்பு சிலர்கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர்.

எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சுநீ கொடுக்க மாட்டேஇந்தப் பணம் போனது போனதுதான்இனிமேல் எனக்குஉங்கள் மேல் நம்பிக்கை இல்லைநீ அநியாயமா ஏமாத்தறஇப்படியெல்லாம் செய்தால் நீ உருப்படமாட்ட.இவ்வாறு சொல்லக்கூடாதுஆனால் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

உங்களை நம்பித்தான் கொடுத்தேன்அடிப்படையில் நீங்கள் ரொம்ப நல்லவர்அடுத்தவர் காசை ஏமாற்றும் எண்ணம்உங்களுக்குக் கிடையாதுஅது எனக்கு நன்றாகத் தெரியும்அப்போதைக்கு உங்கள் தேவைக்கு உதவத்தான்கொடுத்தேன்ஆனால்இப்பொழுது பணம் எனக்கு மிக அவசரத் தேவையாக இருக்கிறதுபணத்தை வாங்கியஉங்களுக்குப் பொறுப்பு இருக்கிறதுநாணயம் காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறதுஆகவே,இதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்நீங்கள் நிச்சயம் சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள் என்று100% நம்பிக்கைக் கொண்டு எதிர்பார்க்கிறேன்நம்புகிறேன்நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நிலைமைக்கு பணம்உங்களுக்கு வருவதற்கு நல்வாழ்த்துக்கள்!

ஆகவேநண்பர்களேஇவ்வாறு கடனைக் கேட்டுவிட்டுத் திரும்பிவரும் போது சொல்கிறசொற்கள் உடன்பாட்டுச்சொற்களாக நல்ல எதிர்பார்ப்புடன் சொல்லிவிட்டு வரவேண்டும்.

யாரை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே ஆகிறார்கள்நாம் இவ்வாறு பெருந்தன்மையுடன்நடத்தும்பொழுது பணம் அவர்களுக்கு வருகிறகால கட்டத்தில் முதலில் நமக்குக் கொடுப்பார்கள்.

பணம் வசூலாகாவிட்டால்

மேற்கூறிய பணத்தை வசூலிக்கும் முறைகள் அனைத்தையும் உபயோகித்தும் பணம் வசூலாகாவிட்டால் கவலைப்படவேண்டாம்நீங்கள் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணம் வீண் போகாதுவேறொரு ஏதேனும் ஒரு ரூபத்திலோ,தொழில் வாய்ப்பாகவோ திரும்பி விடும்.

ஏனென்றால் சில அடிப்படைப் பிரபஞ்ச நியதிகளின் படி இந்த உலகம் இயங்குகிறதுஒருவர் உழைத்த உழைப்பினால்சேர்த்த பணம் எந்த வகையிலும் வீண் போகாதுபணமாக வராவிட்டாலும்அது வேறு ஏதேனும் நன்மையாகவாவதுமாறும்ஓர் உதாரணத்திற்கு உங்கள் உடல் நலம் அல்லது சந்ததியாருக்கு நன்மை இப்படி ஏதேனும் ஒருவகையில்திரும்பக் கிடைக்கும்ஆகவேஇழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் அதையே எண்ணி மனம் சோர்வடையாமல்தொடர்ந்து அவர்களுக்குத் திரும்பச் செலுத்த போதிய அவகாசம் கொடுங்கள்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள்இழந்தது 5 இலட்சம்ஆனால் 50 இலட்சம் சம்பாதிப்பேன்அது என்னால் முடியும்என்று இழந்த நினைவு வரும்போதெல்லாம்ஏமாற்றப்பட்ட நினைவு வரும் போதெல்லாம் அதைச் சவாலாகமாற்றுங்கள்வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment