வைரமுத்து மணி விழா கவிஞர்கள் திருநாள்
"வயதோ அறுபது... வாலிபமோ இருபது... நோபல் பரிசுதான் இனி வருவது...!" - 60 வயதை தொட்டு விட்ட கவிஞர் வைரமுத்து, கோவையில் தனது மணி விழாவை நேற்று கோலாகலமாக கொண்டாடியபோது அவருக்கு விழுந்த பாராட்டு மழையில் ஒரு துளிதான் இது.
வைரமுத்துவுக்காக அவரது மணி விழாவினை கவிஞர்கள் திருநாள், கலை இலக்கிய திருவிழாவாக கோவையில் கொண்டாடியது வெற்றித்தமிழர் பேரவை. இரு தினங்கள் கோவையில் கவிஞர்களும், எழுத்தாளர்களும், உலகத்தமிழர்களும் வைரமுத்து வாழ்த்து பாடினார்கள்.
ஒரு கவிஞருக்காக இத்தனை பேர் கூடுவார்கள் என்பதே விழாவின் வெற்றி. விழாவின் முதல்நாளான 12ம் தேதி தமிழ் நடை பேரணி நடக்கும் என அறிவிக்க, மாணவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பல்லாயிரம் பேர் திரண்டனர். இடைவிடாது தூறிய மழையையும் துளியும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி, தமிழ் நடை போட்டது ஒட்டுமொத்த கூட்டமும்.
மறுநாள் காலை கோவை கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருநாளாய் தொடர்ந்தது மணி விழா. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என வரிசையாக அலங்கரித்த ஓவியங்களில் அவர்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் வைரமுத்து ஓவியம் இடம்பெற்றிருக்க பிரம்மாண்டமாய் இருந்தது மேடை.
துவக்க நிகழ்வாக நடந்த கருத்தரங்கத்தில் அப்துல் கலாம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா, மலேசியா அமைச்சர் டத்தோ சரவணன் ஆகியோர் பேச, அதைத்தொடர்ந்து உலகத்தமிழர் வாழ்த்தரங்கம், படைப்பரங்கம், கலையுலக வாழ்த்தரங்கம் என நாள் முழுவதும் நடந்த அரங்குகளில் வைரமுத்துவும், அவரின் படைப்புகளும் சிலாகிக்கப்பட்டன. இரவு கலையுலக வாழ்த்தரங்கத்தில் பங்கேற்க இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் மேடையேற பரபரத்தது கூட்டம்.

முதலில் பேசிய மணிரத்னம், "வைரமுத்துவின் "நான் பாடும்... மெளனராகம் கேட்டதில்லையா..."ங்கற பாட்டுல இருந்துதான் எனக்கு மெளனராகம் அப்படீங்கற டைட்டிலே கிடைச்சது. அதுக்கு அப்புறம் ரோஜாவுலதான் நாங்க முதன் முதலா சேர்ந்து வேலை பாத்தோம். இங்கே வைரமுத்துவை நான் வாழ்த்த வரலை. அவர்கிட்ட வேண்டிக்க வந்திருக்கேன். இப்போ தமிழ் சினிமாவுல இருக்கற பாடலாசிரியர்கள்ல அவரோட பாதிப்பு இல்லாத பாடலாசிரியர்கள் இல்லை. அது மட்டும் போதாது. தமிழ் பாடலுக்கும், தமிழ் கவிதைக்கும் உள்ள இடைவெளியை முழுமையாக மறைச்சுடணும்," என முடித்தார்.
"கண்ணதாசனுக்கு பின்பு நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் வைரமுத்து. எங்களது தயாரிப்பான ரோஜா படத்தில இவர் பாடல் எழுதட்டும்னு மணிரத்னம்கிட்ட அழைச்சுட்டு போனேன். அப்போ யோசிச்சார் மணிரத்னம். இப்போ அவரோட எல்லா படத்துக்கும் இவர்தான் பாட்டு எழுதறார். அந்தளவுக்கு எல்லோருக்கும் பிடிச்ச கவிஞர் வைரமுத்து," என்றார் பாலச்சந்தர்.
அடுத்து பாரதிராஜா மைக் பிடிக்க பரபரத்தது கூட்டம். "ஒரு விஷயத்தை பகிரங்கமாக சொல்லி விட்டு பேசுகிறேன். ஒலி பெருக்கி முன்னால் பேசும்போது, நிறைய பொய் பேசி இருக்கிறேன். எவ்வளவு அதிகமாக பொய் பேசி இருக்கிறோமோ, அவ்வளவு அதிகம் கை தட்டல் கிடைத்திருக்கிறது. வெளிப்படையாக பேசினால் நான் விமர்சிக்கப்படுவேன். அதனால் சமீபகாலமாக நான் எந்த நிகழ்ச்சியிலும் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை நான் நிராகரிக்க முடியவில்லை.

இந்த மேடையில் நான் பயப்படாமல் ஒருவனை நான் விமர்சிக்க முடியும் என்றால் அது வைரமுத்துவைத்தான். என்னதான் மிகப்பெரிய இலக்கியவாதியாக இருந்தாலும், சிறந்த எழுத்தாளனாக இருந்தாலும் ஊடகத்தின் மூலமாகத்தான் அவன் வெளிப்பட முடியும். வைரமுத்து என்ற மகா கவிஞன், திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால், அவரது இலக்கியங்கள் அடையாளம் காணப்படாமல் போய் இருக்கும். 'என்னை தங்க கூண்டில் அடைத்து விட்டார்கள்' என்கிறார் வைரமுத்து. தங்க கூண்டில் உன்னை வைத்ததால்தான் உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.
நான் அறிமுகப்படுத்தியவன் என்ற தகுதியை விட, சுயம்புவாக உன்னை நீயே வளர்த்துக்கொண்டாய் அதுதான் உன் தகுதி. விதைத்தவன் யார் என்பது முக்கியமல்ல.விதை வீரீயமாக இருக்கிறதா, நிலம் பண்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்த விதை வீரியமுள்ள விதை என்பதால் தான், விருட்சமாக நிற்கிறது.
வைரமுத்து என்னை சந்தித்த நாட்கள் இருக்கிறதே..பெரிய திமிர் அவனுக்கு. என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவன், 'புத்தகத்தை கொடுத்து, என்னை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றான். உன் புத்தகத்தை விமானத்தில் படித்தேன் என்றபோது, உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில் இருந்துதான் படிக்க முடியும் என்றான். எனக்கு அவன் தண்ணி வண்டினு பேர் வைச்சிருக்கான். தண்ணி வண்டி தடுமாறாது. அதே மாதிரி எந்த இடத்திலும் நான் தடுமாறுவதில்லையே. கவிஞர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
எனக்கும், அவனுக்கும் கருத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆனால் அது கருத்தில் மட்டும்தான். அவன் கெட்டிக்காரன். எழுத்தில் எவ்வளவு வலிமையாக செயல்படுகிறானோ. அதே போல் செயலிலும் வலிமையாக செயல்படுகிறான். அற்புதமான மூலிகை, மனிதனை தேடிப்போவதில்லை. மூலிகையை தேடித்தான் மனிதர்கள் போவார்கள். நீங்கள் வைரமுத்துவை தேடி வந்திருக்கிறீர்கள்," என பேசி முடித்தார்.
இறுதியாக ஏற்புரை வழங்கிய வைரமுத்து, பாரதிராஜாவுக்கு பதில் அளித்து பேசத்துவங்கினார். "நான் பொய் சொல்வதை நிறுத்தி விட்டேன் என்கிறார் பாரதிராஜா. வாழ்க்கை சின்ன சின்ன பொய்களால்தான் இயங்குகிறது. உங்கள் படம் போல் எடுக்க இனி ஆளில்லை என்ற பொய்தான் உங்களை வாழ வைக்கிறது. என்னை பாராட்டிய வார்த்தைதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
என்னை சுயம்பு என்றீர்கள். வீரிய வித்து என்றார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு விதை முளைக்க மண், காற்று, வெப்பம், நீர் நான்கு காரணிகள் தேவை. விதை முளைக்க எத்தனை காரணிகள் தேவை?
திமிர் பிடித்தவனா இந்த வைரமுத்து? என்னை விட எளிமையானவன் உண்டா? தன்னம்பிக்கைக்கு பெயர் திமிர் என வைப்பதா? புதிய வார்ப்புகள் பார்த்து மிரண்டேன். பாரதிராஜாவை பார்த்து ஒன்று சொன்னேன். 'உங்கள் படத்தில் எல்லாம் மாறி இருக்கிறது. திரைப்பாட்டு மொழியை தவிர. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அதை மாற்றிக்காட்டுவேன்' என்றேன்.

உடனே என்னை அழைத்தார். இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். என்ன இவன் பாட்டு எழுதுவானா? என இளையராஜா கேட்டபோது, 'பாப்போம்டா.. இருடா' என உரிமையோடு பேசினார். அந்த வாடா, போடா உரிமையை வேலையிலும் பயன்படுத்துவதுதான் தப்பு. அறையில் பயன்படுத்துவது அன்பு. வேலையில் பயன்படுத்துவது வம்பு," என வைரமுத்து பேசிக்கொண்டிருக்க, இடையில் மைக் பிடித்த பாரதிராஜா, "உங்களைப்போல தமிழில் பேச என்னால் முடியாது. நான் பாமரன். எனக்கு தெரிந்த தெரிந்த உண்மையை சொன்னேன். அவ்வளவுதான். வருகிறேன்" என சொல்லி விட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து பேசிய வைரமுத்து, "பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா என்பவர்கள் வேறு வேறு தாய் பெற்ற 3 சகோதரர்கள். என்னை கொண்டாட வேண்டுமென்றால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னமும்தான்.
சினிமாவில் பாடாலாசிரியர்கள் சிறுபான்மையின சாதி. கடைசியில் தேவைப்படுகிறான். அவன் முக்கியம் என அவனே நினைத்துக்கொள்கிறான். முக்கியமில்லை என சினிமா நினைக்கிறது. நான் முக்கியமானவன் என நிரூபிக்க 34 ஆண்டுகள் போராடினேன்.

பாலச்சந்தரை நான் மறக்கவே முடியாது பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நான், சில ஆண்டுகளில் ஒரு சிக்கலை சந்தித்தேன். என்னை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சியில் சிக்கி, தனித்து விடப்பட்டேன். அப்போது பாலச்சந்தர் 3 படங்கள் தயாரித்தார். அந்த 3 படங்களிலும் நான்தான் பாடலாசிரியர். 3 படங்களும் தோற்றால் வடுகபட்டிக்கு சென்று விவசாயம் பார்க்கப்போகிறேன் என்றேன். 3 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரோஜா மூலம் ஏ.ஆர்.ரகுமான் எனும் மிகச்சிறந்த இசையமைப்பாளர் கிடைத்தார். அவரைக்கொண்டு பல சாதனைகள் படைத்தோம். பாண்டிய நாட்டில் பிறந்த எனக்கு கொங்கு நாடு விழா எடுக்கிறது. விழா எடுத்தவர்களுக்கு நன்றி," என பேசி முடித்தார்.
நன்றி - news.vikatan.com
No comments:
Post a Comment