இறைவனின்
படைப்பில் சில விசயங்கள் ஆச்சரியபடுத்துகின்றன.
ஒரு ஆணின் மனம் எப்போதெல்லாம்
உற்சாகப்படுகிறது,சந்தோசப்படுகிறது,மனம் கொண்டாட்டம் போடுகிறது
என நாம் கவனித்து பார்த்தால்
அவன் நினைத்தது நடக்கும் போது மட்டும் மனம்
கொண்ட்டாட்டம் போடுவதில்லை அதற்கு பின் ஒரு
பெண்ணும் இருக்கிறாள்.
ஆணின் இயக்கமே பெண்ணை சார்ந்துதான்
இருக்கிறது.ஒரு ஆணின் இயக்கத்திற்கு
பெண்தான் அச்சாணி.ஒரு ஆணின்
வெற்றிக்கு,செயலுக்கு பின்னாலும் பெண்ணின் பங்களிப்பு அதிகம்.தன் தாயாக
இருக்கலாம்,மனைவியாக இருக்கலாம்,தோழியாக இருக்கலாம்,காதலியாக
இருக்கலாம்,அல்லது நமக்கு அறிமுகமாகாத
பெண்ணாக கூட இருக்கலாம்.
உடலும்,மனமும் களைத்து போய்
பஸ்ஸில் பயணம் செய்யும் ஆண்,அதே பஸ்ஸில பயணம்
செய்யும் ஒரு அறிமுகமில்லாத அழகான
பெண்ணின் அன்பான பார்வை அவன்
மனதை கொண்டாட்டம் போட வைத்து உற்சாகம்
ஆக்கிவிடுகிறது..
இப்படி
வாழ்வில் ஓவ்வொரு கட்டங்களிலும் ஒரு
ஆண்மகனை இயங்க வைப்பது பெண்ணின்
பார்வையாக இருக்கலாம்,பேச்சாக இருக்கலாம்,ஆதரவாக
இருக்கலாம்,சவாலாகக்கூட இருக்கலாம்.
சலனமில்லாத
பேச்சும்,வக்கிர குணமில்லாத மனதும்,காமம் இல்லாத நட்புடனும்
ஒரு பெண்ணிடம் பழகி பாருங்கள், தாயாகவும்,
சகோதரியாகவும்,தோழமையாகவும் இருப்பார்.உங்கள் இயக்கமும்,செயலும்
எப்போது உற்சாகமாக இருக்கும்.
No comments:
Post a Comment